மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 80
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 7, 8
முடிவுத் திகதி : 2020-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யூதர்கள் கடைபிடித்த மரபு என்ன?

பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை
சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர்.
அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
யூதர்கள் கைகளை முறைப்படி கழுவி உண்பதில்லை
யூதர்களுக்கு தூய்மை மரபுகள் எதுவும் இல்லை

2. "உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?" இது யார் கூற்று?

இயேசுவின் சீடர்கள்
இயேசு
பரிசேயர்கள்
மறைநூல் அறிஞர்கள்
பேதுரு

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

அவ்வாறே -----------------, -------------------, --------------------- ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.

கிண்ணங்கள்
பரணிகள்
தங்கம்
செம்புகள்
துணிகள்

4. “உன் தந்தையையும் தாயையும் மதித்துநட” – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

மாற்கு 7:10
விடுதலைப் பயணம் 20:12
லேவியர் 20:9
இணைச்சட்டம் 5:16
விடுதலைப்பயணம் 21:17

5. வெளிவேடக்காரர்களுக்கு எசாயாவின் எச்சரிக்கை என்ன?

இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்.
இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது.
மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர்.
இவர்கள் என்னை வழிபடுவது வீண்
சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர்

6. "வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப் படுத்தும்." – இது யார் கூற்று?

பரிசேயர்
இயேசுவின் சீடர்கள்
மறைநூல் அறிஞர்கள்
இயேசு
மரியா

7. கோடிட்ட இட்த்தை நிரப்புக:

மனித உள்ளத்திலிருந்தே --------, ------ -----------, -----------, -------------, -----------, -------------, -------------, ----------, ---------------, ----------------, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன.

பரத்தைமை, களவு
கொலை, விபசாரம்
பேராசை, தீச்செயல்
வஞ்சகம், காமவெறி
பொறாமை, பழிப்புரை


8. கிரேக்க, சிரிய, பெனிசியப் பெண் இயேசுவிடம் வேண்டியது என்ன?

தம் மகளின் தொழுநோயை குணமாக்குமாறு வேண்டினார்
தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு வேண்டினார்
தன்னுடைய நோயை குணமாக்குமாறு வேண்டினார்
தனக்கு உணவு வேண்டினார்
எந்த உதவியையும் கேட்கவில்லை

9. உதவி வேண்டிய கிரேக்கப் பெண்ணிடம் இயேசு கூறியது என்ன?

முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும்
பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல
மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே
இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்
இவர்கள் உள்ளமோ என்னை விட்டு வெகு தொலையில் இருக்கிறது

10. “மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” - இதைச் சொன்னவர் யார்?

இவர் கிரேக்கப் பெண்
இவர் சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர்
இவர் தம் மகளிடமிருந்து பேயே ஓட்டிவிடுமாறு இயேசுவை வேண்டினார்
அன்னை மரியா
இயேசு கிறிஸ்து

11. எப்பத்தா என்றால் என்ன?

கையைக் காட்டு
எழுந்து நட
திறக்கப்படு
எழுந்து ஓடு
சென்று தூங்கு

12. காது கேளாதவரும், திக்கிப்பேசுபவருமான நபரை இயேசு எவ்வாறு குணமாக்கினார்?

இயேசு அவரைக் கூட்டத்திலிருந்து தனியே அழைத்துச் சென்றார்
தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டார்
பிறகு வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என்றார்
உடனே அவருடைய காதுகள் திறக்கப்பட்டன; நாவும் கட்டவிழ்ந்தது. அவர் தெளிவாகப் பேசினார்
இதை எவருக்கும் சொல்ல வேண்டாமென்று அவர்களுக்கு அவர் கட்டளையிட்டார்

13. “ஏழு அப்பங்களை நான் நாலாயிரம் பேருக்குப் பிட்டு அளித்தபோது மீதித் துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” - இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?

நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
எட்டு

14. “ஐந்து அப்பங்களை நான் ஐயாயிரம் பேருக்குப் பிட்டு அளித்த போது, மீதியான துண்டுகளை எத்தனை கூடைகள் நிறைய எடுத்தீர்கள்?” இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?

எட்டு
ஒன்பது
பத்து
பதினொன்று
பன்னிரண்டு

15. பார்வையற்றவர் குணமடைந்தவுடன் சொன்னது என்ன?

மனிதரைப் பார்க்கிறேன்
அவர்கள் மரங்களைப் போலத் தோன்றுகிறார்கள்
ஆனால் நடக்கிறார்கள்
எழுந்து நட
திறக்கப்படு