மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 59
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 7, 8
முடிவுத் திகதி : 2018-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. மோசேயின் வாக்கினன் யார்?

பார்வோன்
ஆரோன்
கடவுள்
சிமியோன்
ஆபிரகாம்

2. பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது மோசேவிற்கு வயது என்ன?

அறுபது
எழுபது
எண்பது
தொண்ணூறு
நூறு

3. பார்வோனிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது ஆரோனிற்கு வயது என்ன?

அறுபத்தி மூன்று
எழுபது
எழுபத்தி மூன்று
எண்பது
எண்பத்து மூன்று

4. அருஞ்செயல் ஒன்று காட்டு என்று பார்வோன் சொன்னவுடன், ஆரோன் செய்தது என்ன?

ஆரோன் தமது கோலை பார்வோன் முன்னிலையில் விட்டெறிந்தார்
ஆரோன் விட்டெறிந்த கோல் பாம்பாக மாறியது
எகிப்திய மந்திரவாதிகளும் தங்கள் கோல்களை கீழே இட, அவை பாம்புகளாக மாறின
ஆனால் ஆரோனின் கோல் அவர்களின் கோல்களை விழுங்கி விட்டது
மோசே தமது கோலை பார்வோன் முன் விட்டெறிந்தார்

5. மனம் இறுகிப்போன பார்வோனுக்கு, கடவுள் தந்த பெருந்துன்பங்கள் எத்தனை?

ஏழு
எட்டு
ஒன்பது
பத்து
பதின்னொன்று

6. பார்வோன் அனுபவித்த முதல் பெருந்துன்பம் என்ன?

ஆரோன் கோலை உயர்த்தி நைல் நதிமேல் அடித்தார்
நைல் நதி முழுவதும் இரத்தமாக மாறியது
நைல் நதியிலுள்ள மீன்கள் செத்துப்போக, நைல் நதி நாற்றம் எடுத்தது
எகிப்தியர் நைல் நதி நீரை பருக முடியாமல் போயிற்று
எகிப்து நாடு முழுவதும் இரத்தமயமாகவே இருந்தது

7. பார்வோன் அனுபவித்த இரண்டாவது பெருந்துன்பம் என்ன?

ஆரோன் தன் கையை எகிப்திய நீர் நிலைகளின் மேல் நீட்டவே, தவளைகள் ஏறி வந்து, எகிப்து நாட்டை நிரப்பின
பார்வோன் வீட்டிற்குள்ளும் படுக்கையறைக்குள்ளும் தவளைகள் ஏறி வந்தன
அலுவலர் வீட்டிற்குள்ளும் தவளைகள் புகுந்தன
குடிமக்கள் வீட்டிலும், அடுப்புகளிலும் மாவு பிசையும் தொட்டிகளிலும் தவளைகள் ஏறி வந்தன
எனவே அந்நாடு நாற்றம் எடுத்தது


8. பார்வோன் அனுபவித்த மூன்றாவது பெருந்துன்பம் என்ன?

கோல் ஏந்திய தம் கையை நீட்டி, ஆரோன் நிலத்தின் புழுதியை அடிக்க, மனிதர் மேலும் விலங்குகள் மேலும், கொசுக்கள் தோன்றின
எகிப்து நாடெங்கும் நிலத்திலுள்ள புழுதியெல்லாம் கொசுக்களாக மாறிற்று
கொசுக்கள் தோன்றுவதற்காக மந்திரவாதிகளும் தங்கள் வித்தையால், அதுபோலவே செய்ய முயன்றனர்
ஆனால் அது அவர்களால் இயலாமல் போயிற்று
கொசுக்கள் மனிதர் மேலும் விலங்குகள் மேலும் தங்கியிருந்தன

9. “இது கடவுளின் கைவன்மையே” - இது யார் கூற்று?

பார்வோன்
மந்திரவாதிகள்
மோசே
ஆரோன்
ஈசாக்

10. பார்வோன் அனுபவித்த நான்காவது பெருந்துன்பம் என்ன?

ஈக்கள் பார்வோன் வீட்டிலும் அவனுடைய அலுவலர் வீட்டிலும் எகிப்து நாடெங்கும் திரளாய் பெருகின
ஈக்களால் நாடே பாழாகிவிட்டது
இது கடவுளின் கைவன்மையே
அதிகாலையில் நீ எழுந்து பார்வோனுக்காக காத்து நில்
அவன் நீராட தண்ணீரை நோக்கி வருவான்

11. “போங்கள், ஆனால் இந்நாட்டிலேயே உங்கள் கடவுளுக்கு பலியிடுங்கள்” – பார்வோனின் இந்த கூற்றுக்கு மோசேயின் பதில் என்ன?

அது முறையல்ல
அவ்வாறு செய்தால் எகிப்தியருக்கு அருவருப்பானதை எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நாங்கள் பலியிடுவதாகும்
எகிப்தியருக்கு அருவருப்பானதை அவர்கள் கண்முன் நாங்கள் அப்படி பலியிட்டால், அவர்கள் எங்களை கல்லால் எறியாமல் விடுவார்களா?
பாலை நிலத்தில் நாங்கள் மூன்று நாட்கள் வழி நடந்து, எங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அவர் எங்களுக்கு சொல்வது போல் பலியிடுவோம்
நானே ஆண்டவர்

12. “உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு நீங்கள் பாலை நிலத்தில் பலியிட நான் உங்களை போகவிடுவேன், ஆனால் வெகுதூரம் சென்று விடாதீர்கள், மேலும் எனக்காகவும் மன்றாடுங்கள்” – இது யார் கூற்று?

ஆண்டவர்
மோசே
ஆரோன்
பார்வோன்
ஆபிரகாம்

13. ஈக்கள் அகன்றவுடன் பார்வோன் மன்னன் செய்தது என்ன?

பார்வோன் மன்னன் இஸ்ரயேல் மக்களை பலியிட அனுமதித்தான்
பார்வோன் மன்னன் ஆண்டவரை ஏற்றுக் கொண்டான்
பார்வோன் மன்னன் மோசேயிடம் மன்னிப்பு கேட்டான்
இம்முறையும் பார்வோன் தன் மனதை கடினப்படுத்திக் கொண்டான்
மக்களை அவன் போக விடவில்லை

14. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“உனது கோலை எடு, எகிப்து நாட்டிலுள்ள ____, _______, _______, ______ ஆகிய அனைத்து நீர் நிலைகளின் மேலும் உன் கையை நீட்டு”

ஆறுகள்
கால்வாய்கள்
குளங்கள்
நீர் தேக்கங்கள்
வீடுகள்

15. பார்வோனை சந்திக்க தயங்கிய மோசேயிடம் ஆண்டவர் கூறியது என்ன?

பார்! நான் உன்னை பார்வோனுக்கு கடவுளாக வைத்துள்ளேன்
உன் சகோதரன் ஆரோன் உன் வாக்கினனாக இருப்பான்
நான் உனக்கு கட்டளையிடுவதெல்லாம் நீ எடுத்து சொல்வாய்
பார்வோன் தன் நாட்டினின்று இஸ்ரயேல் மக்களை போகவிடும்படி அவனிடம் உன் சகோதரன் ஆரோன் பேசுவான்
நான் பார்வோனின் மனத்தை கடினப்படுத்துவதோடு எகிப்து நாட்டில் என்னுடைய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் பெருக செய்வேன்