மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 53
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 45, 46
முடிவுத் திகதி : 2018-05-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“நான் தான் -- -- -- -- -- -- -- -- - ! என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?”

சிமியோன்
லேவி
யாக்கோபு
யோசேப்பு
பென்யமின்

2. “என் அருகில் வாருங்கள்” – இது யார் கூற்று?

பார்வோன்
யோசேப்பு
ரூபன்
ராக்கேல்
யூதா

3. யோசேப்பு தன்னை சகோதரர்களுக்கு வெளிப்படுத்தி கூறியது என்ன?

நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான் தான்!
நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம்.
ஏனெனில் உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார்.
நாட்டில் பஞ்சம் தொடங்கி இரண்டு ஆண்டுகளே ஆகியுள்ளன. இன்னும் ஐந்தாண்டுகள் உழவோ அறுவடையோ இராது.
ஆதலால் உலகில் உங்களுள் எஞ்சி இருப்போரைப் பாதுக்காக்கவும், பெரும் மீட்புச் செயலால் உங்கள் உயிர்களைக் காக்கவும், கடவுள் உங்களுக்குமுன் என்னை அனுப்பிவைத்தார்.

4. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“என்னை இங்கு அனுப்பியது நீங்கள் அல்ல, -- -- -- -- -- -- -- -- -- -- ”

கடவுள்
ஆதாம்
யாக்கோபு
ஆபிரகாம்
மோசே

5. யோசேப்பு தன் சகோதரர்கள் மூலம் தந்தையிடம் கூறச் சொன்ன செய்தி என்ன?

உங்கள் மகன் யோசேப்பு தெரிவிப்பது இதுவே: கடவுள் என்னை எகிப்து முழுவதற்கும் ஆளுநராக நியமித்துள்ளார்.
எனவே காலந்தாழ்த்தாமல் என்னிடம் வாருங்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் உங்கள் ஆடு மாடுகளோடும் உங்களுக்குச் சொந்தமான யாவற்றோடும் கோசேன் பகுதியில் எனக்கு அருகில் குடியேறி வாழலாம்.
அங்குள்ள உங்களை நான் பேணிக் காப்பேன்.
ஏனெனில் இன்னும் ஐந்தாண்டுகள் பஞ்சம் இருக்கும். இங்கு வராவிடில், நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் உங்களுக்குள்ள அனைத்தும் வறியோராய் வாடுவீர்கள்.
நான் எகிப்தில் அடைந்துள்ள சிறப்பு அனைத்தையும் என் தந்தைக்குத் தெரிவியுங்கள். விரைந்துபோய், என் தந்தையை இங்கே அழைத்து வாருங்கள்

6. யோசேப்பின் சகோதரர்கள் வந்திருப்பதை கேள்விப்பட்ட பார்வோன் மகிழ்ந்து யோசேப்பிடம் கூறியது என்ன?

நீர் உம் சகோதரர்களுக்கு இவ்வாறு சொல்வீர்: நீங்கள் செய்யவேண்டியது யாதெனில், உங்கள் கால்நடைகளின் மேல் பொதியேற்றிக் கானான் நாட்டிற்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து உங்கள் தந்தையையும் குடும்பங்களையும் அழைத்துக்கொண்டு என்னிடம் வாருங்கள்
நான் உங்களுக்கு எகிப்து நாட்டின் சிறந்த பகுதியைத் தருவேன். நீங்களும் நிலத்தின் வளமையை அனுபவிக்கலாம்.
உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்; ஏனெனில், எகிப்து நாட்டில் சிறந்தவையெல்லாம் உங்களுக்கே உரியவையாகும்.
எல்லோரும் என்னைவிட்டு வெளியே போங்கள்
என் தந்தை இன்னும் உயிரோடிருக்கிறாரா?

7. யோசேப்பு தன் சகோதரர்களை வழியனுப்பி சொன்னது என்ன?

என்னைவிட்டு வெளியே போங்கள்
உங்கள் தட்டுமுட்டுகளைப் பற்றிக் கவலைப்படவேண்டாம்
என்னை அனுப்பியது நீங்கள் அல்ல, கடவுள்தாம்
நீங்கள் வழியில் சச்சரவு செய்யாதீர்கள்
என் அருகில் வாருங்கள்

8. யோசேப்பு தம்மை தெரியப்படுத்தியவுடன் நடந்தது என்ன?

யோசேப்பு கூக்குரலிட்டு அழுதார்.
எகிப்தியர் அதைக் கேட்டனர்
பார்வோன் வீட்டாரும் அதைப்பற்றிக் கேள்விப்பட்டனர்.
யோசேப்பைப் பார்த்து அவர் சகோதரர்கள் திகிலடைந்ததால், அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை
அவர்கள்மீது யோசேப்பு கோபம் கொண்டார்

9. யோசேப்பு உயிரோடிருப்பதை சகோதரர்கள் சொன்னவுடன் யாக்கோபின் எதிர்வினை என்ன?

அதைக்கேட்டு யாக்கோபு மன அதிர்ச்சியுற்று அவர்கள் சொன்னதை நம்பவில்லை
ஆனால் யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன யாவற்றையும் அவருக்கு அவர்கள் சொன்னதைக் கேட்டும், யோசேப்பு அவரை அழைத்து வர அனுப்பியிருந்த வண்டிகளைக் கண்டும் அவர்கள் தந்தை யாக்கோபு புத்துயிர் பெற்றவர் ஆனார்
“என் மகன் யோசேப்பு இன்னும் உயிரோடிருப்பது ஒன்றே போதும். நான் இறக்குமுன் சென்று அவனைக் காண்பேன்” என்றார்.
அவர்கள்மீது யாக்கோபு கோபம் கொண்டார்
யோசேப்பு உயிரோடிருப்பதை சகோதரர்கள் யாக்கோபுக்கு சொல்லவில்லை

10. கடவுள் பெயேர்செபாவில் யாக்கோபுக்குத் தோன்றி கூறியது என்ன?

உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே.
எகிப்திற்குச் செல்ல நீ அஞ்சவேண்டாம்.
அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச்செய்வேன்.
நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன்.
யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்

11. யாக்கோபு கடவுளுக்கு எங்கே பலி கொடுத்தார் ?

எகிப்து
கானான்
பெயேர்செபா
மைக்கேல்பட்டி
பெத்லகேம்

12. அசினத்து – சிறு குறிப்பு வரைக

யோசேப்பின் மனைவி
ஓன் நகர் அர்ச்சகர் போற்றிபெராவின் மகள்
கெர்சோன் மற்றும் கோகாத்து இவரின் பிள்ளைகள்
மனாசே மற்றும் எப்ராயீம் இவரது பிள்ளைகள்
பென்யமின் மனைவி

13. ரூபனின் பிள்ளைகள் யாவர் ?

அனோக்கு
பல்லூ
எட்சரோன்
கர்மி
சிமியோன்

14. பென்யமினின் புதல்வர் யாவர் ?

பேலா
பெக்கேர்
அசுபேல்
கேரா
நாகமான்

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

-- -- -- -- -- -- -- , -- -- -- -- -- -- -- -- - என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்

ரூபன்
யோசேப்பு
லேவி
பென்யமின்
யூதா