1. கோடிட்ட இடத்தை நிரப்புக: “--------------, புரளியை நீ கிளப்பவேண்டாம்”
2. ஆண்டவர் உரைத்த நீதியும் இரக்கமும் நிறைந்த சட்டங்கள் யாவை?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: “---------------- வாங்காதே. கையூட்டு, பார்வையுடையவரையும் குருடராக்கும். நேர்மையாளரின் வழக்கையும் புரட்டிவிடும்.”
4. ஓய்வு ஆண்டில் செய்யவேண்டியது என்ன?
5. ஓய்வு நாளில் கடைப்பிடிக்கவேண்டியது என்ன?
6. முப்பெரும் விழாக்கள் யாவை?
7. முப்பெரும் விழாவை எப்போது, எப்படி கொண்டாடவேண்டும்?
8. ஆண்டவர் தூதரைக் குறித்து எச்சரித்தது என்ன?
9. ஆண்டவரைக் காண, சீனாய் மலைமேல் ஏறிச்சென்றவர்கள் யாவர்?
10. ஆண்டவரின் வார்த்தைகளையும், விதிமுறைகளையும் அறிவித்தப்பின் மக்கள் ஒரே குரலாகச் சொன்னது என்ன?
11. மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து கூறியது என்ன?
12. சீனாய் மலைமேல் ஏறியவுடன் அவர்கள் கண்டது என்ன?
13. மோசே கடவுளின் மலையின்மேல் ஏறிச் செல்கையில் பெரியோர்களை நோக்கிக் கூறியது என்ன?
14. மோசே மலைமேல் ஏறிச்சென்றவுடன் எத்தனை நாள்கள் மேகம் மலையை மூடியிருந்தது?
15. மோசே மலையில் எத்தனை நாள்கள் தங்கியிருந்தார்?