மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 77
வேதாகமப் பகுதி : மாற்கு நற்செய்தி 4
முடிவுத் திகதி : 2020-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. வழியோரம் விழுந்த விதைகள் என்ன ஆயின?

பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன
நன்கு வளர்ந்தன
கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின
நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன
அறுபது மடங்காக விளைச்சலைக்கொடுத்தன்

2. மண் இல்லாப் பாறைப் பகுதிகளில் விழுந்த விதைகள் என்ன ஆயின?

விலங்குகள் தின்றுவிட்டன
நூறு மடங்காக விளைச்சலைக்கொடுத்தன
மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன
ஆனால் கதிரவன் மேலே எழ, அவை காய்ந்து, வேர் இல்லாமையால் கருகிப்போயின
நன்கு வளர்ந்தன

3. முட்செடிகளிடையே விழுந்த விதைகள் என்ன ஆயின?

அறுபது மடங்காக விளைச்சல் கொடுத்தன
முட்செடிகள் வளர்ந்து அவற்றை நெருக்கிவிடவே, அவை விளைச்சலைக் கொடுக்கவில்லை
நன்கு விளைச்சலைக் கொடுத்தன
மண் ஆழமாக இல்லாததால் அவை விரைவில் முளைத்தன.
நன்கு வளர்ந்தன

4. நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் என்ன ஆயின?

அவை முளைத்து வளர்ந்து, சில முப்பது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன
சில அறுபது மடங்காக விளைச்சலைக் கொடுத்தன
சில நூறு மடங்காக விளைச்சலைக் கொடுத்தன
கருகிப்போயின
முட்செடிகள் மீது விழுந்தன

5. விதைப்பவன் உவமை எங்கே காணப்படுகிறது?

மாற்கு 4:1-20
மத்தேயு 4: 1-20
மத்தேயு 13:1-9
லூக்கா 4:1-20
லூக்கா 8:4-8

6. “இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது” – இது யார் கூற்று?

பேதுரு
பவுல்
பரிசேயன்
மக்கள்
இயேசு

7. வழியோரம் விழுந்த விதைகள் யாவர்?

சாத்தானுக்கு ஒப்பானவர்கள்
இயேசுவுக்கு ஒப்பானவர்கள்
மரியாவுக்கு ஒப்பானவர்கள்
இவர்கள் வார்த்தையை கேட்பார்கள்
ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்


8. பாறைப்பகுதியில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?

இவர்கள் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வார்கள்
ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்
சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள்
இறைவார்த்தையின் பொருட்டு இன்னலோ இடுக்கண்ணோ நேர்ந்த உடனே அவர்கள் தடுமாற்றம் அடைவார்கள்
நல்ல விளைச்சலை தருவார்கள்

9. முட்செடிகளுக்கு இடையில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?

இவர்கள் இறைவார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் ஏனைய தீய ஆசைகளும் உட்புகுந்து அவ்வார்த்தையை நெருக்கி விடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள்
ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்
சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள்
இவர்கள் வார்த்தையை கேட்பதில்லை
ஆனால் அதைக் கேட்டவுடன் சாத்தான் வந்து அவர்களுள் விதைக்கப்பட்ட வார்த்தையை எடுத்துவிடுகிறான்

10. நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகள் யாவர்?

இவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக்கொண்டு பயன் அளிப்பார்கள்
இவர்களுள் சிலர் முப்பது மடங்காக பயன் அளிப்பர்
இவர்களுள் சிலர் அறுபது மடங்காக பயன் அளிப்பர்
இவர்களுள் சிலர் நூறு மடங்காக பயன் அளிப்பர்
சிறிது காலமே நிலைத்திருப்பவர்கள்

11. இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்?

கடுகு விதைக்கு ஒப்பாகும்
முளைத்துத் தானாக வளரும் விதைக்கு ஒப்பாகும்
கடலுக்கு ஒப்பாகும்
காற்றுக்கு ஒப்பாகும்
அருவிக்கு ஒப்பாகும்

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“--------------------- கொடுக்கப்படும்; ------------------------ உள்ளதும் எடுக்கப்படும்”

உள்ளவருக்கு
இயேசுவுக்கு
மரியாவுக்கு
இல்லாதவரிடமிருந்து
சீடருக்கு

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“முதலில் -------------, பின்பு --------------, அதன்பின் கதிர் நிறைய --------------- என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது.”

சீடர்
கடுகு
தளிர்
கதிர்
தானியம்

14. விளக்கு உவமையில் இயேசு சீடர்களிடம் கூறியது என்ன?

விளக்கைக் கொண்டு வருவது எதற்காக?
மரக்காலின் உள்ளேயோ கட்டிலின் கீழேயோ வைப்பதற்காகவா?
வெளிப்படாது மறைந்திருப்பது ஒன்றுமில்லை
வெளியாகாமல் ஒளிந்திருப்பது ஒன்றுமில்லை
கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்

15. “இரையாதே, அமைதியாயிரு” – இவ்வாறு இயேசு யாரிடம் கூறினார்?

சீடரை நோக்கிக் கூறினார்
விதையை நோக்கிக் கூறினார்
கடலை நோக்கிக் கூறினார்
மரியாவை நோக்கிக் கூறினார்
தந்தையை நோக்கிக் கூறினார்