மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 74
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 39, 40
முடிவுத் திகதி : 2020-02-29

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஏப்போதை எதைப் பயன்படுத்தி உருவாக்கினர்?

பொன்னால்
நீலம், கருஞ்சிவப்பு, சிவப்பு நிற நூலையும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையால்
வெள்ளியால்
நூலால்
தண்ணீரால்

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

----------------, --------------------, --------------- நிற நூல், கலைத்திறனுடன் அமைந்த மெல்லிய நார்ப்பட்டு ஆகியவற்றை அணிசெய்ய, பொன்தகடுகளை அடித்து இழைகளாக வெட்டினார்.

வெள்ளை
பச்சை
நீலம்
கருஞ்சிவப்பு
சிவப்பு

3. மோசேவின் கட்டளைப்படி, யாருக்காக திருவுடைகள் தயாரிக்கப்பட்டன?

ஆண்டவர்
ஆரோன்
ஆபிரகாம்
மோசே
பார்வோன்

4. மார்புப்பட்டை எப்படி தயாரிக்கப்பட்டது?

மார்புப்பட்டை, ஏப்போது போலவே, கலை வேலைப்பாட்டுடன் செய்யப்பட்டது.
அது பொன்னாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்பட்டிருந்தது.
மார்புப்பட்டை ஒரு சாண் நீளம், ஒரு சாண் அகலம் என்று சதுர வடிவமானதாயும் இரண்டாக மடிந்ததாயும் அமைந்தது.
அதன்மேல் கற்களை நான்கு வரிசையாகப் பதித்தனர்
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறத் துகிலால் நெய்த மெல்லிய ஆடைகள் தூயதலத் திருப்பணிக்காகச் செய்யப்பட்டன.

5. மார்புப்பட்டையின் முதல் வரிசையில் எந்த கற்கள் பொறிக்கப்பட்டன?

வெள்ளி
பதுமராகம்
புட்பராகம்
மரகதம்
வெண்கலம்

6. மார்புப்பட்டையின் இரண்டாம் வரிசையில் எந்த கற்கள் பொறிக்கப்பட்டன?

மாணிக்கம்
நீலமணி
வைரம்
விவிலியம்
ஆண்டவர்

7. மார்புப்பட்டையின் மூன்றாம் வரிசையில் எந்த கற்கள் பொறிக்கப்பட்டன?

வைரம்
நீலமணி
கெம்பு
வைடூரியம்
செவ்வந்திக்கல்


8. மார்புப்பட்டையின் நான்காம் வரிசையில் எந்த கற்கள் பொறிக்கப்பட்டன?

படிகப் பச்சை
கோமேதகம்
கடல்வண்ணக்கல்
வைடூரியம்
செவ்வந்திக்கல்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

இந்த கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்பப் --------------- பெயர்களைக் கொண்டிருந்தன.

பத்து
பதினொன்று
பன்னிரண்டு
பதிமூன்று
பதினான்கு

10. குருக்களுக்கான பிற உடைகள் எப்படி செய்யப்பட்டன?

அவர் ஏப்போதின் அங்கி முழுவதையும் நீல நிறத்தில் நெசவு வேலைப்பாட்டுடன் செய்தார்.
அந்த அங்கியின் திறப்பைச் சுற்றிலும், மேலாடைகள் திறப்பில் அமைவது போன்று நெசவு வேலைப்பாடுள்ள ஒரு கரை அமைக்கப்பட்டது. இதனால் அங்கி கிழியாதிருக்கும்.
அங்கியின் விளிம்பெங்கும் நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் மாதுளைத் தொங்கல் செய்து விடப்பட்டது.
பசும்பொன்னால் மணிகள் செய்து அம் மணிகளை அங்கியின் விளிம்பெங்கும் உள்ள மாதுளைத் தொங்கல்களுக்கு இடையே இட்டனர்.
ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல்; பின்னும் ஒரு மணி, ஒரு மாதுளைத் தொங்கல் என்று திருப்பணி அங்கியின் விளிம்பெங்கும் அமைந்திருந்தன.

11. கோடிட்ட இடத்தை நிரப்புக:

புனித மணிமுடிக்கான பட்டத்தைப் பசும் பொன்னால் செய்து, அதன் மேல் “”----------------------------” என்று முத்திரைபோல் பொறித்து வைத்தனர்.

ஆண்டவருக்கு நன்றி
ஆண்டவருக்கு அர்ப்பணம்
ஆண்டவரே போற்றி
ஆண்டவர் இயேசு
ஆண்டவரே புகலிடம்

12. சந்திப்புக் கூடாரத்தின் திரு உறைவிட வேலையெல்லாம் முடிவடைந்தபிறகு, மோசேயிடம் கொண்டுவரப்பட்ட பொருள்கள் யாவை?

திருஉறைவிடக் கூடாரம், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள். செந்நிறமாகப் பதனிட்ட செம்மறிக்கிடாய்த் தோல்விரிப்புகள்
வெள்ளாட்டுத் தோல்விரிப்புகள், திருத்தூயகத் தொங்குதிரை, உடன்படிக்கைப் பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, மேசை, அதன் அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்
பசும்பொன் விளக்குத்தண்டு, அதில் வரிசையாக அமைந்த அகல்கள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், விளக்குக்கான எண்ணெய், பொன் பீடம், திருப்பொழிவு எண்ணெய், நறுமணத்தூபம், கூடார நுழைவாயிலின் தொங்குதிரை
வெண்கலப் பலிபீடம், அதன் வெண்கல வலைப்பின்னல், அதன் தண்டுகள், அதன் அனைத்துத் துணைக்கலன்கள், நீர்த் தொட்டி, அதன் ஆதாரம், முற்றத்தின் தொங்குதிரைகள், அதன் தூண்கள், பாதப்பொருத்துகள்
முற்றத்தின் நுழைவாயிலுக்கான தொங்குதிரை, பூண்கள், முளைகள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத் திருப்பணிக்குத் தேவையான அனைத்துத் துணைக்கலன்கள், தூயகத்தில் பணிபுரிவதற்கான அழகுறப் பின்னப்பட்ட உடைகள், குருவாகிய ஆரோனுக்கும் அவர் புதல்வருக்கும் குருத்துவப் பணி புரிவதற்கான திருவுடைகள் ஆகியவை.

13. ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்ன?

முதல் மாதத்தில், முதல் நாள், சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிடத்தை நீ எழுப்புவாய். அங்கே உடன்படிக்கைப்பேழையை வைத்து அதனைத் திருத்தூயகத் திரையால் மறைத்துவிடு.
பின்னர் மேசையைக் கொண்டுவந்து, உரியவாறு ஒழுங்குபடுத்து. மேலும் விளக்குத் தண்டினைக் கொண்டுவந்து அதன் அகல்களை ஏற்று.
உடன்படிக்கைப் பேழைக்கு முன்பக்கம் பொன்தூப பீடத்தை வை. திருஉறைவிட நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.
சந்திப்புக் கூடாரத்தின் திருஉறைவிட நுழைவாயிலுக்கு முன்புறம் எரிபலி பீடத்தை வை.
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலி பீடத்திற்கும் இடையில் தண்ணீர்த் தொட்டியை வைத்து, அதில் தண்ணீர் ஊற்றிவை. சுற்றிலும் முற்றம் அமைத்து, முற்றத்தின் நுழைவாயிலில் திரையைத் தொங்கவிடு.

14. ஆண்டவர் மோசேயிடம் யாருக்கு குருத்துவ திருப்பொழிவு செய்ய அறிவுறுத்தினார்?

ஆரோன்
ஆரோனின் புதல்வர்கள்
ஆபிரகாம்
ஈசாக்கு
யாக்கோபு

15. கூடாரத்தின் மேல் ஆண்டவரின் மாட்சி எப்படி இருந்தது?

மேகம் சந்திப்புக்கூடாரத்தை மூடிற்று; ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பிற்று.
சந்திப்புக்கூடாரத்தின் மேலே மேகம் நின்றிருந்ததாலும், ஆண்டவரின் மாட்சி திருஉறைவிடத்தை நிரப்பியதாலும் மோசே உள்ளே நுழைய முடியாமல் போயிற்று.
இஸ்ரயேல் மக்கள் தங்கள் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், மேகம் திரு உறைவிடத்தைவிட்டு எழும்பும் போதெல்லாம் புறப்பட்டுச் செல்வார்கள்.
மேகம் எழும்பாதிருக்கும் போதோ, அது மேலே எழும்பும் நாள்வரை, அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
ஏனெனில் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் திருஉறைவிடத்தின்மேல் பகலில் ஆண்டவரின் மேகம் இருப்பதையும், இரவிலோ அதில் நெருப்பு இருப்பதையும் இஸ்ரயேல் வீட்டார் காண்பார்கள்.