1. "மாசா" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?
2. "மெரிபா" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?
3. "இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!" இது யாரின் கூற்று?
4. கோடிட்ட இடத்தை நிரப்புக: "குடிக்க எங்களுக்குத் -------------- கொடும்"
5. தண்ணீருக்காக மோசேவுக்கு ஆண்டவர் கட்டளையிட்டது என்ன?
6. "நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?" இது யார் கூற்று?
7. இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தவர்கள் யார்?
8. இஸ்ரயேலர் வெற்றிபெற மோசே செய்தது என்ன?
9. இஸ்ரயேலர் வெற்றிபெற மோசேயின் கைகளைத் தாங்கிப்பிடித்தவர் யார்?
10. இத்திரோ – சிறு குறிப்பு வரைக
11. மோசேயின் புதல்வர்கள் யாவர்?
12. "கேர்சோம்" என்ற பெயரின் பொருள் என்ன?
13. "எலியேசர்" என்ற பெயரின் பொருள் என்ன?
14. மோசேயின் வெற்றியைக்குறித்து இத்திரோ அகமகிழ்ந்து சொன்னது என்ன?
15. "நீர் செயல்படும் முறை சரியல்ல" இது யார் கூற்று?