மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 79
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 6
முடிவுத் திகதி : 2020-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன் தானே! -------------, ---------------, --------------, -------------- ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?

யாக்கோபு
மோசே
யோசே
யூதா
சீமோன்

2. தொழுகைக்கூடத்தில் கற்பித்த இயேசுவைக் கண்டு அதைக்கேட்டு மக்கள் வியப்பில் கூறியது என்ன?

இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?
என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்!
என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்!
இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே!
இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?

3. “சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” – இது யார் கூற்று?

மோசே
அன்னை மரியா
இயேசு
யாக்கோபு
ஆபிரகாம்

4. இருவர் இருவராக பணிக்கு அனுப்புமுன் இயேசு சீடர்களுக்கு அறிவுறுத்தியது என்ன?

பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.
ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்
நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள்.
உங்களை எந்த ஊராவது ஏற்றுக் கொள்ளாமலோ உங்களுக்குச் செவி சாய்க்காமலோ போனால் அங்கிருந்து வெளியேறும் பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.
இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்

5. இயேசுவால் அனுப்பப்பட்ட சீடர்கள் செய்த நற்காரியங்கள் என்ன?

அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்
பல பேய்களை ஓட்டினார்கள்
உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்
வீடுகளுக்குள் சென்று உணவருந்தினர்
நற்காரியங்கள் செய்யவில்லை

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

பயணத்திற்குக் ---------------- தவிர --------------, ----------------, --------------- முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக் கொண்டு போக வேண்டாம்.

பணம்
கைத்தடி
உணவு
பை
இடைக்கச்சையில் செப்புக்காசு

7. இயேசுவின் பெயர் எங்கும் பரவியபோது, மக்கள் அவரை எவ்வாறு அழைத்தனர்?

திருமுழுக்கு யோவான்
மோசே
எலியா
ஆபிரகாம்
இறைவாக்கினர்


8. இயேசுவைப் பற்றி கேள்விபட்டவுடன் ஏரோது கூறியது என்ன?

இவர் கடவுளின் மகன்
இவர் இறைவாக்கினர்
இவர் யோவான்
அவர் தலையை நான் வெட்டச் செய்தேன்
ஆனால் அவர் உயிருடன் எழுப்பப்பட்டு விட்டார்

9. "உம் சகோதரர் மனைவியை நீர் வைத்திருப்பது முறை அல்ல“ – இதில் வரும் சகோதரர் யார்?

யோவான்
ஏரோதியா
பிலிப்பு
சலோமி
ஆபிரகாம்

10. ஏரோதியா - சிறு குறிப்பு வரைக:

பிலிப்பின் மனைவி
பிறகு பிலிப்பின் சகோதரர் ஏரோதுவுக்கு மனைவியானவர்
இவருக்கு ஓர் மகள் இருந்தாள்
திருமுழுக்கு யோவான் மீது காழ்ப்புணர்வுகொண்டாள்
திருமுழுக்கு யோவானைக் கொலை செய்ய விரும்பினாள்

11. ஏரோதியாவின் மகள் ஏரோதிடம் கேட்ட பரிசு என்ன?

தங்கம்
வெள்ளி
சேலை
திருமுழுக்கு யோவானின் தலை
அரண்மனை

12. ஏரோதியாவின் மகள் தன் பிறந்த நாளில் நடனமாடியவுடன் ஏரோது என்ன சொன்னான்?

உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள்
தருகிறேன்
நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே கேட்டாலும் உனக்குத் தருகிறேன்
நான் என்ன கேட்கலாம்
திருமுழுக்கு யோவானின் தலையைக் கேள்

13. "உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கின்றன?" இயேசுவின் இந்த கேள்விக்கு சீடர்களின் பதில் என்ன?

ஐந்து அப்பங்களும் மூன்று மீன்களும்
ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்
ஐந்து அப்பங்கள்
நான்கு மீன்கள்
இரண்டு அப்பங்களும் ஐந்து மீன்களும்

14. அப்பம் உண்ட ஆண்களின் எண்ணிக்கை எவ்வளவு?

3000
4000
5000
6000
7000

15. எஞ்சிய அப்பத் துண்டுகளையும், மீன் துண்டுகளையும் எத்தனை கூடைகள் நிறைய எடுத்தனர்?

ஒன்பது கூடைகள்
பத்து கூடைகள்
பதினோறு கூடைகள்
பன்னிரண்டு கூடைகள்
பதிமூன்று கூடைகள்