மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 66
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 21, 22
முடிவுத் திகதி : 2019-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடங்களை நிரப்புக:

"உயிருக்கு -----------; கண்ணுக்குக் ----------; பல்லுக்குப் ----------; கைக்குக் -----------; காலுக்குக் ---------."

உயிர்
கண்
பல்
கை
கால்

2. எபிரேய அடிமைகள் குறித்த நீதிச்சட்டங்கள் என்ன?

நீ ஒரு எபிரேய அடிமையை வாங்கினால், அவன் உனக்கு ஆறு ஆண்டுகள் அடிமை வேலை செய்வான்.
ஏழாம் ஆண்டு அவன் எதுவும் தராமல் விடுதலைபெற்று வெளியேறுவான்.
தனித்து வந்திருந்தால் தனித்து வெளியேறுவான்.
மனைவியோடு வந்திருந்தால் அவனுடைய மனைவியும் அவனோடு புறப்பட்டுச் செல்வாள்.
பிறரை அன்பு செய்யுங்கள்

3. வன்முறைச் செயல்கள் குறித்த நீதிச்சட்டங்கள் என்ன?

மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்பட வேண்டும்.
தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்.
ஒருவர் மற்றொருவரைக் கடத்திச் சென்று விற்றுவிட்டாலோ, அவரைத் தம் பிடிக்குள் இன்னும் வைத்திருந்தாலோ, அந்த ஆள் கொல்லப்படவேண்டும்.
தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்
ஒருவர் தம் அடிமையை கோலால் அடிக்க, அவர் அங்கேயே இறந்துவிட்டால், அந்த உரிமையாளர் பழிவாங்கப்படுவார்.

4. மாட்டு உரிமையாளருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?

மாடு தன் கொம்பினால் குத்தி, ஒருவனோ ஒருத்தியோ இறந்துவிட்டால், அம்மாடு கொல்லப்படவேண்டும்.
அதன் இறைச்சி உண்ணப்படலாகாது.
மாட்டின் சொந்தக்காரர் குற்றமற்றவராவார்.
அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார்.
மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.

5. ஆட்டை மாட்டை திருடியவருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?

ஆட்டையோ, மாட்டையோ ஒருவர் திருடி வெட்டிவிட்டால் அல்லது விற்றுவிட்டால் ஒரு மாட்டுக்கு ஐந்து மாடு என்றும், ஓர் ஆட்டுக்கு நான்கு ஆடு என்றும் ஈடுகட்டுவார்.
திருடர் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டுத் தாக்குண்டு இறந்துபோனால் அவருக்காக இரத்தப்பழி இல்லை.
கதிரவன் உதித்தபின் இது நிகழ்ந்திருந்தால், இரத்தப்பழி உண்டு. அவர் ஈடு கொடுத்தேயாக வேண்டும்.
திருட்டுக்கு ஈடாக அவரிடம் எதுவுமே இல்லையெனில் அவர் விற்கப்படுவார்.
அவர் திருடின மாடோ கழுதையோ ஆடோ உயிருடன் அவர் கையில் கண்டுபிடிக்கப்பட்டால் இருமடங்காக ஈடுகொடுப்பார்.

6. வயல் வெளிகளை அழிப்போருக்கான நீதிச்சட்டங்கள் என்ன?

ஒருவர் இன்னொருவர் வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ கால்நடைகளை மேயவிட்டால் அல்லது அவிழ்த்துவிட்டவை பிறர் வயலில் மேய்ந்துவிட்டால், தம் வயலின் சிறந்த விளைச்சலினின்றும், தம் திராட்சைத் தோட்டத்தின் சிறந்த பலனினின்றும் ஈடுசெய்வார்.
தீப்பிடித்து, முட்புதர்களில் பரவி, தானியக் குவியலோ விளைந்த பயிரோ வயலோ எரிந்துவிட்டால், தீயை மூட்டியவர் ஈடுகொடுத்தே ஆக வேண்டும்.
அதன் உரிமையாளருக்குக் குழியின் சொந்தக்காரர் பணம் ஈடுகட்டி, செத்ததை எடுத்துக்கொள்வார்.
ஒருவரின் மாடு பிறர் மாட்டைக் காயப்படுத்திக் கொன்றுவிட்டால், உயிரோடிருக்கும் மாட்டை விற்றுப்பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொள்வார்கள்.
செத்ததையும் அவர்கள் கூறுபோட்டுக் கொள்வார்கள்.

7. பொருளைத் திருடுவோர் பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?

மனிதரைச் சாகடிப்பவர் எவரும் கொல்லப்படவேண்டும்
தம் தந்தையோ தம் தாயையோ அடிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்
எவரும் என் பலிபீடத்தினின்று அப்புறப்படுத்தப்பட்டு கொல்லப்படுவார்.
ஒருவர் பிறரிடம் பணத்தையோ, பொருள்களையோ பாதுகாப்புக்காக ஒப்படைத்திருக்க, அவை அம்மனிதர் வீட்டிலிருந்து களவுபோய், திருடர் கண்டுபிடிக்கப்பட்டால் திருடர் இருமடங்காக ஈடுசெய்ய வேண்டும்.
திருடர் கண்டுபிடிக்கப்படாவிடில், பிறர் பொருள்களில் வீட்டுத்தலைவர் கைவைத்தாரா இல்லையா என் மெய்ப்பிக்க அவர் கடவுள்முன் நிற்பார்.


8. "தம் தந்தையையோ தம் தாயையோ சபிக்கிற எவரும் கொல்லப்படவேண்டும்." –இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

லேவியர் 20:09
விடுதலைப்பயணம் 21:17
மத்தேயு 15:4
மத்தேயு 20:4
மாற்கு 7:18

9. "கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்" – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

விடுதலைப்பயணம் 21:24
லேவியர் 24:19-20
இணைச்சட்டம் 19:21
மத்தேயு 5:38
மத்தேயு 5:45

10. "அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப்படுத்தாதே. ஏனெனில் எகிப்துநாட்டில் நீங்களும் அன்னியராயிருந்தீர்கள்" – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

விடுதலைப்பயணம் 22:21
லேவியர் 19:33-34
இணைச்சட்டம் 24:17-18
இணைச்சட்டம் 27:19
இணைச்சட்டம் 30:8

11. அடகு மற்றும் வட்டி பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?

ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே.
அவரிடம் வட்டி வாங்காதே.
பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு.
ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை.
உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில் தான் அவர் படுத்துறங்குவார்?

12. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"என் முன்னிலையில் நீங்கள் ................... இருங்கள்."

கெட்டவராய்
நல்லவராய்
தூயவராய்
ஒளியாய்
உப்பாய்

13. கடவுளைப் பற்றிய நீதிச்சட்டங்கள் என்ன?

ஆண்டவருக்கேயன்றி, வேறு தெய்வங்களுக்குப் பலியிடுபவன் அழித்தொழிக்கப்படவேண்டும்.
கடவுளை நீ பழிக்காதே
உன் பெருகிய விளைச்சலையும், வழிந்தோடும் இரசத்தையும் எனக்குப் படைக்கத் தாமதிக்காதே.
உன் புதல்வருள் தலைப்பேறானவனை எனக்கு அர்ப்பணிப்பாய்
என் முன்னிலையில் நீங்கள் தூயவராய் இருங்கள்.

14. கோடிட்ட இடத்தை நிரப்புக: "அவனுடைய மகன் தனக்கென வேறொருத்தியை வைத்துக்கொண்டிருந்தால், -----------, -------------, ----------- இவற்றில் அவளுக்குக் குறை வைக்கலாகாது."

உணவு
உடை
மண உறவின் கடமைகள்
பணம்
வரதட்சணை

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"--------------, ---------------- யாருக்கும் நீ தீங்கிழைக்காதே."

தாய்
தந்தை
விதவை
அனாதை
சகோதரி