மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 58
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 5, 6
முடிவுத் திகதி : 2018-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஆண்டவருக்கு விழா எடுக்குமாறு மக்களைப் போகவிடு என்று சொன்ன மோசேவுக்கும் ஆரோனுக்கும் பார்வோன் மன்னன் கூறியதென்ன?

யார் அந்த ஆண்டவர்?
அவரது பேச்சைக் கேட்டு இஸ்ரயேலை நாம் ஏன் அனுப்ப வேண்டும்?
அந்த ஆண்டவரை நான் அறியேன்
இஸ்ரயேலரை நான் போக விடவும் மாட்டேன்
எபிரேயரின் கடவுள் எங்களை சந்தித்தார்

2. இஸ்ரயேல் மக்களின் விடுதலைக்காக பார்வோன் மன்னனிடம் போய் பேசியது யார்?

ஆபிரகாம்
மோசே
ஆரோன்
பார்வோனின் மகள்
இஸ்ரயேல் மக்கள்

3. கடவுளுக்கு பலியிட போகவிடு என்று சொன்னவுடன் பார்வோன் மன்னன் மேற்பார்வையாளர் மூலமாக ஆணையிட்டது என்ன?

செங்கல் செய்வதற்காக இம்மக்களுக்கு இதுவரை வைக்கோல் கொடுத்து வந்ததுபோல் இனி செய்ய வேண்டாம்
அவர்களே போய் வைக்கோல் சேகரித்துக் கொள்ளட்டும்
ஆயினும் இதுவரை அவர்கள் அறுத்துகொடுத்த அளவு செங்கல் தயாரித்து கொடுப்பது அவர்கள் கடமை
அதிலிருந்து எதுவும் குறையக்கூடாது
அந்த ஆள்களுக்கு வேலைப்பளுவை இன்னும் மிகுதியாக்குங்கள்

4. “சோம்பேறிகள், நீங்கள் சோம்பேறிகள்” – இது யார் கூற்று?

மோசே
ஆரோன்
ஆபேல்
கடவுள்
பார்வோன்

5. செங்கல் அறுக்க வைக்கோல் தராமல் பார்வோன் கொடுமைப்படுத்திய பின், ஆரோனையும் மோசேயையும் பார்த்து இஸ்ரயேல் மக்கள் கடிந்து கூறியது என்ன?

நாங்கள் போய் ஆண்டவருக்கு பலியிட வேண்டும்
ஆண்டவர் உங்களை கவனித்து கொள்ளட்டும்;
உங்களுக்கு தீர்ப்பு வழங்கட்டும்
ஏனெனில் பார்வோன் முன்னிலையிலும் அவனுடைய அலுவலர் முன்னிலையிலும் நம்மவர் வாடையே பிடிக்காதவாறு நீங்கள் செய்து விட்டீர்கள்
நம்மை கொல்வதற்கான வாளை அவர்கள் கையில் வைத்து விட்டீர்கள்

6. இஸ்ரயேல் மக்கள் துன்பத்தைக் கண்டு மோசே ஆண்டவரிடம் முறையிட்டது என்ன?

என் தலைவரே! இம்மக்களுக்கு ஏன் தொல்லைக் கொடுக்கிறீர்?
எதற்காக இப்படி என்னை அனுப்பிவைத்தீர்?
ஆண்டவர் உங்களை கவனித்து கொள்ளட்டும்
உமது பெயரால் பேசுவதற்காக பார்வோனிடம் வந்ததிலிருந்தே இம்மக்களுக்கு அவனால் இடற்பாடுதான் ஏற்பட்டுள்ளது
அத்துடன் நீர் உம்மக்களுக்கு விடுதலையளிக்கவும் இல்லை

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“நானே _______”

ஆண்டவர்
ஒளி
உப்பு
திராட்சை செடி
உணவு

8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“_______________, _________________ , _______________ நான் கொடுப்பதாக வாக்களித்த அந்த நாட்டிற்கு நான் உங்களை கூட்டிக்கொண்டு செல்வேன்.”

மோசேவுக்கும்
ஆரோனுக்கும்
ஆபிரகாமுக்கும்
ஈசாக்குக்கும்
யாக்கோபுக்கும்

9. விடுவிப்பேன் என்ற ஆண்டவரின் உறுதிமொழியை மோசே சொன்னவுடன் இஸ்ரயேல் மக்களின் எதிர்வினை என்ன?

மோசேவிற்கு கீழ்ப்படிந்தனர்
மோசேவிற்கு செவி கொடுக்கவில்லை
ஆண்டவரைப் போற்றினர்
பார்வோனிடம் சண்டையிட்டனர்
இஸ்ரயேல் மக்கள் மகிழ்ந்தனர்

10. “நானோ பண்பட்ட உதடுகள் இல்லாதவன்” – இது யார் கூற்று?

ஆபிரகாம்
ஈசாக்
யாக்கோபு
மோசே
ஆரோன்

11. இஸ்ரயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர் யார்?

அனோக்கு
பல்லூ
எட்சரோன்
கர்மி
சிமியோன்

12. சிமியோனின் புதல்வர்கள் யார்?

எம்முவேல்
யாமின்
ஓகாது
யாக்கின்
சோவார்

13. லேவியின் புதல்வர்கள் யார்?

கேர்சோன்
கோகாத்து
மெராரி
ரூபன்
சிமியோன்

14. ஆரோன் மோசே எந்த மூதாதையரின் வழிவந்தவர்கள்?

ரூபன்
சிமியோன்
லேவி
யாமின்
சவுல்

15. ஆரோன் மற்றும் மோசேவின் தாய் யார்?

ரெபேக்கா
ராக்கேல்
தீனா
பித்தியா
யோக்கபேது