மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 5
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி: அதிகாரம்: 9-10
முடிவுத் திகதி : 2014-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இயேசு முடக்குவாதமுற்றவரை நோக்கி கூறியது யாது?

என்னைப் பின்பற்றி வா
நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ
என் பாவங்கள் மன்னிக்கப்பட்டன
எழுந்து நட
மகனே துணிவோடிரு. உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன

2. உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன் என்று இயேசு யாரிடம் கூறுகின்றார்?

முடக்குவாதமுற்றவரிடம்
மத்தேயுவிடம்
மக்களிடம்
மறைநூல் அறிஞர்களிடம்
ஒரு பெண்ணிடம்

3. மத்தேயுவின் வீட்டில் இயேசுவுடன் பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் யார்?

மத்தேயு
வரிதண்டுபவர்கள், பாவிகள்
திருமண விருந்தினர்கள்
பரிசேயர்கள் மறைநூல் அறிஞர்கள்
இயேசுவின் சீடர்கள்

4. "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்ற கேள்விக்கு இயேசு கூறிய பதில் என்ன?

நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை
மணமகன் தங்களோடு இருக்கும் வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா?
நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்
பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன்
உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?

5. கோடிட்ட இடத்தை நிரப்புக
எவரும் பழைய ............. புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.

தோற்பையில்
மதுவில்
வீட்டில்
ஆடையில்
பாதையில்

6. நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே போதும் நலம்பெறுவேன் என்று சொல்லியப் பெண்மணி எந்நோயால் துன்புற்றாள்?

பன்னிரு ஆண்டுகளாய் புற்று நோயால்
பன்னிரு ஆண்டுகளாய் முடக்குவாதத்தால்
பன்னிரு ஆண்டுகளாய் பேய்பிடித்ததால்
பன்னிரு ஆண்டுகளாய் காய்ச்சலால்
பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால்

7. “இயேசு உள்ளே சென்று சிறுமியின் கையைப் பிடித்தார். அவளும் உயிர் பெற்று எழுந்தாள்”, என்று நற்செய்தி சொல்லுகின்றது: அச்சிறுமியின் தந்தை இயேசுவிடம் என்ன கேட்டார்?

என் மகள் இறந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன.
நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்
என் மகள் பேயால் தள்ளப்படுகின்றாள்
என் மகள் இப்பொழுதுதான் இறந்தாள்
என் மகள் இறக்கவில்லை, உறங்குகிறாள்


8. நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று கூறி இயேசு இரக்கம் பெற்று குணம் பெற்றவர்கள் யார்?

முடக்குவாதமுற்ற இருவர்
தொழுநோயாளர்கள் இருவர்
பிச்சைக்காரர்கள் இருவர்
பார்வையற்றோர் இருவர்
சீடர்கள் இருவர்

9. இயேசு தம் சீடர் பன்னிருவருக்கும் என்ன அதிகாரம் அளித்தார்?

வரி வசூலிக்க
திருச்சபைகளை நிறுவ
ஆடுகளை மேய்க்க
நாடுகளை ஆட்சிசெய்ய
தீய ஆவிகளை ஓட்ட, நோய் நொடிகளைக் குணமாக்க

10. அனுப்பப்பட்டவர் எதிர்நோக்கும் துன்பங்கள் எவை ?

மனிதர்கள் உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள். தங்கள் தொழுகைக்கூடங்களில் உங்களைச் சாட்டையால் அடிப்பார்கள்.
உண்ண உணவில்லாமல் பட்டினி போடுவார்கள்
என்பொருட்டு ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் உங்களை இழுத்துச்செல்வார்கள்.
சகோதரர் சகோதரிகள் தம் உடன் சகோதரர் சகோதரிகளையும் தந்தையர் பிள்ளைகளையும் கொல்வதற்கென ஒப்புவிப்பார்கள்.
என் பெயரின் பொருட்டு உங்களை எல்லாரும் வெறுப்பர்.

11. இயேசு யாருக்கு அஞ்ச வேண்டாம் என்று தம் சீடர்களிடம் கூறுகின்றார்?

மக்களுக்கும் பரிசேயர்களுக்கும்
யூத சங்கத்தினர்களுக்கு
ஆன்மாவைக் கொல்ல இயலாமல், உடலை மட்டும் கொல்பவர்களுக்கு
தாய் தந்தையர்களுக்கும், மாமியாருக்கும் மருமகளுக்கும்
சுங்கச்சாவடியில் பணம் வசூலிப்பவர்களுக்கு

12. நாம் இருளில் சொல்வதையும் காதோடு காதாய் கேட்பதையும் எப்படி அறிவிக்க வேண்டுமென்று இயேசு கூறுகின்றார்?

விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது என்று பாதையில் அறிவிக்க வேண்டுமென்று
ஒளியில், வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவிக்க வேண்டுமென்று
ஆளுநர்களிடமும் அரசர்களிடமும் அறிவிக்க வேண்டுமென்று
எல்லா நகர்களிலும் ஊர்கிளிலும் அறிவிக்க வேண்டுமென்று
மலை முகட்டிலிருந்து அறிவிக்க வேண்டுமென்று

13. “மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன்“ என்ற வாக்கியம் எந்நூலில் உள்ளது?

தொடக்க நூல் 20:5
எசாயா 10:5
மத்தேயு 10:32
திருவெளிப்பாடு 10:15
மத்தேயு 5:5

14. இயேசு சீடர்களை பணிக்கு அனுப்பும்போது என்ன சொல்லி அனுப்புகிறார்?

வானத்தந்தையைப் போல அன்பாய் இருங்கள்
அன்னை மரியாவைப் போல பணிவாயிருங்கள்
பாம்பைப்போல முன்மதி உடையவர்களாய் இருங்கள்
யோசேப்பைப்போல நேர்மையாய் இருங்கள்
புறாவைப்போலக் கபடு அற்றவர்களாக இருங்கள்

15. இயேசுவின் பொருட்டு யார் யாருக்கு எதிராக பிளவு ஏற்படும்?

தந்தைக்கு எதிராக மகன்
அரசனுக்கு எதிராக மக்கள்
தாய்க்கு எதிராக மகள்
மாமியாருக்கு எதிராக மருமகள்
குருக்களுக்கு எதிராக மக்கள்