மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 68
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 25, 26, 27
முடிவுத் திகதி : 2019-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. காணிக்கை பற்றி ஆண்டவர் மோசேயை நோக்கி கூறியது என்ன?

இஸ்ரயேல் மக்கள் காணிக்கை கொண்டு வருமாறு நீ அவர்களோடு பேசு
தன்னார்வம் கொண்ட ஒவ்வொருவரிடமிருந்தும் நீங்கள் எனக்காகக் காணிக்கை பெற்றுக்கொள்ளுங்கள்.
நீங்கள் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய காணிக்கைகளாவன: பொன், வெள்ளி, வெண்கலம்
நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிறநூல்; மெல்லிய நார்ப்பட்டு; வெள்ளாட்டு உரோமம்
செந்நிறமாகப் பதனிட்ட ஆட்டுக்கிடாய்த் தோல்கள், வெள்ளாட்டுத் தோல்கள்; சித்திம் மரம்

2. கோடிட்ட இடங்களை நிரப்புக:

“நான் அவர்கள் நடுவில் தங்குவதற்கென ஒரு -------------- அமைக்கப்படட்டும்.”

கட்டிடம்
கோயில்
தூயகம்
படுக்கையறை
கடவுள்

3. உடன்படிக்கைப் பேழை எந்த மரத்தால் செய்யப்பட்டது?

ஆலமரம்
மாமரம்
மூங்கில் மரம்
சித்திம் மரம்
தேக்கு மரம்

4. உடன்படிக்கைப் பேழையை எப்படி செய்யவேண்டுமென்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

சித்திம் மரத்தால் அவர்கள் ஒரு பேழை செய்யட்டும்
அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்
அதன் மேலெங்கும் பசும்பொன்னால் மூடுவாய். உள்ளும் புறமும் வேய்ந்திடுவாய். அதைச்சுற்றிலும் ஒரு பொன் தோரணம் பொருத்திடுவாய்
நான் கு பொன் வளையங்களை வார்த்து, இரு வளையங்களை ஒரு பக்கத்திலும் இரு வளையங்களை மறுபக்கத்திலுமாக அதன் நான்கு கால்களோடும் பொருத்துவாய்
சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றையும் பொன்னால் மூடுவாய்

5. இரக்கத்தின் இருக்கையை எப்படி அமைக்கவேண்டும் என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கை ஒன்று அமைப்பாய். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
இரு பொன் கெருபுகளைச் செய்தல் வேண்டும். இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாக அமைப்பாய்
ஒரு புறத்தில், ஒரு கெருபும், மறுபுறத்தில் மற்றொரு கெருபுமாக அமைக்கவேண்டும்.
இரக்கத்தின் இருக்கையோடு இணைந்ததாக அதன் இரண்டு ஓரங்களிலும் கெருபுகளைச் செய்துவை
அக்கெருபுகள், தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும், இருக்கட்டும். கெருபுகளின் முகங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் விளங்கட்டும்.

6. அப்ப மேசையை எப்படி செய்யவேண்டுமென்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

சித்திம் மரத்தால் ஒரு மேசை செய். அதன் நீளம் இரண்டு முழம், அகலம் ஒரு முழம், உயரம் ஒன்றரை முழமாக இருக்கட்டும்.
அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன்தோரணம் செய்து வைப்பாய்
மேலும் நான்கு விரல்கடை அளவில் அதற்குச் சுற்றுச்சட்டம் அமைத்து, சட்டத்தைச் சுற்றிலும் பொன் தோரணம் செய்து வைப்பாய்
அதற்கு நான்கு பொன் வளையங்கள் செய்து, நான் கு மூலைகளிலும் நான்கு கால்களில் இணைத்துவிடு.
மேசையைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்கும் வளையங்கள் சட்டத்தின் அருகில் கிடக்கட்டும்.

7. விளக்குத்தண்டு எப்படி செய்யவேண்டுமென்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

பசும்பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்வாய்.
அடிப்பு வேலையுடன் விளக்குத் தண்டை அமைப்பாய்.
அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக விளங்கட்டும்.
விளக்குத் தண்டின் ஒரு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளும், விளக்குத்தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக, அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் செல்லும்.
ஒரு கிளையில் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் சேர்ந்து அமையும்.


8. சந்திப்புக் கூடாரம் அல்லது திரு உறைவிடத்தை எப்படி அமைக்கலாம் என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

திரு உறைவிடத்தைப் பத்து மூடு திரைகளைக் கொண்டு செய்வாய்.
அவை முறுக்கேறி நெய்த மெல்லிய நார்ப் பட்டாலும், நீலம் கருஞ்சிவப்பு சிவப்பு நிற நூலாலும் செய்யப்படவேண்டும்
அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய்.
மூடு திரை ஒன்றின் நீளம் இருபத்தெட்டு முழம், அகலம் நான்கு முழம்
ஒரு மூடு திரையின் அளவே எல்லாத் திரைகளுக்குமாம்.

9. திருத்தூயகத் தொங்கு திரை எப்படி செய்யவேண்டுமென்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

மேலும் ஒரு திருத்தூயகத் தொங்கு திரை செய்யப்படவேண்டும்.
அது நீலம் கருஞ்சிவப்பு சிவப்புநிற நூலாலும், முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டாலும் செய்யப்படவேண்டும்.
அவற்றில் கெருபுகளைக் கலைத்திறனுடன் அமைப்பாய். அதனை நான் கு சித்திம் மரத்தூண்களில் தொங்கவிடுவாய். இவை பொன்வளைவாணிகள் கொண்டவை.
கொக்கிகளில் அந்தத் திரையைத் தொங்கவிடு
அதற்கு உட்புறமாக உடனபடிக்கைப் பேழையை வைப்பாய். இவ்வாறு தொங்குதிரை தூயகத்தையும் திருத்தூயகத்தையும் பிரிக்கும்.

10. பலிபீடத்தை எப்படி செய்யவேண்டுமென்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

சித்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய்
நீளம் ஐந்து முழம்
அகலம் ஐந்து முழமாகப் பலிபீடம் சதுரவடிவமாய் இருக்கட்டும்
அதன் உயரமோ மூன்று முழம். அதன் நான் கு மூலைகளிலும் கொம்புகள் அமைப்பாய்.
கொம்புகளும் பலிபீடத்தின் பாகமாகவே விளங்கும். பின் அதை வெண்கலத்தால் மூடு.

11. திரு உறைவிட முற்றத்தை எப்படி அமைப்பது என்று ஆண்டவர் அறிவுறுத்துகிறார்?

திருஉறைவிட முற்றத்தை நீ உருவாக்குவாய்
தெற்குப்பக்கம் தென் திசை நோக்கி முறுக்கேற்றி நெய்த மெல்லிய நார்ப்பட்டால் செய்த தொங்கு திரைகளை நூறு முழ நீளத்திற்குப் போடவேண்டும்.
அதற்கு இருபது தூண்களும், வெண்கலத்தில் இருபது பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும், பூண்களும் தேவை.
அவ்வாறே, வடபக்கத்தில் நூறு முழ நீளமான தொங்குதிரைகளும், அவற்றுடன் இருபது தூண்களும், இருபது வெண்கலப் பாதப் பொருத்துகளும், தூண்களுக்கான வெள்ளிக் கொளுத்துகளும் பூண்களும் தேவை.
மேற்குப் பக்கத்தில் முற்றத்தின் அகலப்பகுதி ஐம்பது முழத் தொங்குதிரைகளாலும், அதற்கான பத்துத் தூண்களாலும் பத்துப் பாதப் பொருத்துகளாலும் அமையும்.

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"விளக்காகப் பிழிந்த தூய்மையான -------------------------- கொண்டுவரப்படவேண்டும்."

சூரியகாந்தி எண்ணெய்
ஒலிவ எண்ணெய்
விளக்கெண்ணெய்
மண்ணெண்ணெய்
பெட்ரோல்

13. திருத்தலத்திற்கான காணிக்கை யாது?

பொன்
வெள்ளி
வெண்கலம்
மெல்லிய நார்ப்பட்டு
வெள்ளாட்டு உரோமம்

14. சித்திம் மரத்தால் செய்யப்பட்டவை யாவை?

உடன்படிக்கைப் பேழை
அப்ப மேசை
பலிபீடம்
திருஉறைவிடத்திற்கான செங்குத்தான சட்டங்கள்
திருஉறைவிட குறுக்குச் சட்டங்கள்

15. உடன்படிக்கைப் பேழையினுள் எதை வைக்கவேண்டும் என்று ஆண்டவர் கூறுகிறார்?

வாள்
பொன்
வெள்ளி
உணவு
உடன்படிக்கைக் கற்பலகை