மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 71
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 32, 33
முடிவுத் திகதி : 2019-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மோசே மலையினின்று இறங்கி வரத் தாமதித்ததைக் கண்ட மக்கள் ஆரோனை நோக்கிக் கூறியது என்ன?

எகிப்து நாட்டினின்று எங்களை நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.
நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்.
நறுமணப் பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய்
சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.
நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்.

2. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“உங்கள் மனைவியர், புதல்வர் புதல்வியரின் --------------- கழற்றி, அவற்றை என்னிடம் கொண்டு வாருங்கள்”

வெள்ளிக் காதணிகளை
காதணிகளை
பொற்காதணிகளை
மோதிரங்களை
தலைமுடியை

3. இஸ்ரயேல் மக்களிடம் பெற்ற பொற்காதணிகளைக் கொண்டு ஆரோன் எதை உருவாக்கினார்?

சிலை
மேசை
நற்கருணைப் பேழை
பொற்கன்று
ஆண்டவர்

4. ஆரோன் உருவாக்கிய பொற்கன்றைக் கண்டவுடன் இஸ்ரயேல் மக்கள் கூறியது என்ன?

நீர் முன்வந்து எங்களை வழிநடத்தும் தெய்வங்களை எங்களுக்கு உருவாக்கிக்கொடும்.
நாளைய தினம் ஆண்டவரின் விழா
நறுமணப் பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய்
சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்
இஸ்ரயேலே! உன்னை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த உன் தெய்வங்கள் இவையே

5. பொற்கன்றை வணங்கியதால் இஸ்ரயேல் மக்களைக் குறித்து மோசேயிடம் ஆண்டவர் கூறியது என்ன?

இங்கிருந்து இறங்கிப்போ. நீ எகிப்திலிருந்து நடத்திவந்த உன் மக்கள் தங்களுக்குக் கேடு வருவித்துக்கொண்டனர்.
நான் கட்டளையிட்ட நெறியிலிருந்து இதற்குள்ளாகவே விலகி அவர்கள் தங்களுக்கென ஒரு கன்றுக் குட்டியை வார்த்துக் கொண்டார்கள்.
அதற்கு வழிபாடு செய்து, பலியிட்டு, ‘இஸ்ரயேலே, எகிப்து நாட்டினின்று உன்னை நடத்தி வந்த தெய்வங்கள் இவையே’ என்று கூறிக் கொள்கிறார்கள்
இம் மக்களை எனக்குத் தெரியும்; வணங்காக்கழுத்துள்ள மக்கள் அவர்கள்.
இப்போது என்னை விட்டுவிடு. அவர்கள்மேல் என் கோபக்கனல் மூண்டிருப்பதால் நான் அவர்களை அழித்தொழிக்கப் போகிறேன் உன்னையோ பேரினமாக்குவேன்

6. இஸ்ரயேல் மக்கள் மீது கோபம் கொண்ட ஆண்டவரிடம் மோசே மன்றாடியது என்ன?

ஆண்டவரே, மிகுந்த ஆற்றலோடும் வலிமைமிகு கரத்தோடும் நீர்தாமே எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்த உம் மக்களுக்கு எதிராக உம் கோபம் மூள்வது ஏன்?
“மலைகளில் அவர்களைச் சாகடிப்பதற்கும் மண்ணிலிருந்து அவர்களை அழித்தொழிப்பதற்குமாக வஞ்சகமாய் ஆண்டவர் அவர்களைக் கூட்டிச் சென்றார்” என்று எகிப்தியர் சொல்ல இடம் தருவானேன்?
உமது கடுஞ்சினத்தை விட்டுவிட்டு உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளும்.
உம் அடியாராகிய ஆபிரகாமையும், ஈசாக்கையும், இஸ்ரயேலையும் நினைந்தருளும். நான் உன் வழிமரபினரை விண்மீன்கள் போல் பெருகச் செய்வேன்.
நான் வாக்களித்த இந்நாடு முழுவதையும் உன் வழிமரபினருக்கு அளிப்பேன்; அவர்கள் அதை எனறென்றும் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர் என்று நீராகவே அவர்களுக்கு ஆணையிட்டு அறிவித்துள்ளீரே

7. “நாளைய தினம் ஆண்டவரின் விழா“ – இது யார் கூற்று?

ஆண்டவர்
மோசே
ஆரோன்
ஆபிரகாம்
ஈசாக்கு

8. மோசே மலையிலிருந்து இறங்கியபோது கொண்டுவந்தது என்ன?

பொன், வெள்ளி
ஆடைகள்
பொற்கன்று
பேழை
உடன்படிக்கை பலகைகள் இரண்டு

9. “இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்” – இது யார் கூற்று?

மோசே
யோசுவா
ஆரோன்
ஆண்டவர்
ஆபிரகாம்

10. பொற்கன்று சிலை வணக்கத்தைக் கண்டவுடன் மோசே செய்தது என்ன?

பாளையத்தை அவர் நெருங்கிவந்தபோது கன்றுக் குட்டியையும் நடனங்களையும் கண்டார். மோசேக்குச் சினம் மூண்டது.
அவர் தம் கையிலிருந்த பலகைகளை மலையடிவாரத்தில் வீசியெறிந்து உடைத்துப் போட்டார்.
அவர்கள் செய்து வைத்திருந்த கன்றுக்குட்டியை எடுத்து நெருப்பில் சுட்டெரித்து மிருதுவான பொடியாகு மட்டும் அதை இடித்துத் தண்ணீரில் தூவி, இஸ்ரயேல் மக்களைக் குடிக்கச் செய்தார்
பின்னர் மோசே ஆரோனை நோக்கி, “இம்மக்கள் உமக்கு என்ன செய்தார்கள்? இவர்கள்மேல் பெரும் பாவம் வந்துசேரச் செய்து விட்டீரே!” என்று கேட்டார்.
இது பாளையத்திலிருந்து எழும் போர்முழக்கம்

11. மோசேயின் சினத்தைக்கண்ட ஆரோன் கூறியது என்ன?

நாளைய தினம் ஆண்டவரின் விழா
என் தலைவராகிய நீர் சினம் கொள்ள வேண்டாம்.
இம்மக்கள் பொல்லாதவர்கள் என்பது உமக்குத் தெரியுமே!
அவர்கள் என்னை நோக்கி, ‘எங்களுக்கு வழிகாட்டும் தெய்வங்களைச் செய்துகொடும். எங்களை எகிப்து நாட்டினின்று நடத்தி வந்த அந்த ஆள் மோசேக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை’ என்றனர்.
நானும் அவர்களிடம் ‘பொன் அணிந்திருப்பவர்கள் கழற்றித் தாருங்கள்’ என்றேன். அவர்களும் என்னிடம் தந்தனர். நான் அதனை நெருப்பில்போட, இந்தக் கன்றுக்குட்டி வெளிப்பட்டது” என்றார்.

12. மோசேயின் வாக்குக்கிணங்காதோர் எத்தனை பேர் மடிந்தனர்?

இரண்டாயிரம் பேர்
மூவாயிரம் பேர்
நான்காயிரம் பேர்
ஐந்தாயிரம் பேர்
ஆறாயிரம் பேர்

13. "ஆண்டவர் பக்கம் உறுதியாய் இருப்போர் என்னிடம் வாருங்கள்” – இது யார் கூற்று?

மோசே
ஆரோன்
யோசுவா
ஆண்டவர்
இஸ்ரயேலர்

14. மோசே ஆண்டவரிடம் திரும்பிவந்து மன்றாடியது என்ன?

நீ இப்போதே புறப்பட்டுப் போ. உன்னிடம் நான் கூறியுள்ளபடி மக்களை நடத்திச் செல்.
இதோ என் தூதர் உன் முன்னே செல்வார். ஆயினும் நான் தண்டனைத்தீர்ப்பு வழங்கும் நாளில் அவர்கள் பாவத்தை அவர்கள் மேலேயே சுமத்துவேன்
ஐயோ, இம்மக்கள் தங்களுக்காகப் பொன்னால் தெய்வங்களை உருவாக்கிப் பெரும்பாவம் செய்துவிட்டார்கள்.
இப்போதும், நீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளும்.
இல்லையேல், நீர் எழுதிய உம் நூலிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்

15. “எனது பிரசன்னம் உன்னோடு செல்லும். நான் உனக்கு இளைப்பாறுதல் அளிப்பேன்” – இது யார் கூற்று?

ஆண்டவர்
மோசே
ஆரோன்
யோசுவா
ஈசாக்கு