மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 65
வேதாகமப் பகுதி : விடுதலை பயணம் 19, 20
முடிவுத் திகதி : 2019-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. சீனாய் மலையிலிருந்து மோசேயின் மூலம் யாக்கோபின் குடும்பத்தாருக்கு ஆண்டவர் சொன்னது என்ன ?

நான் எகிப்திற்கு செய்ததையும், கழுகுகளின் இறக்கைகளின் மேல் உங்களை ஏந்தி என்னிடம் வந்து சேர செய்ததையும் நீங்களே கண்டீர்கள்.
நீங்கள் என் வார்த்தைக்கு செவி சாய்த்து என் உடன்படிக்கையை கடைப்பிடித்தால் அனைத்துலகும் என் உடைமையேயினும், நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச்சொத்து ஆவீர்கள்.
மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும் தூய மக்கள் இனமாகவும் இருப்பீர்கள்.
இவ்வார்த்தைகளே நீ இஸ்ராயேல் மக்களிடம் கூற வேண்டியவை.
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக

2. "ஆண்டவர் கூறியபடியே அனைத்து செய்வோம்." இது யார் கூற்று?

மோசே
இஸ்ராயேல் மக்கள்
ஆரோன்
எகிப்தியர்
ஆபிரகாம்

3. கோடிட்ட இடங்களை நிரப்புக:

"_________________மக்கள் அனைவருக்கும் முன்பாக ஆண்டவர் சீனாய் மலை மேல் இறங்கி வருவார்."

முதலாம் நாள்
இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
நான்காம் நாள்
ஐந்தாம் நாள்

4. ஆண்டவர் மூன்றாம் நாளில் சீனாய் மலை மீது இறங்கி வரும் போது இஸ்ராயேல் மக்கள் கடைப்பிடிக்க வேண்டியது என்னவென்று ஆண்டவர் கூறினார்?

உங்களில் எவரும் மலை மேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தை கூட தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள்
மலையை தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி
அத்தகையவரை யாரும் கையால் தொடாமல், கல்லால் எரிந்தோ அம்பால் எய்தோ கொல்ல வேண்டும்.
அப்படிப்பட்ட கால் நடையோ மனிதரோ சாக வேண்டும்
எக்காளம் முழங்குகையில் குறிப்பிட்டவர்கள் மலைமேல் ஏறி வரட்டும்

5. மூன்றாம் நாள் ஆண்டவர் இறங்கி வந்த போது நடந்தது என்ன?

மூன்றாம் நாள் பொழுது புலரும் நேரத்தில் பேரிடி முழங்கியது. மின்னல் வெட்டியது
மலை மேல் மாபெரும் கார் மேகம் வந்து கவிழ்ந்த்து
எக்காள பேரொலி எழுந்தது
இதனால் பாளையத்தில் இருந்த அனைவரும் நடுநடுங்கினர்.
கடவுளை சந்திப்பதற்காக மோசே மக்களை பாளையத்திலிருந்து வெளி வரச் செய்தார்

6. கோடிட்ட இடங்களை நிரப்புக:

" நீ கீழே இறங்கிச் சென்று ______________மேலேறி வா."

ஆரோனுடன்
மோசேயுடன்
இஸ்ராயேல் மக்களுடன்
ஆபிரகாமுடன்
ஆண்டவருடன்

7. கடவுள் தந்த பத்துக்கட்டளைகள் எங்கே இடம்பெற்றுள்ளன?

விடுதலைப் பயணம் 19: 1-17
விடுதலைப் பயணம் 20: 1-17
தொடக்கநூல் 25: 1-21
இணைச்சட்டம் 5: 1-21
இணைச்சட்டம் 21: 1-21


8. „நானே உன் கடவுளாகிய ஆண்டவர்„ - இது யார் கூற்று ?

மோசே
இஸ்ரயேலர்
கடவுள்
ஆரோன்
பார்வோன்

9. எந்த நாளை ஓய்வு நாளாக அனுசரிக்கவேண்டும்?

இரண்டாம் நாள்
மூன்றாம் நாள்
ஐந்தாம் நாள்
ஆறாம் நாள்
ஏழாம் நாள்

10. அச்சமுற்ற இஸ்ரயேல் மக்கள் மோசேவிடம் சொன்னது என்ன?

நீர் எங்களோடு பேசும்
நாங்கள் கேட்போம்
கடவுள் எங்களோடு பேசவே வேண்டாம்
ஏனெனில் நாங்கள் செத்துப் போவோம்
அஞ்சாதீர்கள்

11. அச்சமுற்ற இஸ்ரயேல் மக்களுக்கு மோசே அளித்த ஆறுதல் வார்த்தைகள் என்ன?

அஞ்சாதீர்கள்
கடவுள்மீது உங்களுக்கு ஏற்படும் அச்சத்தால் நீங்கள் பாவம் செய்யாதிருப்பீர்களா என்று உங்களைச் சோதித்தறியவே அவர் இவ்வாறு தோன்றினார்
கொலை செய்யாதே
விபசாரம் செய்யாதே
களவு செய்யாதே

12. பலிபீடம் பற்றி ஆண்டவர் மோசேவிடம் கூறியது என்ன?

எனக்கென்று மண்ணால் பீடம் அமைத்து, உன் ஆடுகளையும், மாடுகளையும் அதன்மேல் எரி பலிகளாகவும், நல்லுறவுப் பலிகளாகவும் செலுத்து.
நான் என் பெயரை நினைவுப்படுத்தச் செய்யும் இடங்கள் யாவற்றிலும், நான் உன்னிடம் வந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
எனக்காகக் கற்பீடம் அமைத்தால், செதுக்கிய கற்கள்கொண்டு கட்ட வேண்டாம்
ஏனெனில், உனது உளி அதன்மேல் பட்டால், நீ அதனைத் தீட்டுப்படுத்துவாய்.
உன் திறந்தமேனி என் பீடத்தின்மேல் தெரிந்துவிடாதபடி, படிகள் வழியாய் அதன் மேல் ஏறிச்செல்ல வேண்டாம்.

13. எந்த மலையில் பத்துக்கட்டளை மோசேவுக்கு அருளப்பட்டது?

தாபோர் மலை
கெத்சமணி
இமய மலை
விந்திய மலை
சீனாய் மலை

14. சீனாய் மலைக்கு ஏறுமுன் ஆண்டவர் மோசேவுக்கு கூறியது என்ன?

சீனாய் மலைமேல் மக்கள் ஏறிவரமாட்டார்கள்.
ஏனெனில், மலைக்கு எல்லை அமைத்து அதைப் புனிதப்படுத்து, என்று கூறி நீர் எங்களை எச்சரித்துள்ளீர்
நீ கீழே இறங்கிச் சென்று ஆரோனுடன் மேலேறி வா.
குருக்களும், மக்களும் ஆண்டவரிடம் வருவதற்காக எல்லை மீற வேண்டாம்.
இல்லையெனில் ஆண்டவர் அவர்களை அழித்தொழிப்பார்.

15. "நீர் எங்களோடு பேசும். நாங்கள் கேட்போம்" – இது யார் கூற்று?

மோசே
இஸ்ரயேல் மக்கள்
ஆண்டவர்
ஆரோன்
பார்வோன்