1. இஸ்ரயேலின் புதல்வர்கள் யாவர்?
2. புதிய எகிப்தின் மன்னன் பார்வோன் ஏன் இஸ்ரயேலர்களை வெறுத்தான்?
3. பார்வோன் இஸ்ரயேல் மக்களை எவ்வாறு கொடுமைப்படுத்தினான்?
4. எபிரேயரின் மருத்துவப் பெண்கள் யார்?
5. பார்வோன் மருத்துவப் பெண்களிடம் கூறியது என்ன?
6. “ஏன் இப்படிச் செய்து, ஆண் குழந்தைகளை வாழவிட்டீர்கள்?” என்ற கேள்விக்கு மருத்துவப் பெண்களின் பதில் என்ன?
7. பார்வோன் குடிமக்களிடம் கூறியது என்ன?
8. மோசே எந்த குலத்தைச் சேர்ந்தவர்?
9. மோசே பிறந்தவுடன், அவரின் தாய் செய்தது என்ன?
10. நைல் நதியில் விடப்பட்ட குழந்தைக்கு நடந்தது என்ன?
11. எபிரேயத்தில் “மோசே” என்றால் என்ன பொருள்?
12. பார்வோனின் மகள் மோசேவின் தாயிடம் கூறியது என்ன?
13. மோசே மிதியானுக்கு தப்பியோடக் காரணமென்ன?
14. மோசே யாரை திருமணம் செய்துகொண்டார்?
15. கோடிட்ட இடத்தை நிரப்புக: ‘நான் வேற்று நாட்டில் அன்னியனாய் உள்ளேன்’ என்று கூறி மோசே அவனை ----------------- என்று பெயரிட்டழைத்தார்.