மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 73
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 37, 38
முடிவுத் திகதி : 2020-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பெட்சலேல் எந்த மரத்தில் பேழையை செய்தார்?

ஆலமரம்
வேம்பு
சித்திம் மரம்
தேக்கு மரம்
கிறிஸ்மஸ் மரம்

2. பேழையின் அளவு என்ன?

நீளம் இரண்டரை முழம்
அகலம் ஒன்றரை முழம்
உயரம் இரண்டரை முழம்
உயரம் ஒன்றரை முழம்
நீளம் ஒன்றரை முழம்

3. பெட்சலேல் கெருபுகளை செய்த விதம் பற்றி விளக்குக

அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்;
இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.
ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.
கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன.
கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.

4. விளக்குத் தண்டு செய்த விதம் பற்றி விளக்குக:

பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார்.
அதை அடிப்பு வேலையாகச் செய்தார்.
அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.
விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.
அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை ---------------------- செய்யப்பட்டன."

வெள்ளியால்
பசும்பொன்னால்
மரத்தால்
சித்திம் மரத்தால்
ஆல மரத்தால்

6. தூபப்பீடம் செய்த விதம் பற்றி விளக்குக:

அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்
அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார்.
அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது.
அதன் உயரமோ இரண்டு முழம்.
அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.

7. சித்திம் மரத்தால் செய்யப்பட்ட எரிபலிபீடத்தின் அளவு என்ன?

நீளம் ஐந்து முழம்
அகலம் ஐந்து முழம்
சதுரவடிவமாயிருந்தது
உயரமோ மூன்று முழம்
உயரம் இரண்டு முழம்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

--------------------------, ----------------------, -------------------------, ---------------------, ------------------------ ஆகிய எல்லாக் கலன்களையும் வெண்கலத்தில் செய்தார்.

சாம்பல் சட்டிகள்
அள்ளு கருவிகள்
பலிக்கிண்ணங்கள்
முள்கரண்டிகள்
நெருப்புத் தட்டுகள்

9. ஆரோனின் மகன் யார்?

பெட்சலேல்
ஒகொலியாபு
ஆபிரகாம்
இத்தாமர்
மோசே

10. ஒகொலியாபு – சிறு குறிப்பு தருக?

பெட்சலேலுடன் பணியாற்றியவர்
தாண் குலத்தைச் சேர்ந்தவர்
அகிசமாக்கின் மகன்
அவர் ஒரு சிற்பியும் கலைஞரும் ஆவார்.
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலையும் முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டையும் பின்னித் தயாரிப்பதில் வல்லுநராக இருந்தார்.

11. ஆரத்திக் காணிக்கை வழிவந்த தங்கம் எவ்வளவு?

ஆயிரத்து நூற்றைம்பது கிலோ கிராம்
ஆயிரத்து நூற்றெழுபது கிலோ கிராம்
ஆயிரத்து நூற்றெண்பது கிலோ கிராம்
ஆயிரத்து நூற்றெழுபது கிராம்
ஆயிரத்து நூற்றைம்பது கிராம்

12. இருபது வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் எத்தனை பேர் இருந்தனர்?

6,03,550 பேர்
6,30,550 பேர்
6,33,550 பேர்
6,00,000 பேர்
6,50,550 பேர்

13. ஆரத்திக் காணிக்கையாக வந்த வெண்கலம் எவ்வளவு?

2,835 கிலோ கிராம்
2,825 கிலோ கிராம்
2,845 கிலோ கிராம்
2,855 கிலோ கிராம்
2,865 கிலோ கிராம்

14. தூயகத்திலுள்ள பாதப் பொருத்துகளையும், திருத்தூயகத்திரைக்கான பாதப்பொருத்துகளையும் வார்க்க, எவ்வளவு வெள்ளியாயிற்று?

7000 கிலோகிராம்
2000 கிலோகிராம்
6000 கிலோகிராம்
5000 கிலோகிராம்
4000 கிலோ கிராம்

15. கோடிட்ட இடத்தை நிரப்புக
„அதைக்கொண்டு அவர் சந்திப்புக் கூடார நுழைவாயிலின் பாதப்பொருத்துகளையும், ---------------------, அதன் ----------------------, பலிப்பீடத்திற்கான அனைத்துத் துணைக்கலன்களையும் செய்தார்.“

தங்க பலிபீடத்தையும்
தங்க வலைப்பின்னலையும்
வெண்கலப் பலிபீடத்தையும்
வெண்கல வலைப்பின்னலையும்
வெள்ளி பலிபீடத்தையும்