மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 57
வேதாகமப் பகுதி : விடுதலைப் பயணம் 3, 4
முடிவுத் திகதி : 2018-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. இத்திரோ – சிறு குறிப்பு வரைக

இவர் மிதியான் நாட்டைச் சார்ந்தவர்
இவர் ஓர் அர்ச்சகர்
இவர் மோசேவின் மாமனார்
இவருக்கு இரகுவேல் என்ற பெயரும் உண்டு
இவரின் மகள் சிப்போரா

2. ஆண்டவரின் தூதர் மோசேவுக்கு எந்த மலையில் தோன்றினார்?

கல்வாரி மலை
ஓரேபு மலை
சீனாய் மலை
கார்மேல் மலை
தாபோர் மலை

3. ஆண்டவர் மோசேவிடம் கூறியது என்ன?

எகிப்தில் என் மக்கள்படும் துன்பத்தை என் கண்களால் கண்டேன்.
அடிமை வேலைவாங்கும் அதிகாரிகளை முன்னிட்டு அவர்கள் எழுப்பும் குரலையும் கேட்டேன்
அவர்களின் துயரங்களை நான் அறிவேன்
இஸ்ரயேல் மக்களின் அழுகுரல் என்னை எட்டியுள்ளது
எனவே இப்போதே போ; இஸ்ரயேல் இனத்தவராகிய என் மக்களை எகிப்திலிருந்து நடத்திச் செல்வதற்காக நான் உன்னைப் பார்வோனிடம் அனுப்புகிறேன்.

4. தான் யார் என்று கடவுள் விளக்குகிறார்?

இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே
இருக்கின்றவர் நானே
மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்
இங்கே அணுகிவராதே

5. “பார்வோனிடம் செல்வதற்கும், இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து அழைத்துப் போவதற்கும் நான் யார்?” மோசேவின் இந்த கேள்விக்கு கடவுளின் பதில் என்ன?

ஏனெனில் நீ நின்று கொண்டிருக்கிற இந்த இடம் புனிதமான நிலம் 3:5
நான் உன்னோடு இருப்பேன்
மேலும் இம்மக்களை எகிப்திலிருந்து அழைத்துச் செல்லும்போது நீங்கள் இம்மலையில் கடவுளை வழிபடுவீர்கள்
நானே உன்னை அனுப்பினேன் என்பதற்கு அடையாளம் இதுவே
உங்கள் மூதாதையரின் கடவுள்

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“இங்கே அணுகி வராதே; உன் பாதங்களிலிருந்து -------------------அகற்றிவிடு”

விரலை
மிதியடிகளை
காலை
முள்ளை
கல்லை

7. யார் வாழும் நாட்டிற்கு உங்களை அழைத்துச்செல்வேன் என்று இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் உறுதியளிக்கிறார்?

கானானியர்
இத்தியர்
எமோரியர்
பெரிசியர்
இவ்வியர்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“எபிரேயரின் கடவுளாகிய ஆண்டவர் எங்களைச் சந்தித்தார். இப்போதே நாங்கள் பாலை நிலத்தில் ------------------ வழிப்பயணம் போக இசைவு தாரும்.”

ஒருநாள்
இரண்டு நாள்
மூன்று நாள்
நான்கு நாள்
ஐந்து நாள்

9. மோசே விட்டெறிந்த கோல் எதுவாக மாறியது?

புலியாக
யானையாக
புழுவாக
பாம்பாக
தண்ணீராக

10. ஆண்டவர் தனக்கு காட்சியளித்தார் என்பதை மோசே மக்களுக்கு எப்படி நிரூபித்தார்?

தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றினார்
கோலை பாம்பாக மாற்றிக் காட்டினார்
மோசே உருமாறினார்
மோசே புதுமை செய்தார்
கையின் நிறத்தை மாற்றிக்காட்டினார்

11. மோசேவை நம்பாமல் போனால் ஆண்டவர் சொன்ன அடுத்த யோசனை என்ன?

மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்
ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்
அவர்கள் உன்னை நம்பாமலும் முன்னைய அருஞ்செயலின் பொருளை உணராமலும் போனால், பின்னைய இவ்வருஞ்செயலின் பொருளை உணர்ந்தாவது நம்பக்கூடும்
அவர்கள் இவ்விரு அருஞ்செயல்களையும்கூட நம்பாமல் உன் பேச்சையும் கேட்காமல் போனால், நைல்நதி நீரை முகந்து கட்டாந்தரையில் ஊற்றுவாய்
நைல்நதியில் முகந்த தண்ணீர் கட்டாந்தரையில் இரத்தமாக மாறிவிடும்.

12. “எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்” இது யார் கூற்று?

மோசே
இத்திரோ
ஆண்டவர்
ஆபிரகாம்
ஈசாக்கு

13. “நாவன்மை அற்றவன் நான்” மோசேவின் இந்த கூற்றுக்கு ஆண்டவரின் பதில் என்ன?

மனிதனுக்கு வாய் அமைத்தவர் யார்? அவனை ஊமையாக அல்லது செவிடாக அல்லது பார்வையுள்ளவனாக அல்லது குருடனாக வைப்பவர் யார்? ஆண்டவராகிய நான் தானே!
ஆகவே, இப்போதே போ!
நானே உன் நாவில் இருப்பேன்
நீ பேசவேண்டியதை உனக்குக் கற்பிப்பேன்
எனக்கு வாய் திக்கும்; நாவும் குழறும்

14. மோசேவுக்கு துணையாக ஆண்டவர் யாரை கூட அனுப்பிவைத்தார்?

சிப்போரா
இத்திரோ
ஆரோன்
பார்வோன்
யாக்கோபு

15. “நீர் எனக்கு இரத்த மணமகன்” இது யார் கூற்று?

இத்திரோ
ஆண்டவர்
ஆபிரகாம்
ஈசாக்கு
சிப்போரா