மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 55
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 49, 50
முடிவுத் திகதி : 2018-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யாக்கோபு தன் புதல்வர்களைப் பற்றி கூறியது என்ன?

ரூபன்! நீயே என் தலைமகன்
சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன்பிறப்புகளே
யூதா! நீ ஒரு சிங்கக் குட்டி
செபுலோன், கடற்கரையில் வாழ்ந்திடுவான்; அவன் கப்பல் துறையில் இருந்திடுவான்
யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்

2. கோடிட்ட இடங்களை நிரப்புக:

“-----------------, வழியில் கிடக்கும் பாம்பு ஆவான்”

காத்து
தாண்
நப்தலி
செபுலோன்
யோசேப்பு

3. கோடிட்ட இடங்களை நிரப்புக:

“----------------, பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்.”

பென்யமின்
இசக்கார்
ரூபன்
யூதா
நப்தலி

4. யாக்கோபு தம் புதல்வர்கள் சிமியோன் மற்றும் லேவியைப் பார்த்துக் கூறியது என்ன?

சிமியோன், லேவி இருவரும் உண்மையில் உடன்பிறப்புகளே
அவர்களுடைய வாள்கள் வன்முறையின் கருவிகள்
ஏனெனில் கோபவெறி கொண்டு அவர்கள் மனிதர்களை கொன்று குவித்தார்கள்
வீம்புக்கென்று அவர்கள் எருதுகளை வெட்டி வதைத்தார்கள்
அவர்களது கடுமையான சினம் சபிக்கப்படும்

5. யாக்கோபு யோசேப்புக்கு வழங்கிய ஆசி என்ன?

யோசேப்பு, கனிதரும் கொடி ஆவான்
நீரூற்றருகில் மதில்மேல் படரும் கொடிபோல் கனிதருவான்
உன் தந்தையின் இறைவனே உனக்கு துணை இருப்பார்
எல்லாம் வல்லவரே உனக்கு ஆசி வழங்குவார்
மேலே வானத்தினின்று வரும் ஆசியாலும் அவர் உனக்கு ஆசி வழங்குவார்.

6. தன்னை எங்கே அடக்கம் செய்யவேண்டுமென்று யாக்கோபு கூறினார்?

என்னை என் தந்தையருடன் இத்தியனான எப்ரோனின் நிலத்திலுள்ள குகையில் அடக்கம் செய்யுங்கள்.
அது கானான் நாட்டில் மம்ரே பகுதிக்கு அருகேயுள்ள மக்பேலாவின் நிலத்தில் அமைந்துள்ளது
ஆபிரகாம் இத்தியனான எப்ரோனிடமிருந்து அந்த நிலத்தை கல்லறை நிலத்திற்கென விலைக்கு வாங்கினார்
அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவி சாராவையும் அடக்கம் செய்தனர்
அங்கு ஈசாக்கையும் அவர் மனைவி ரெபேக்காவையும் அடக்கம் செய்தனர்

7. யாக்கோபு தன் மகன் ரூபனை பார்த்துக் கூறியது என்ன?

ரூபன்! நீயே என் தலைமகன்
என் ஆற்றல் நீயே
என் ஆண்மையின் முதற்கனி நீயே
மாண்பிலும் வலிமையிலும் முதன்மை பெற வேண்டியவனும் நீயே
உன் உடன்பிறந்தோர் உன்னைப் புகழ்வர்


8. யாக்கோபு யூதாவை பார்த்து கூறியது என்ன?

யூதா! நீ ஒரு சிங்கக்குட்டி
அரசுரிமை உடையவர் வரும்வரையில் மக்களினங்கள் அவர்க்கு பணிந்திடும் வரையில் யூதாவை விட்டு செங்கோல் நீங்காது
அவன் மரபை விட்டு கொற்றம் மறையாது
அவன் கண்கள் திராட்சை ரசத்தினும் ஒளியுள்ளவை
அவன் பற்கள் பாலினும் வெண்மையானவை

9. யாக்கோபு பென்யமினை பார்த்துக் கூறியது என்ன?

பென்யமின், பீறிக்கிழிக்கும் ஓநாய்க்கு ஒப்பானவன்
கடற்கரையில் வாழ்ந்திடுவான்
காலையில் வேட்டையாடிய இரையை அவன் விழுங்குவான்
மாலையில் கொள்ளைப் பொருளை பங்கிட்டுக் கொள்வான்
கனிதரும் கொடி ஆவான்

10. ஆபிரகாம் எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?

இந்தியாவில்
பெத்லகேமில்
சமாரியாவில்
எருசலேமில்
மம்ரேவுக்கு அருகில் மக்பேலா நிலத்தில்

11. யாக்கோபின் அடக்கத்திற்கு யார் யார் சென்றனர்?

பார்வோனின் அலுவலர்
குடும்ப பெரியோர்
எகிப்து நாட்டுப் பெரியோர்
யோசேப்பின் வீட்டார்
யோசேப்பின் சகோதரர்கள்

12. யாக்கோபு இறந்தவுடன் நடந்தது என்ன?

அப்பொழுது யோசேப்பு, தம் தந்தையின் முகத்தின்மீது விழுந்து அழுது அவரை முத்தமிட்டார்
தம் தந்தையின் உடலை மருத்துவமனையில் பாதுகாப்பு செய்யும்படி தம் பணியாளர்களான மருத்துவர்களுக்கு யோசேப்பு கட்டளையிட்டார்
எகிப்தியர் அவருக்காக எழுபது நாள்கள் துக்கம் கொண்டாடினர்
யாக்கோபை அடக்கம் செய்ய பார்வோனின் அலுவலர், குடும்ப பெரியோர், யோசேப்பின் வீட்டார், அவர் சகோதரர், அவர் தந்தை வீட்டார் அனைவரும் அவருடன் சென்றனர்
கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கை கண்டு, இது எகிப்தியரது பெருந்துயர் புலம்பல் சடங்கு என்றனர்.

13. யோசேப்பு எத்தனை ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்?

நூறு
நூற்றி இருபது
நூற்றி பத்து
நூற்று முப்பது
நூற்றி ஐம்பது

14. “நாங்கள் உம் அடிமைகள்” - இது யார் கூற்று?

யோசேப்பு
யாக்கோபு
எகிப்து மக்கள்
கானான் மக்கள்
யோசேப்பின் சகோதரர்கள்

15. யோசேப்பு தன் சகோதரர்களுக்கு கூறியது என்ன?

அஞ்சாதீர்கள், நான் கடவுளுக்கு இணையானவனா?
நீங்கள் எனக்கு தீமை செய்ய நினைத்தீர்கள்
ஆனால் கடவுள் அதை இன்று நடப்பதுபோல், திரளான மக்களை உயிரோடு காக்கும்பொருட்டு நன்மையாக மாற்றிவிட்டார்
ஆகவே, இப்பொழுது அஞ்சவேண்டாம்
உங்களையும் உங்கள் குழந்தைகளையும் நான் பேணிக் காப்பேன்