1. முதன் முதலில் நற்செய்தியை எழுதியவர் யார்?
2. "பாலை நிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது" – இந்த குரல் யாருடையது?
3. “ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
4. திருமுழுக்கு யோவானின் ஆடைகள் யாது?
5. திருமுழுக்கு யோவானின் உணவு யாது?
6. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் -------------------- திருமுழுக்குக் கொடுப்பார்”.
7. இயேசு யாரிடம் திருமுழுக்கு பெற்றார்?
8. இயேசு எந்த ஆற்றில் திருமுழுக்கு பெற்றார்?
9. இயேசு திருமுழுக்கு பெற்றபோது எந்த வடிவில் தூய ஆவியார் வெளிப்பட்டார்?
10. கோடிட்ட இடத்தை நிரப்புக: “என் அன்பார்ந்த -------------- நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்”
11. திருமுழுக்கிற்கு பிறகு எத்தனை நாள்கள் இயேசு பாலைவனத்தில் இருந்தார்?
12. "காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்" – இது யார் கூற்று?
13. இயேசுவின் முதல் சீடர்கள் யாவர்?
14. செபதேயுவின் மக்கள் யாவர்?
15. “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” – இது யார் கூற்று?