மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 63
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 15, 16
முடிவுத் திகதி : 2019-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மோசேயின் வெற்றிப்பாடல் எங்கே இடம்பெற்றுள்ளது?

விப 16:1-18
விப 15:1-18
விப 17:5-10
விப 15: 19-25
விப 15:25-27

2. மிரியாமின் பாடல் எங்கே இடம்பெற்றுள்ளது?

விப 15:18
விப 15:10
விப 15:21
விப 15:27
விப 15:8

3. "ஆண்டவர் என் ஆற்றல்; என் பாடல் அவரே என் விடுதலை" என்ற பாடல் எங்கே இடம்பெற்றுள்ளது?

விப 15:2
திபா 118:14
திபா 118:20
எசா 12:2
எசா 15:2

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

போரில் வல்லவர் ஆண்டவர்; "-----------------" என்பது அவர் பெயராம்.

இயேசு
எல்ஷடாய்
கிறிஸ்து
கடவுள்
ஆண்டவர்

5. மிரியாமின் பாடல் யாது?

ஆண்டவருக்குப் புகழ்பாடுங்கள்
ஏனெனில், அவர் மாட்சியுடன் வெற்றிபெற்றார்.
குதிரையையும் குதிரை வீரனையும் கடலுக்குள் அமிழ்த்திவிட்டார்.
ஆண்டவர் என் ஆற்றல்
ஆண்டவர் என் பாடல்

6. மிரியாம் – சிறுகுறிப்பு வரைக

இறைவாக்கினள்
மோசேயின் சகோதரி
பார்வோனின் தங்கை
மோசேயின் தாய்
ஆரோனின் தங்கை

7. "மாரா" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?

கசப்பு
ஒளி
இருள்
இனிப்பு
உப்பு

8. கசப்பு நீர் எப்படி சுவைப்பெற்றது?

மோசே தண்ணீரைத் தொட்டார்
கடவுளின் வேண்டுகோளின்படி, மோசே மரத்துண்டை தண்ணீரில் எரிந்தார்
மோசே செபித்தார்
ஆரோன் செபித்தார்
மிரியாம் செபித்தார்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"பின்னர் அவர்கள் ஏலிம் சென்றடைந்தனர். அங்கே --------------- நீரூற்றுகளும் ------------ பேரீச்ச மரங்களும் இருந்தன."

நூறு
முப்பது
பன்னிரண்டு
எழுபது
ஐம்பது

10. "சாபத்து" என்ற எபிரேயச் சொல்லின் பொருள் என்ன?

மகிழ்ச்சி
துக்கம்
வாரநாள்
வார இறுதி
ஓய்வு

11. பாலைவனத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு உணவாக என்ன கிடைத்தது?

மன்னா
இட்லி
பொங்கல்
ஆடு
காடை

12. இஸ்ரயேல் மக்கள் பாலைவனத்தில் மோசேவிடமும் ஆரோனிடமும் முறுமுறுத்தது என்ன?

இறைச்சிப் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து, அப்பம் உண்டு நிறைவடைந்து, எகிப்து நாட்டிலேயே ஆண்டவர் கையால் நாங்கள் இறந்திருந்தால் எத்துணை நலமாயிருக்கும்.
ஆனால் இந்தச் சபையினர் அனைவரும் பசியால் மாண்டுபோகவோ இப்பாலைநிலத்திற்குள் நீங்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறீர்கள்.
ஆண்டவர் என்றென்றும் அரசாள்வார்
ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்?
நீர் உமது வலக்கையை நீட்டினீர். நிலம் அவர்களை விழுங்கிவிட்டது.

13. "ஆண்டவர் உங்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே" – இது யார் கூற்று?

ஆரோன்
மிரியாம்
பார்வோன்
மோசே
இஸ்ரயேலர்

14. "மாலையில் நீங்கள் இறைச்சி உண்ணலாம். காலையில் அப்பம் உண்டு நிறைவடையலாம்" – இது யார் கூற்று?

ஆண்டவர்
மோசே
ஆரோன்
இஸ்ரயேலர்
மிரியாம்

15. "மன்னா" – சிறு குறிப்பு வரைக

இந்த எபிரேயச் சொல்லுக்கு „இது என்ன?“ என்று பொருள்
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களுக்கு உணவாகத் தந்த அப்பம் இதுவே
அது கொத்தமல்லி போன்று வெண்ணிறமாய் இருந்தது.
தேன் கலந்து ஆக்கிய பணியாரம் போன்று சுவையாயும் இருந்தது.
வானின்று இறங்கி வந்த உணவு