1. வீட்டின் கூரையை உடைத்துத் திறப்பு உண்டாக்கி இயேசுவிடம் கொண்டுவரப்பட்டவர் யார்?
2. “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” – இது யார் கூற்று?
3. இயேசு முடக்குவாதமுற்றவரை குணமாக்கியவுடன் மறைநூல் அறிஞர்கள் தங்கள் உள்ளத்தின் எண்ணியது என்ன?
4. இயேசு மறைநூல் அறிஞர்களை நோக்கி கூறியது என்ன?
5. எந்த ஊரில் இயேசு முடக்குவாதமுற்றவரை குணமாக்கினார்?
6. “நீ எழுந்து உன்னுடைய படுக்கையை எடுத்துகொண்டு உனது வீட்டுக்குப் போ” – இயேசு யாரைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்?
7. லேவி – சிறுகுறிப்பு வரைக:
8. கோடிட்ட இடத்தை நிரப்புக: “இவர் --------------------- -------------------------- சேர்ந்து உண்பதேன்?”
9. “யோவானுடைய சீடர்களும் பரிசேயருடைய சீடர்களும் நோன்பிருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பிருப்பதில்லை?” என்ற கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே --------------------- தேவை“
11. “பாரும், ஓய்வு நாளில் செய்யகூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்?“ என்ற பரிசேயரின் கேள்விக்கு இயேசுவின் பதில் என்ன?
12. இயேசுவைக் காண எந்தெந்த பகுதியிலிருந்து மக்கள் கூடினர்?
13. இயேசு திருத்தூதர்களை ஏன் அழைத்தார்?
14. இயேசுவின் திருத்தூதர்கள் யாவர்?
15. பொவனேர்கேசு என்றால் என்ன?