மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 72
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 34, 35, 36
முடிவுத் திகதி : 2019-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. திருச்சட்டக் கற்பலகைகளின் இரண்டாம் பிரதி குறித்து மோசேயிடம் ஆண்டவர் கூறுவது என்ன?

முன்னவை போன்ற இரு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.
நீ உடைத்துப்போட்ட முன்னைய பலகைகளின்மேல் இருந்த வார்த்தைகளையே நான் இப்பலகைகளின் மேல் எழுதுவேன்.
முன்னேற்பாடு செய்து கொண்டு, காலையிலேயே சீனாய் மலைமேல் ஏறிச்செல். அங்கே மலையுச்சியில் என்முன் வந்து நில்.
உன்னோடு வேறெவனுமே ஏறிவர வேண்டாம். மலையெங்கிலும் எவனுமே காணப்படலாகாது.
அந்த மலைக்கு எதிரே ஆடு மாடுகள் மேயவும் கூடாது.

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

ஆண்டவர் மேகத்தில் இறங்கி வந்து, அங்கே அவர் பக்கமாய் நின்றுகொண்டு, ------------------ என்ற பெயரை அறிவித்தார்.

ஆண்டவர்
மோசே
இருக்கிறவர்
ஆரோன்
இஸ்ரயேல்

3. ஆண்டவர் யார்?

இரக்கமும் பரிவும் உள்ள இறைவன்;
சினம் கொள்ளத் தயங்குபவர்;
பேரன்பு மிக்கவர்; நம்பிக்கைக்குரியவர்.
ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு செய்பவர்;
கொடுமையையும் குற்றத்தையும் பாவத்தையும் மன்னிப்பவர்

4. ஆண்டவர் மோசேயுடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

நான் ஓர் உடன்படிக்கை செய்கிறேன்.
எந்த நாட்டிலும் எந்த மக்களினத்திற்கும் செய்யாத அரும்பெரும் செயல்களை நான் உன் மக்கள் அனைவர் முன்னிலையிலும் செய்வேன்.
உன்னைச் சூழ்ந்துள்ள மக்களினத்தவர் அனைவரும் ஆண்டவரின் செயல்களைக் காண்பர்.
ஏனெனில், நான் உன்னோடிருந்து திகிலூட்டும் செயல்களைச் செய்வேன்.
நானே ஆண்டவர்

5. கோடிட்ட இடங்களை நிரப்புக:

நான் உன் முன்னிலையினின்று ---------------, ---------------------, -----------------, -------------------- இவ்வியரையும், எபீசியரையும் துரத்திவிடுவேன்.

எமோரியரையும்
கானானியரையும்
இத்தியரையும்,
பெரிசியரையும்
இந்தியரையும்

6. புளிப்பற்ற அப்ப விழாவை எந்த மாதத்தில் கொண்டாடப்படவேண்டும் என்று ஆண்டவர் கூறுகிறார்?

நிசான் மாதம்
ஜனவரி மாதம்
பாஸ்கா மாதம்
ஆகஸ்டு மாதம்
ஆபிபு மாதம்

7. ஓய்வு நாள் குறித்து ஆண்டவர் கூறுவது என்ன?

நீங்கள் கடைப்பிடிக்கும்படி ஆண்டவர் கட்டளையாகத் தந்துள்ள வார்த்தைகள் இவைகளே
ஆறு நாள்கள் நீங்கள் வேலை செய்யலாம்.
ஏழாம் நாளோ, ஆண்டவருக்காக நீங்கள் ஓய்ந்திருக்க வேண்டிய புனிதமான “சாபாத்து “;
அன்று வேலை செய்பவன் எவனும் கொல்லப்பட வேண்டும்.
ஓய்வு நாளில் உங்கள் உறைவிடங்கள் எதிலும் நெருப்பு மூட்டக் கூடாது.


8. மோசே எத்தனை நாள்கள் ஆண்டவருடன் உடனிருந்தார்?

நாற்பது நாள்கள்
நாற்பது இரவுகள்
நாற்பது இரவும் நாற்பது பகலும்
நான்கு வாரங்கள்
நான்கு நாள்கள்

9. எந்த மலையில் மோசே ஆண்டவரை சந்தித்தார்?

ஓரேபு மலை
சீனாய் மலை
இமயமலை
கல்வாரி மலை
எருசலேம்

10. ஆண்டவரை சீனாய் மலையில் சந்தித்தப்பிறகு, மோசே இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் ஒன்றுதிரட்டி கூறியது என்ன?

ஆண்டவருக்காக உங்களிடமிருந்து காணிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
தாராளமனமுடையோர் அனைவரும் ஆண்டவருக்காகக் கொண்டு வரவேண்டிய காணிக்கைகளாவன; பொன், வெள்ளி, வெண்கலம்,
மேலும் உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும்.
ஆண்டவர் தாமே கூர் என்பவரின் மகனான ஊரியின் புதல்வன் பெட்சலேலைப் பெயர் சொல்லி அழைத்திருப்பதைப் பாருங்கள்.<<<<<<<<<<<<<
ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.

11. திறன்படைத்தோர் ஆண்டவருக்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன?

உங்களுள் திறன்படைத்தோர் அனைவரும் ஆண்டவர் கட்டளையிட்ட அனைத்தையும் செய்ய முன்வரட்டும். அவையாவன;
திருஉறைவிடம், அதன் கூடாரம், மேல் விரிப்பு, கொக்கிகள், சட்டங்கள், குறுக்குச் சட்டங்கள், தூண்கள், பாதப்பொருத்துக்கள்
பேழை, அதன் தண்டுகள், இரக்கத்தின் இருக்கை, அதை மறைக்கும் தொங்குதிரை,
மேசை, அதன் தண்டுகள், அனைத்துத் துணைக்கலன்கள், திருமுன்னிலை அப்பம்,
ஒளிவிளக்குத் தண்டு, அதன் துணைக்கலன்கள், அகல்கள், விளக்குக்கான எண்ணெய்.

12. தாராள மனமுடையோர் ஆண்டவருக்கு தந்த காணிக்கை என்ன?

காப்புகள்
காதணிகள்
மோதிரங்கள்
அணிகலன்கள்
வெள்ளி

13. பெட்சலேல் யார்?

மோசேயின் மகன்
ஊரியின் புதல்வன்
கூர் என்பவரின் பேரன்
ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்
ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில் திறமை அனைத்தும் உண்டாகுமாறு அவரை இறை ஆவியால் நிரப்பியுள்ளார்.

14. ஆண்டவரின் தூயக அமைப்பு வேலைக்காக அமர்த்தப்பட்ட கலைஞர்கள் யாவர்?

மோசே
ஆரோன்
பெட்சலேல்
ஒகொலியாபு
ஆபிரகாம்

15. தூயக வேலைகளில் ஈடுபட்டிருக்கிற கலைஞர் தாங்கள் செய்து கொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு வந்து மோசேயிடம் கூறியது என்ன?

மக்கள் கொண்டு வருவது ஆண்டவர் கட்டளையிட்ட வேலைக்கும் அதிகமாகவே உள்ளது.
ஆணோ பெண்ணோ யாராயினும் இனிமேல் தூயகத்துக்காகக் காணிக்கை கொண்டுவர வேண்டாம்
ஏற்கனவே சேகரித்தது, செய்ய வேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமானதாயும் தேவைக்கு மிஞ்சியும் இருந்தது.
பணியாளருள் கலைத்திறமைமிக்கோர் அனைவரும் ஒன்று சேர்ந்து திருஉறைவிடத்தைப் பத்துத் திரைகளால் அமைத்தனர்.
அவை முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாகவும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாகவும், கலைத் திறனுடன் கூடிய கெருபுகள் அமைந்ததாகவும் இருந்தன.