மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 61
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 12
முடிவுத் திகதி : 2019-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யூதர்களின் பாஸ்கா விழா பற்றி எங்கே குறிப்பிடப்பட்டுள்ளது?

விடுதலைப்பயணம் 10
விடுதலைப்பயணம் 11
விடுதலைப்பயணம் 12
விடுதலைப்பயணம் 13
விடுதலைப்பயணம் 14

2. பாஸ்கா என்ற எபிரேய சொல்லின் பொருள் என்ன?

உயிர்ப்பு ஞாயிறு
இயேசுவின் பாடுகள்
கடந்து செல்லல்
இயேசுவின் சீடர்கள் கொண்டாடிய விழா
புளிப்பற்ற அப்ப விழா

3. பாஸ்கா நாளில் பலி செலுத்தப்படும் ஆடு பற்றி ஆண்டவர் மோசேக்கும், ஆரோனுக்கும் கூறியது என்ன?

ஆண்டின் முதல் மாதம் பத்தாம் நாள் குடும்பத்திற்கு ஒரு ஆடு, வீட்டிற்கு ஒரு ஆடு என்று தேர்ந்தெடுத்து கொள்ளட்டும்.
ஒரு ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆட்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரை சேர்த்து கொள்ளட்டும்.
ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும்.
தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ, செம்மறியாடாகவோ இருக்கலாம்.
இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதைவைத்து பேணுங்கள். அந்நாள் மாலைமங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்டவேண்டும்.

4. பாஸ்கா ஆட்டினை எப்படி உண்ண வேண்டுமென ஆண்டவர் கூறுகின்றார்?

இறைச்சியை அந்த இரவிலே உண்ண வேண்டும்.
நெருப்பிலே அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும், கசப்பு கீரையோடும் உண்ண வேண்டும்.
அதை பச்சையாகவோ, நீரில் வேக வைத்தோ உண்ணாமல் தலை, கால்கள், உட்பாகங்கள் முழுவதுமாக நெருப்பில் வாட்டி அதனை உண்ணுங்கள்.
அதில் எதையுமே விடியற்காலைவரை மீதி வைக்க வேண்டாம்.
காலை வரை எஞ்சி இருப்பதை நெருப்பால் சுட்டெரியுங்கள்

5. கோடிட்ட இடங்களை நிரப்புக:

இது ஆண்டவரின்_________.

நாள்
பாஸ்கா
சீடர்கள்
செம்மறி
பாடுகள்

6. பாஸ்கா இரவில் ஆண்டவர் என்ன செய்ய போவதாக கூறுகிறார்?

நான் இன்று இரவிலே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்கு வரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன்.
எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின் மேலும் நான் தீர்ப்பிடுவேன்.
இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும்.
நான் இரத்தத்தை கண்டு உங்களை கடந்து செல்வேன்.
எகிப்து நாட்டில் நான் அவர்களை சாகடிக்கும்போது கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது.

7. புளிப்பற்ற அப்ப விழாவைப் பற்றி ஆண்டவர் கூறுவதென்ன?

இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும்.
இந்நாள் இயேசுவின் பாடுகளின் நாள்.
இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள்.
இதை இயேசுவின் உயிர்ப்பு நாளில் கொண்டாடுவேன்.
இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக.


8. புளிப்பற்ற அப்ப விழாவில் எப்படி உண்ண வேண்டுமென ஆண்டவர் கூறுகிறார்?

ஏழு நாள்களுக்கு புளிப்பற்ற அப்பங்களையே உண்ணுங்கள்.
முதல் நாளிலே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து அகற்றி விடுங்கள்.
ஏனெனில் முதல் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரை புளித்த அப்பத்தை உண்பவன் இஸ்ரயேலிலிருந்து விலக்கி வைக்கப்படுவான்.
ஒவ்வொருவரும் உண்ண தேவையானதை மட்டும் நீங்கள் தயார் செய்யலாம்.
ஏழு நாள்களாக உங்கள் வீடுகளில் புளித்த மாவு காணப்படவே கூடாது. நீங்கள் புளித்த அப்பம் உண்ணாமல் உங்கள் உறைவிடங்களில் எல்லாவற்றிலும் புளிப்பற்ற அப்பத்தையே உண்ணுங்கள்.

9. மோசே இஸ்ரயேல் பெரியோர்களிடம் அந்த முதல் பாஸ்கா நாளில் கூறியது என்ன?

நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்கு தேவையானப்படி ஓர் ஆட்டுக்குட்டியை தேர்ந்தெடுத்து கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.
ஈசோப்புக் கொத்தை எடுத்து, கிண்ணத்திலுள்ள இரத்தத்தில் அதை தோய்த்து கதவின் மேல்சட்டத்திலும், இருநிலை கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தை பூசுங்கள்.
காலை வரையிலும் தன் வீட்டின் கதவை தாண்டி உங்களில் எவனும் வெளியே போகக்கூடாது.
ஆண்டவர் எகிப்தை தாக்குமாறு கடந்து செல்கையில்,கதவின் மேல்சட்டத்திலும், இரு நிலை கால்களிலும் கிண்ணத்திலுள்ள இரத்தத்தை கண்டு அக்கதவை கடந்து செல்வார்.
இவ்வார்த்தையை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நிலையான நியமமாக கடைபிடியுங்கள்

10. கோடிட்ட இடங்களை நிரப்புக:

"___________ உங்கள் வீடுகளில் புகுந்து தாக்குமாறுஅவர் அனுமதிக்க மாட்டார்."

கடவுள்
சாத்தான்
மோசே
ஆரோன்
அழிப்பவன்

11. எகிப்து நாட்டின் அழுகுரல் கேட்டு பார்வோன் மன்னன் மோசேயையும், ஆரோனையும் பார்த்து கூறியது என்ன?

நீங்களும் இஸ்ரயேல் மக்களும் எழுந்து என் மக்களிடம் இருந்து வெளியேறிச் செல்லுங்கள்.
போங்கள். நீங்கள் சொன்னபடியே ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்.
நீங்கள் கேட்டபடியே உங்கள் ஆட்டுமந்தையையும், உங்கள் மாட்டுமந்தையையும் கூட்டி கொண்டு செல்லுங்கள்.
போய்விடுங்கள், எனக்கும் ஆசி கூறுங்கள்.
நீங்கள் போகலாகாது.

12. இடம்பெயர்ந்து சென்ற இஸ்ரயேலர் எத்தனை பேர்?

ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர்
ஏறத்தாழ ஏழு இலட்சம் பேர்
குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர்
ஏறத்தாழ எட்டு இலட்சம் பேர்
ஆண்கள், பெண்கள் ஏறத்தாழ ஆறு இலட்சம் பேர்

13. எத்தனை ஆண்டுகள் இஸ்ரயேல் மக்கள் எகிப்தில் குடியிருந்தனர்?

450 ஆண்டுகள்
460 ஆண்டுகள்
440 ஆண்டுகள்
430 ஆண்டுகள்
420 ஆண்டுகள்

14. இஸ்ராயேல் மக்கள் எங்கிருந்து எங்கு இடம்பெயர்ந்து சென்றனர்?

எகிப்திலிருந்து பெத்லகேமுக்கு
இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு
இஸ்ராயேலிலிருந்து எகிப்துக்கு
பெத்லகேமிருந்து இந்தியாவுக்கு
யூதேயாவிலிருந்து சமாரியாவுக்கு

15. விடுதலை பயணத்தில் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தியது யார்?

மோசே
ஆரோன்
ஈசாக்கு
இரபேக்கா
மிதியான்