1. கெரசேனர் பகுதியைச் சேர்ந்த தீய ஆவி பிடித்தவர் பற்றி விளக்குக?
2. தீய ஆவி பிடித்தவர் இயேசுவைப் பார்த்து உரத்தக்குரலில் சொன்னது என்ன?
3. „தீய ஆவியே, இந்த மனிதரை விட்டுப் போ“ – இது யார் கூற்று?
4. இலேகியோன் – குறிப்பு வரைக:
5. தீய ஆவிகள் வெளியேறி யாருடைய உடலில் புகுந்தன?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: "ஏறக்குறைய ------------------------- அடங்கிய அந்தக் கூட்டம் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து வீழ்ந்து மூழ்கியது."
7. “உமது வீட்டிற்குப் போய் ஆண்டவர் உம்மீது இரக்கங் கொண்டு உமக்குச் செய்ததையெல்லாம் உம் உறவினருக்கு அறிவியும்”. இது யார் கூற்று? யாரிடம் கூறியது?
8. யாயிர் என்பவர் யார்?
9. இந்த ஐந்தாம் அதிகாரத்தில் உள்ள குணமடைந்தோர் யார்?
10. இரத்தப்போக்கினால் வருந்திய பெண்ணைப் பற்றி கூறுக?
11. “மகளே, உனது நம்பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு”. இது யார் கூற்று?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: “அவர் --------, ----------------, யாக்கோபின் சகோதரரான ----------- ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை.“
13. தொழுகைக்கூடத் தலைவரின் வீட்டில் மக்கள் அழுவதைக் கண்டு, இயேசு கூறியது என்ன?
14. தலித்தா கூம் என்றால் என்ன?
15. யாயிர் மகளின் வயது என்ன?