மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 70
வேதாகமப் பகுதி : விடுதலைப்பயணம் 30, 31
முடிவுத் திகதி : 2019-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. தூபபீடம் அமைப்பது பற்றி ஆண்டவர் குறிப்பிடுவது என்ன?

நறுமணப் பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய்
சித்திம் மரத்தால் அதனைச் செய்வாய்.
நீளம் ஒரு முழம் அகலம் ஒரு முழம் என்று அது சதுரமாக அமையட்டும்;
அதன் உயரம் இரு முழம்; கொம்புகளும் அதனுடன் ஒன்றிணைந்தவையாக இருக்கட்டும்
அதன் மேல்பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து, சுற்றிலும், தங்கத் தோரணம் பொருத்து.

2. தூபபீடத்தில் ஆரோன் செய்யவேண்டியவை என்ன?

காலைதோறும் ஆரோன் அதன்மேல் நறுமணப்பொருள் எரிப்பானாக! விளக்குகளை ஆயத்தப்படுத்தும்போதும் அவன் நறுமணப்பொருள் எரிப்பானாக!
மாலை மங்கும் வேளையில் ஆரோன் விளக்குகளை ஏற்றும்போது, உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவர் திருமுன் இடைவிடாமல் நறுமணப்பொருள் எரிப்பானாக!
வேற்று நறுமணப் பொருளையோ, மற்றும் எரிபலியையோ, உணவுப் படையலையோ அதன்மேல் படைத்தலாகாது. அதன் மேல் நீர்மப் படையலையும் ஊற்றக்கூடாது.
ஆண்டுக்கு ஒருமுறை ஆரோன் அதன் கொம்புகள் மேல் பாவக் கழுவாய் நிறைவேற்றுவான்.
ஆண்டுக்கு ஒருமுறை பாவம்போக்கும் பலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துப் பாவக்கழுவாயை உங்கள் தலைமுறைதோறும் நிறைவேற்றுவான். ஏனெனில், அது ஆண்டவருக்குப் புனிதமிக்கதாகும்.

3. ஒரு செக்கேல் என்பது என்ன?

100 கிராம்
100 கிலோ கிராம்
இருபது கேரா
முப்பது கேரா
நாற்பது கேரா

4. ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு எவ்வளவு மீட்புப் பணம் கட்டவேண்டும்?

ஒரு செக்கேல்
அரை செக்கேல்
இருபது கேரா
இருபது ரூபாய்
இரு செக்கேல்

5. யார் யார் மீட்புப் பணத்தை ஆண்டவருக்கு காணிக்கை செலுத்த வேண்டும்?

இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்கள்
இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான பெண்கள்
இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான ஆண்களும் பெண்களும்
முதியோர்
சிறியோர்

6. வெண்கல நீர்த்தொட்டி குறித்து ஆண்டவர் மோசேயிடம் கூறுவது என்ன?

கழுவுவதற்காக ஒரு வெண்கல நீர்த்தொட்டியை அதற்கான வெண்கல ஆதாரத்தோடு செய்.
சந்திப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் அதனை வைத்து அதில் தண்ணீர் ஊற்றுவாய்.
ஆரோனும் அவன் புதல்வரும் இதிலிருந்து தங்கள் கைகளையும் பாதங்களையும் கழுவ வேண்டும்.
சந்திப்புக் கூடாரத்தில் நுழையும்போது அல்லது பலிபீடத்தை நெருங்கி ஆண்டவருக்கு நெருப்புப் பலிகளைச் சுட்டெரிக்கும் பணிபுரியும்போது அவர்கள் தண்ணீரால் கழுவிக்கொள்வார்கள். இல்லையெனில் அவர்கள் செத்துமடிவார்கள்.
அவர்கள் சாகாமல் இருக்கும்படி கைகளையும் பாதங்களையும் கழுவிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு அதாவது அவனுக்கும் தலைமுறைதோறும் அவன் வழிமரபினருக்கும் என்றுமுள்ள நியமமாக இருக்கும்.

7. திருப்பொழிவு எண்ணெய் தயாரிக்கப் பயன்படும் பொருள்கள் யாவை?

வெள்ளைப் போளம்
கருவாப்பட்டை
நறுமண வசம்பு
ஒலிவ எண்ணெய்
நல்லெண்ணெய்


8. திருப்பொழிவு எண்ணெயால் எதையெல்லாம் திருப்பொழிவு செய்ய வேண்டும்?

சந்திப்பு கூடாரம், உடன்படிக்கைப் பேழை
மேசை, அதன் அனைத்துத் துணைக் கலன்கள்
விளக்குத் தண்டு, அதன் துணைக் கலன்கள், தூபப்பீடம்
எரிபலிபீடம், அனைத்துத் துணைக்கலன்கள்
நீர்த்தொட்டி, அதன் ஆதாரம்

9. நறுமண தூபம் எப்படி செய்யவேண்டும் என்று ஆண்டவர் மோசேயிடம் கூறுகிறார்?

நறுமணப் பொருள்களான வெள்ளைப்போளம், குங்கிலியம், கெல்பான், பிசின் ஆகியவற்றையும், கலப்பில்லாச் சாம்பிராணியையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
உப்பு சேர்க்கப்பட்ட துப்புரவான புனித நறுமணக்கட்டியை திறமைவாய்ந்த பரிமளத் தயாரிப்பாளன் செய்வதுபோல நீ தயாரிக்க வேண்டும். 
அதில் ஒரு பகுதியை நன்கு பொடியாக்கி, நான் உனக்குக் காட்சிதரும் சந்திப்புக்கூடாரத்திலுள்ள உடன்படிக்கைப் பேழைக்கு முன்னால் வைக்க வேண்டும்.
அது உங்களிடையே தூய்மை மிக்கதாகத் திகழும்.
இந்தக் கலவைக்குரிய விகிதப்படி நறுமணக் கட்டியை நீங்கள் உங்களுக்கென்று செய்து கொள்ள வேண்டாம்.

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

யூதா குலத்தைச் சார்ந்த கூரின் மகனான ஊரியின் மகன் _____ என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன்.

மோசே
ஆரோன்
பெட்சலேல்
ஆபிரகாம்
ஈசாக்கு

11. ஆண்டவர் பெட்சலேல் குறித்து மோசேயிடம் கூறியது என்ன?

ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்.
இதனால் அவன் பொன், வெள்ளி, வெண்கல வேலை செய்யவும், பதிக்க வேண்டிய கற்களுக்குப் பட்டை தீட்டவும், “மரத்தைச் செதுக்கவும் மற்றெல்லாவித நுண்ணிய வேலைகள் செய்யவும் வேண்டிய திட்டமிடும் நுட்பத்திறன் பெற்றுள்ளான்.
மேலும், தாண் குலத்தைச் சார்ந்த அகிசமாக்கின் மகன் ஒகொலியாபு என்பவனையும் நான் அவனோடு நியமித்துள்ளேன்.
ஞானமுள்ளோர் அனைவரின் உள்ளத்திலும் நானே ஞானம் அருளியுள்ளதால், அவர்கள் நான் உனக்குக் கட்டளையிட்டபடி அனைத்தையும் செய்வர்.
இம்மக்களை எனக்கு தெரியும். வணங்கா கழுத்துள்ள மகன் அவன்.

12. ‘சாபாத்து’ என்றால் என்ன?

ஏழாம் நாள்
ஓய்வு நாள்
ஆண்டவருக்கு புனிதமான நாள்
ஆறாம் நாள்
வேலை நாள்

13. ஓய்வு நாள் குறித்து ஆண்டவர் மோசேயிடம் கூறியது என்ன?

ஓய்வுநாளைக் கடைப்பிடியுங்கள்.
அது உங்களுக்குப் புனிதமானதாகும்.
அதன் தூய்மையைக் கெடுப்பவன் கொல்லப்படவே வேண்டும்.
அந்நாளில் வேலை செய்பவன் எவனும் தன் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும்.
ஆறு நாள்கள் வேலை செய்யலாம். ஏழாம் நாளோ ஓய்வு நாளாகிய ‘சாபாத்து’. ஆண்டவருக்குப் புனிதமான நாள். ஓய்வு நாளில் வேலை செய்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.

14. கோடிட்ட இடத்தை நிரப்புக:

ஆண்டவர் ________ மோசேயோடு பேசி முடித்தபின், கடவுளின் விரலால் எழுதப்பட்ட கற்பலகைகளான உடன்படிக்கைப் பலகைகள் இரண்டையும் அவரிடம் அளித்தார்.

கரும்பலகை
கற்பலகை
உடன்படிக்கை பலகை
சீனாய் மலை
தாபோர் மலை

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

நறுமணப்பொருள் எரிக்குமாறு ஒரு பீடம் செய். ___________ அதனைச் செய்வாய்

ஆல மரத்தால்
சித்திம் மரத்தால்
ஒலிவ மரத்தால்
மா மரத்தால்
வேப்பமரத்தால்