மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 7
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 13-14
முடிவுத் திகதி : 2014-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. விதைப்பவர் உவமையில் இயேசு கூறியவை யாவை?

சில விதைகள் வழியோரம் விழுந்தன
சில விதைகள் மண் இல்லாப் பாறைப்பகுதிகளில் விழுந்தன
சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன
சில விதைகள் தண்ணீரில் விழுந்தன
சில விதைகள் முட்செடிகளின் இடையே விழுந்தன

2. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் எத்தனை மடங்காக பலனை கொடுத்தது?

100
50
60
10
30

3. உவமைகள் வாயிலாக ஏன் பேசுகின்றீர் என்று யார் யாரிடம் கேட்டார்?

இயேசு சீடரிடம்
பரிசேயர் இயேசுவிடம்
யோவான் இயேசுவிடம்
சீடர் இயேசுவிடம்
மக்கள் இயேசுவிடம்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக.
---------------------- கொடுக்கப்படும்; அவர் நிறைவாகப் பெறுவார். மாறாக, ------------------------- உள்ளதும் எடுக்கப்படும்.

உள்ளவர்க்கு, பணக்காரர்களிடமிருந்து
ஏழைகளுக்கு, பணக்காரர்களிடமிருந்து
ஏழைகளுக்கு, இல்லாதவரிடமிருந்து
சீடர்களுக்கு, பரிசேயர்களிடமிருந்து
உள்ளவருக்கு, இல்லாதவரிடமிருந்து

5. எசாயா கூறிய இறைவாக்குகள் எவை?

காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை
கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை
இம்மக்களின் நெஞ்சம் கொழுத்துப்போய்விட்டது
உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள்
நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக.
உங்கள் ------------------- பேறுபெற்றவை; ஏனெனில் அவை ----------------------

காதுகளும், கேட்கின்றன
உள்ளமும், கேட்கின்றன
கண்களோ, காண்கின்றன
கைகள், செய்கின்றன
கால்கள், நடக்கின்றன

7. பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பாவோர் யாவர்?

இறைவார்த்தையை கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்
உலகக் கவலை, செல்வ மாயை உடையவர்கள்
அவர்கள் வேரற்றவர்கள்
அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்
இன்னல் நேர்ந்தவுடன் தடுமாற்றம் அடைவார்கள்


8. விண்ணரசை எந்த உவமை வாயிலாக இயேசு விளக்குகிறார்?

முத்து உவமை
புதையல் உவமை
வலை உவமை
வயலில் தோன்றிய களைகள் உவமை
கடுகு விதை, புளிப்பு மாவு உவமை

9. நல்ல விதைகளை விதைப்பவர் யார்?

மானிடமகன்
பரிசேயர்
வானதூதர்
நேர்மையாளர்
கடவுளின் மக்கள்

10. உலக முடிவில் தீயோரின் நிலை என்ன?

தீச்சூளையில் தள்ளப்படுவர்
கடவுளோடு இருப்பர்
நேர்மையாளரிடமிருந்து பிரிக்கப்படுவர்
அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்
மகிழ்ந்திருப்பர்

11. ஏரோது இயேசுவைப் பற்றிக் கூறியவை என்ன?

இவர் திருமுழுக்கு யோவான்
இறந்த யோவானை கடவுள் உயிர்பெற்றெழச் செய்தார்
இவர் மெசியா
இதனால்தான் இந்த வல்ல செயல்களை இவர் செய்கிறார்
இவரே இறைமகன்

12. அச்சத்தினால் அலறிய சீடர்களிடம் இயேசு கூறியது என்ன?

உங்களுக்கு சமாதானம்
துணிவோடிருங்கள்
நான்தான், அஞ்சாதீர்கள்
ஏன் ஐயம் கொண்டாய்?
வாருங்கள்

13. அப்பம் பலுகியதில் பயனடைந்தோர் யாவர்?

5000 ஆண்கள் மற்றும் பெண்கள்
5000 மக்கள்
5000 ஆண்கள் மற்றும் பெண்கள், சிறுபிள்ளைகள்
5000 பெண்கள், சிறுபிள்ளைகள்
5000 சிறுபிள்ளைகள், பெண்கள்

14. உண்மையாகவே நீர் இறைமகன் என்று கூறியவர் யார்?

பேதுரு
12 சீடர்கள்
கானானியப் பெண்
மரிய மகதலேனா
படகில் இருந்தவர்கள்

15. இயேசு படகேறி மறுகரைக்கு சென்று எந்த பகுதி மக்களின் நோய்களை குணமாக்கினார்?

கானாவூர்
கெனசரேத்து
யெருசலேம்
கடலோர மக்களை
பாலைவன மக்கள்