1. கோடிட்ட இடத்தை நிரப்புக: "------------- ---------- இந்த நாளில் நீங்கள் வெளியேறிச் செல்கிறீர்கள்".
2. "தலைப்பேறு அனைத்தையும் எனக்கு அர்ப்பணம் செய்" – இது யார் கூற்று?
3. புளிப்பற்ற அப்ப விழாவில் கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?
4. புளிப்பற்ற அப்ப விழாவை ஏன் ஆண்டுதோறும் கொண்டாடவேண்டும் என்று மோசே சொல்கிறார்?
5. இஸ்ரயேலர் கடந்து சென்ற கடல் எது?
6. எகிப்திலிருந்து தப்பி செல்லும்போது யாருடைய எலும்புகளை மோசே எடுத்துச்சென்றார்?
7. கோடிட்ட இடத்தை நிரப்புக: "பகலில் ------------------ இரவில் ------------------- மக்களை விட்டு அகலவேயில்லை".
8. "கடவுள் உங்களைச் சந்திக்கும்போது இங்கிருந்து என் எலும்புகளை உங்களோடு எடுத்துச்செல்லுங்கள்". இது யார் கூற்று?
9. பார்வோன் துரத்தி வருவதைக் கண்ட இஸ்ரயேலர் மோசேவிடம் சொன்னது என்ன?
10. பார்வோன் நெருங்கிவருவதைக் கண்டு பயந்த இஸ்ரயேலருக்கு மோசே எப்படி தைரியமூட்டினார்?
11. பார்வோனின் படைகள் நெருங்கி வருகையில் ஆண்டவர் மோசேயை நோக்கி சொன்னது என்ன?
12. இஸ்ரயேல் மக்கள் எவ்வாறு காப்பாற்றப்பட்டனர்?
13. ஆண்டவர் பார்வோன் படையை எவ்வாறு அழித்தார்?
14. "நீர்த்திரள் எகிப்தியர் மேலும் அவர்கள் தேர்கள் குதிரைவீரர் அனைவர் மேலும் திரும்பிவரச் செய்வதற்காக உன் கையைக் கடல்மேல் நீட்டு" – இதுயார் கூற்று?
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: "இது உன் கையில் ------------------- உன் கண்களுக்கிடையில் ---------------------- அமையட்டும்."