மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 60
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 9, 10, 11
முடிவுத் திகதி : 2018-12-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. பார்வோன் அனுபவித்த ஐந்தாம் பெருந்துன்பம் என்ன?

எகிப்தியரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன
இஸ்ரயேலரின் கால்நடைகளெல்லாம் மடிந்தன
இஸ்ரயேல் மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை
எகிப்திய மக்களின் கால்நடைகளிலோ எதுவும் சாகவில்லை
இஸ்ரயேல் மற்றும் எகிப்து மக்களின் கால்நடைகளெல்லாம் மடிந்தன

2. பார்வோன் அனுபவித்த ஆறாம் பெருந்துன்பம் என்ன?

மோசேவும், ஆரோனும் அடுப்பிலிருந்து சாம்பலை வாரிக்கொண்டு பார்வோன் முன்னிலையில் சென்று நின்றனர்
மோசே வானத்தில் அதனைத் தூவினார்
மனிதர் மேலும் விலங்குகள் மேலும் அது வெடித்துப் புண்ணாகக்கூடிய கொப்புளங்களாக மாறிற்று
கொப்புளம் தோன்றியதால் மந்திரவாதிகள் மோசேயின் முன் நிற்க இயலவில்லை.
ஏனெனில், மந்திரவாதிகள் மேலும் எல்லா எகிப்தியர்மேலும் கொப்புளம் கண்டிருந்தது.

3. பார்வோன் அனுபவித்த ஏழாம் பெருந்துன்பம் என்ன?

மோசே தம்கோலை வானோக்கி நீட்டவே, ஆண்டவர் இடி முழக்கங்களையும், கல்மழையையும் அனுப்பினார்
நிலத்தில் நெருப்பு பாய்ந்து வந்தது. எகிப்து நாடெங்கும் கல்மழை பெய்வித்தார் ஆண்டவர். கல்மழை பெய்தது.
ஒரு நாடாக எகிப்து உருவான காலந்தொடங்கி அந்நாள்வரை அங்கு இருந்திராத அளவு மிகக் கடுமையான கல்மழை பெய்ய அதனிடையே மின்னல் வெட்டிக் கொண்டிருந்தது.
எகிப்து நாடு முழுவதிலும் மனிதர் முதல் விலங்கு வரை வயல்வெளியில் இருந்த அனைத்தையும் கல்மழை தாக்கியது. மேலும் வயல்வெளியில் பயிர் பச்சை யாவற்றையும் பாழ்படுத்தியது. வயல்வெளி மரங்கள் அனைத்தையும் முறித்தெறிந்தது.
இஸ்ரயேல் மக்கள் தங்கியிருந்த கோசேன் நிலப்பகுதியில் மட்டும் கல்மழை பெய்யவில்லை.

4. பார்வோன் அனுபவித்த எட்டாம் பெருந்துன்பம் என்ன?

மோசே எகிப்து நாட்டின்மேல் தம் கோலை நீட்டவே, ஆண்டவரும் அன்றைய பகல் இரவு முழுவதும் நாட்டில் கீழ்க்காற்று வீசச்செய்தார்.
காலையானபோது கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டு வந்தது.
மிகப்பெருந்திரளான வெட்டுக்கிளிகள் எகிப்து நாடெங்கும் வந்திறங்கி எகிப்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவின.
இதுபோன்று அதற்கு முன்போ பின்போ இருந்ததில்லை. அவை நாடெங்கும் நிரம்பிவிட்டதால், நாடே இருண்டு போயிற்று.
கல்மழைக்குத் தப்பி நாட்டில் நின்றிருந்த பயிர் பச்சை முழுவதையும், மரத்தின் பழங்கள் அனைத்தையும் அவை தின்றுவிட்டன. எகிப்து நாடெங்குமே மரங்களிலும் வயல்வெளி பயிர்களிலும் பச்சையாக எதுவுமே விட்டுவைக்கப்படவில்லை.

5. பார்வோன் அனுபவித்த ஒன்பதாம் பெருந்துன்பம் என்ன?

மோசே வானத்தை நோக்கித் தம் கையை நீட்டினார்.
மூன்று நாளாக எகிப்து நாட்டைக் காரிருள் கவ்வியிருந்தது.
மூன்று நாள்களாக ஒருவரை ஒருவர் பார்க்க முடியவில்லை.
தான் அமர்ந்த இடத்திலிருந்து எவனும் எழும்பவும் இல்லை.
மாறாக, இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் அவர்கள் உறைவிடங்களில் வெளிச்சம் இருந்தது.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நாட்டிலுள்ள --------------, --------------, ----------------, ---------------, ------------- ஆகிய உன் கால்நடைகள் மேல் கடவுளின் கைவன்மை மிகக்கொடிய கொள்ளை நோயாக வரப்போகிறது."

குதிரைகள்
கழுதைகள்
ஒட்டகங்கள்
எருதுகள்
ஆடுகள்

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நீங்கள் போய் ஆண்டவருக்கு வழிபாடு செலுத்துங்கள். உங்கள் ---------------, ------------ மட்டும் விட்டுச் செல்லுங்கள். உங்களுடன் உங்கள் --------------கூடப் போகலாம்."

ஆட்டுமந்தையையும்
மாட்டுமந்தையையும்
பறவைகளும்
மனிதர்களும்
குழந்தைகளும்


8. எகிப்து நாட்டில் காரிருள் எத்தனை நாள்கள் கவ்வியிருந்தது?

இரண்டு நாள்கள்
மூன்று நாள்கள்
நான்கு நாள்கள்
ஐந்து நாள்கள்
ஆறு நாள்கள்

9. "உங்களில் ஆண்கள் மட்டும் போய் ஆண்டவருக்கு வழிபாடு செய்யுங்கள்." இது யார் கூற்று?

மோசே
ஆரோன்
பார்வோன்
ஆண்டவர்
இஸ்ரயேல் மக்கள்

10. பார்வோன் அனுபவித்த பத்தாம் பெருந்துன்பம் யாது?

காரிருள் பரவியது
பார்வோன் தலைமகன் முதல் மாவரைக்கும் கற்களுக்குப்பின் அமர்ந்திருக்கும் அடிமைப் பெண்ணின் தலைமகன்வரை உள்ள முதற்பேறு அனைத்தும் இறந்துவிடுவர்.
விலங்குகளின் ஆண்பால் தலையீற்று அனைத்தும் இறந்துவிடும்
வெட்டுக்கிளிகள் நாட்டை நிரப்பியது.
கல்மழை பெய்தது

11. பத்து பெருந்துன்பங்களும் எந்த நாட்டில் நடைபெற்றது?

இஸ்ரயேல்
பெத்லகேம்
தமிழ்நாடு
எகிப்து
யூதேயா

12. இஸ்ரயேல் மக்களை விடுவிக்க வேண்டி, பார்வோன் மன்னனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது யார்?

ஆபிரகாம்
மோசே
இஸ்ரயேல் மக்கள்
ஆரோன்
பார்வோன்

13. இறுதியில் வெட்டுக்கிளிகள் எங்கே வீசியெறியப்பட்டன?

செங்கடலில்
தரையில்
கீழே
வானத்தில்
அரண்மனையில்

14. ஆண்டவருக்கு பலி செலுத்த, யார் யாரையெல்லாம் அழைத்துக்கொண்டு போக, மோசே எண்ணினார்?

இளைஞர்கள்
முதியவர்கள்
புதல்வர், புதல்வியர்
ஆட்டுமந்தைகள்
மாட்டுமந்தைகள்

15. "பார்வோன் உனக்குச் செவி சாய்க்கமாட்டான். எகிப்து நாட்டில் என் அருஞ்செயல்கள் பெருகிட இது ஏதுவாகும்." இது யார் கூற்று?

மோசே
ஆரோன்
ஆண்டவர்
பார்வோன்
ஆபிரகாம்