மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 82
வேதாகமப் பகுதி : மாற்கு 10
முடிவுத் திகதி : 2020-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. "கணவன் தன் மனைவியை விலக்கி விடுவது முறையா?" என்று கேட்டு இயேசுவை சோதித்தவர்கள் யார்?

பரிசேயர்
சதுசேயர்
மறைநூல் அறிஞர்கள்
சீடர்கள்
மக்கள்

2. "உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே அவர் இக்கட்டளையை எழுதி வைத்தார்." இதைக் கூறியவர் யார்? இதில் "அவர்" என்று குறிப்பிடப்படுவது யாரை?

கடவுள்
இயேசு
ஆபிரகாம்
மோசே
எலியா

3. சிறுபிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று இயேசுவிடம் கொண்டு வந்தவர்களை சீடர்கள் அதட்டினர். அதற்கு இயேசு கூறியது என்ன?

சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள்
அவர்களைத் தடுக்காதீர்கள்
ஏனெனில் இறையாட்சி இத்தகையோருக்கே உரியது
இறையாட்சியைச் சிறுபிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார்
சீடர்கள் சொன்னதை இயேசு ஒப்புக்கொண்டார்

4. கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும் என்று இயேசு கூறியவுடன் சீடருக்கு வீட்டில் மீண்டும் கூறியது என்ன?

தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் அவருக்கு எதிராக விபச்சாரம் செய்கிறான்
மணவிலக்கு சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம்
ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் தவறில்லை
ஒற்றுமையுடன் வாழலாம்
தன் கணவரை விலக்கிவிட்டு வேறொருவரை மணக்கும் எவளும் விபசாரம் செய்கிறாள்

5. இறையாட்சியை -------------- ஏற்றுக்கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

இயேசுவைப்போல்
பனித்துளிப்போல்
வானதூதரைப்போல்
சிறுபிள்ளையைப்போல்
ஆண்டவரைப்போல்

6. நல்ல போதகரே நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டதற்கு இயேசு கூறியது என்ன?

நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்?
கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே
உமக்கு கட்டளைகள் தெரியும் அல்லவா? கொலை செய்யாதே
விபச்சாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே
வஞ்சித்து பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட

7. போதகரே! இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன் என்று கூறியதற்கு இயேசு கூறியது?

உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது
நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்
அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்
பின்பு வந்து என்னை பின்பற்றும்
அது உன் விருப்பம்


8. சீடர்களை திகைப்புக்குள்ளாக்கிய இயேசுவின் வார்த்தைகள் யாவை?

ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது
சிறுபிள்ளைகளை இயேசு தொட்டு ஆசீர் அளித்தார்
செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம் என்றார்
செல்வர் முகம் வாடி வருத்தத்துடன் சென்று விட்டார்
செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது என்றார்

9. யார்தாம் மீட்பு பெறமுடியும் என்று சீடர்கள் கூறியதற்கு இயேசுவின் பதில் என்ன?

யாராலும் இயலாது
மனிதரால் இது இயலாது
ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல
கடவுளால் எல்லாம் இயலும்
எல்லா மனிதராலும் இயலும்

10. பாரும். நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே! என்ற பேதுருவிடம் இயேசு கூறியது என்ன?

உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்
என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக பெறுவர்
மறுமையில் நிலைவாழ்வையும் பெறுவர்
முதன்மையானோர் பலர் கடைசி ஆவர். கடைசியானோர் முதன்மையாவர்
எதையும் பெறமாட்டார்

11. இயேசு தம் சாவை முன்னறிவித்தது எப்பகுதியில் இடம்பெற்றுள்ளன?

மாற்கு 10: 32-34
யோவான் 12:13-14
லூக்கா 18: 31-34
மாற்கு 12: 1-10
மத்தேயு 20:17-19

12. செபதேயுவின் மக்கள் யாவர்?

பேதுரு
ஸ்தேவான்
தோமா
யாக்கோபு
யோவான்

13. தலைவர்களைப்பற்றி இயேசு கூறியது என்ன?

பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள்.
அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்
ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக்கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும்
உங்களுள் முதன்மையானவராக் இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும்
ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல; மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைகொடுப்பதற்கும் வந்தார் என்று கூறினர்.

14. பர்த்திமேயு – சிறுகுறிப்பு வரைக

பார்வையற்றவர்
இவரின் தந்தையின் பெயர் திமேயு
பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்
எரிக்கோ நகரைச் சேர்ந்தவர்
"இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்" என்று இயேசுவை நோக்கி கத்தினார்

15. பார்வையற்ற பர்த்திமேயு "ரபூனி, நான் மீண்டும் பார்வை பெற வேண்டும்" என்றவரிடம் இயேசு கூறியதும் நடந்ததும் என்ன?

நீர் போகலாம்
உமது நம்பிக்கை உம்மை நலமாயிற்று
பார்வை பெற்று அவரை பின்பற்றி அவருடன் வழிநடந்தார்
பார்வை பெறவில்லை
பார்வை பெற்று வீட்டிற்கு சென்றார்