மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 54
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 47, 48
முடிவுத் திகதி : 2018-06-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யோசேப்பின் சகோதரர்களின் பரம்பரைத் தொழில் என்ன?

விவசாயம்
ஆடுமேய்த்தல்
நெசவுத் தொழில்
கூடைப்பின்னுதல்
தொழிலதிபர்

2. யோசேப்பின் சகோதரர்கள் கானான் நாட்டை விட்டு எகிப்துக்கு ஏன் வந்தார்கள்?

உடல் நலக்குறைவினால்
கானான் நாட்டில் பஞ்சம் மிகக் கடுமையாய் இருப்பதால்
மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாது போனதால்
எகிப்து மிக அழகான நாடு என்பதால்
மேற்சொன்ன காரணங்கள் எதுவுமில்லை

3. எகிப்து நாட்டின் எந்தப் பகுதியில் வாழ யோசேப்பின் சகோதரர்களை பார்வோன் பணித்தார்?

கலிலேயா
பெத்லகேம்
யூதா
கோசேன்
நாசரேத்து

4. பார்வோன் சகோதரர்களுடன் நின்றிருந்த யோசேப்பை நோக்கி கூறியது என்ன?

உம் தந்தையும் உம் சகோதரர்களும் உம்மிடம் வந்திருக்கிறார்கள் அல்லவா?
எகிப்து நாடு உமக்கு முன்பாக இருக்கிறது.
இந்த நாட்டின் சிறந்த பகுதியில் உம் தந்தையும் சகோதரரும் குடியேறும்படி செய்யும்.
கோசேன் பகுதியில் அவர்கள் வாழட்டும்
அவர்களில் திறமையுள்ளவர்கள் உண்டென்று நீர் அறிவீரானால், எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்

5. “உமது வயதென்ன?” – பார்வோனின் இந்தக் கேள்விக்கு யாக்கோபின் பதில் என்ன?

என் வாழ்க்கைப் பயண நாள்கள் நூற்றுமுப்பது ஆண்டுகள்
அவை எண்ணிக்கையில் குறைந்தவை
துன்பத்தில் மிகுந்தவை
ஆனால் அவை என் மூதாதையரின் நாள்களுக்குக் குறைந்தவையே
எனக்கு வயது நூற்றி நாற்பது.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“------------------------ வயல்களை மட்டும் அவர் வாங்கவில்லை. ஏனென்றால், பார்வோன் அவற்றை அவர்களுக்கு மானியமாகக் கொடுத்திருந்தான்.”

மன்னனின்
வேலையாட்களின்
கடவுளின்
சகோதரர்களின்
அர்ச்சகர்களின்

7. உணவுக்கு ஈடாக எகிப்தியரிடம் யோசேப்பு கேட்டது என்ன?

குதிரைகள்
ஆட்டுமந்தைகள்
மாட்டுமந்தைகள்
கழுதைகள்
நிலம்


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“யாக்கோபு ------------------ ஆண்டுகள் எகிப்து நாட்டில் இருந்தார்.”

பதினேழு
பதினெட்டு
இருபது
முப்பது
நாற்பது

9. அனைத்தையும் இழந்த எகிப்தியர் உணவுக் கேட்டு மன்றாடியபோது யோசேப்பு கூறியது என்ன?

இன்று உங்களையும், உங்கள் நிலங்களையும், பார்வோனுக்கு உடைமையாக வாங்கிவிட்டேன்
இப்போது, உங்களுக்கு விதைத் தானியம் தருகிறேன்.
அதை நிலத்தில் விதையுங்கள்.
விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் செலுத்துங்கள்
எஞ்சிய நான்கு பாகம் உங்கள் வயல்களுக்கு விதையாகவும், உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் பிள்ளைகளுக்கும் உணவாகவும் இருக்கட்டும்.

10. யோசேப்பின் இரு மைந்தர்கள் யாவர்?

எப்ராயிம்
சிமியோன்
யூதா
யாக்கோபு
மனாசே

11. யாக்கோபு தன் வலக்கையை யோசேப்பின் எந்த மகனின் தலைமேல் வைத்து ஆசிவழங்கினார்?

மனாசே
ரூபன்
எப்ராயிம்
சிமியோன்
ஆதாம்

12. யாக்கோபு தன்னை எங்கே அடக்கம் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்?

என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்
என்னை எகிப்து நாட்டில் அடக்கம் செய்யாதே
நான் என் மூதாதையரோடு துஞ்சியபின், என்னை எகிப்தினின்று எடுத்துக்கொண்டு சென்று, என் மூதாதையரின் கல்லறையில் என்னையும் அடக்கம் செய்
என்னை கலிலேயாவில் அடக்கம் செய்
என்னை ஆப்ரிக்காவில் அடக்கம் செய்

13. கடவுள், லூசு என்ற இடத்தில் காட்சியளித்து யாக்கோபுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

நான் உன்னைப் பல்கிப் பெருகச் செய்வேன்
உன்னைத் திரளான மக்கள் கூட்டமாக ஆக்குவேன்
இந்நாட்டை உனக்கும் உனக்குப் பின் உன் வழிமரபினர்க்கும் என்றுமுள உடைமையாகத் தருவேன்
உன் முகத்தை நான் காணமாட்டேன் என்றே நினைத்தேன்
ஆனால் உன் வழிமரபையும் கூட நான் காணும்படி கடவுள் அருள்செய்தார்

14. எப்ராயிம், மனாசே ஆகியோரின் தலைமேல் கைவைத்து யாக்கோபு கூறிய ஆசிமொழி என்ன?

என் தந்தையரான ஆபிரகாமும் ஈசாக்கும் எந்தக் கடவுள் திருமுன் நடந்து வந்தனரோ அந்தக் கடவுளே இன்று வரை என் வாழ்நாள் முழுவதும் எனக்கு ஆயராக விளங்கிவருகிறார்
அந்தக் கடவுள், என்னை எல்லாத் தீமையினின்றும் மீட்ட தூதர், இச்சிறுவர்களுக்கு ஆசி வழங்குவாராக!
மேலும், என் பெயரும், என் தந்தையரான ஆபிரகாம், ஈசாக்கின் பெயர்களும் இவர்கள் மூலம் நிலைநிற்பனவாக!
மண்ணுலகில் இவர்கள் பெருந்திரளாகப் பல்குவார்களாக
அவர்களை என் அருகில் கொண்டுவா

15. இறக்கும் தருவாயில் யாக்கோபு யோசேப்பிடம் கூறியது என்ன?

இதோ நான் சாகப் போகிறேன்
கடவுள் உங்களோடு இருப்பார்
உங்கள் மூதாதையரின் நாட்டிற்கு உங்களை அவர் திரும்பவும் நடத்திச் செல்வார்
நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில் உனக்கே தருகிறேன்
எனக்குச் சொந்தமான மந்தைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளாக அவர்களை ஏற்படுத்தலாம்