1. குருத்துவப்பணி ஆற்ற ஆண்டவரால் அழைக்கப்பட்டவர்கள் யாவர்?
2. ஆரோனுக்காக தயாரிக்கப்பட்ட குருத்துவ திருவுடைகள் யாவை?
3. ஏப்போது என்ற குருத்துவ திருவுடை எந்தெந்த பொருள்களால் அமைக்கப்படவேண்டும்?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: „-------------------------- இரண்டு எடுத்து சுவற்றின்மேல் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களைப் பொறித்துவைப்பாய்.“
5. கோடிட்ட இடத்தை நிரப்புக; „-------------- அவர்கள் பெயர்களைத் தம் இரு தோள்களிலும் ஆண்டவர் திருமுன் நினைவுச்சின்னமாகத் தாங்கி நிற்பான்.“
6. மார்புப்பட்டை எப்படி அமையவேண்டு என்று ஆண்டவர் வலியுறுத்துகிறார்?
7. மார்புப்பட்டையின் முதல் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?
8. மார்புப்பட்டையின் இரண்டாம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?
9. மார்புப்பட்டையின் மூன்றாம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?
10. மார்புப்பட்டையின் நான்காம் வரிசையில் பதிக்கவேண்டிய கற்கள் யாவை?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இந்தக் கற்கள் இஸ்ரயேல் புதல்வர் பெயர்களுக்கேற்ப -------------------- பெயர்களைக் கொண்டிருக்கும்."
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: "தீர்ப்புக் கூறும் மார்புப்பட்டையில் ------------------, ----------------- இட்டு வைப்பாய்."
13. குருத்துவ திருநிலைப்பாட்டின்போது படைக்கப்படும் உணவுக் காணிக்கை என்ன?
14. ஆண்டவர் வலியுறுத்தும் அன்றாட வழிபாடு யாது?
15. ஆரோன் மற்றும் அவர் புதல்வர்களின் திருநிலைப்பாடு எத்தனை நாள்கள் நடந்தன?