மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 81
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 9
முடிவுத் திகதி : 2020-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் இருந்த சீடர்கள் யார்?

பேதுரு
அந்திரேயா
யாக்கோபு
தோமா
யோவான்

2. “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” – இது யார் கூற்று?

பேதுரு
பவுல்
இயேசு
அன்னை மரியா
சீடர்கள்

3. “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்.” இதற்கு இயேசுவின் பதில் என்ன?

தடுக்க வேண்டாம்.
ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.
ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
அவர்கள் நமக்கு எதிராக இருக்கிறார்கள்

4. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வு எங்கே இடம்பெற்றுள்ளது?

மாற்கு 10:2-10
மாற்கு 9:2-13
மத்தேயு 17:1-13
லூக்கா 9:28-36
லூக்கா 8:28-36

5. இயேசு தோற்றம் மாறுதல் நிகழ்வில் தோன்றிய இறைவாக்கினர்கள் யாவர்?

பேதுரு
அந்திரேயா
பிலிப்பு
எலியா
மோசே

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக --------------------- அமைப்போம்”

ஒரு கூடாரத்தை
இரண்டு கூடாரங்களை
மூன்று வீடுகளை
மூன்று கூடாரங்களை
நான்கு கூடாரங்களை

7. இயேசு தோற்றம் மாறியபோது மேகத்திலிருந்து கேட்டது என்ன?

என் அன்பார்ந்த மைந்தர் இவரே
இவருக்குச் செவிசாயுங்கள்
மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது.
ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது
உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்.


8. இயேசு சீடர்களுக்கு எலியா பற்றி கூறியது என்ன?

எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே.
ஆனால், மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?
ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார்.
அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள்.
அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, ------------------------- என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

இயேசு
இறந்து உயிர்த்தெழுதல்
சீடர்கள்
உயிர்த்தெழுதல்
இறப்பு

10. தீய ஆவி பிடித்திருந்த சிறுவன் நலமாதல் புதுமை எங்கே இடம்பெற்றுள்ளது?

மாற்கு 9:14-32
மாற்கு 9:2-13
மத்தேயு 17: 1-13
மத்தேயு 17:14-20
லூக்கா 9:37-43

11. தீய ஆவி பிடித்திருந்த சிறுவனின் தந்தை இயேசுவிடம் வேண்டியது என்ன?

போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.
அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது.
அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்
உடம்பும் விறைத்துப்போகிறது.
அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை

12. இயேசு தீய ஆவியை எவ்வாறு அதட்டினார்?

ஊமைச் செவிட்டு ஆவியே,
உனக்குக் கட்டளையிடுகிறேன்;
இவனை விட்டுப் போ;
இனி இவனுள் நுழையாதே
ஓ பரிசுத்த ஆவியே

13. இயேசு தன் சாவை எவ்வாறு முன்னறிவிக்கிறார்?

மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்
அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள்.
கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்
“நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?” 
தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.

14. யார் மிகப் பெரியவர் என்ற சீடர்களின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?

இயேசுவே மிகப் பெரியவர்
கடவுளே மிகப் பெரியவர்
ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்
பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு, “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்.
என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்.

15. சிறியோரை பாவத்தில் விழச்செய்வோருக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று இயேசு கூறுகிறார்?

என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
தூக்கிலிடப்படவேண்டும்
சிறையிலடைக்கப்படவேண்டும்
உணவளிக்கக்கூடாது
கொல்லப்படவேண்டும்