மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 52
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 42, 43, 44
முடிவுத் திகதி : 2018-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. தானியம் வாங்க தன் பிள்ளைகளை யாக்கோபு எந்த நாட்டிற்கு அனுப்பினார்?

கானான்
எகிப்து
ஜெருசலேம்
இந்தியா
பெத்லகேம்

2. தானியம் வாங்க எந்த மகனை யாக்கோபு அனுப்பவில்லை?

சிமியோன்
யோசேப்பு
பென்யமின்
ரூபன்
யாக்கோபு

3. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நீங்கள் -- -- -- -- -- -- -- -; பாதுகாப்பற்ற பகுதிகள் நாட்டில் எங்குள்ளன என்று ஆராய்ந்து பார்க்க வந்திருக்கிறீர்கள்".

மனிதர்கள்
தெய்வம்
இஸ்ரயேலர்
யாக்கோபின் பிள்ளைகள்
ஒற்றர்கள்

4. யோசேப்பின் குற்றச்சாட்டுக்கு சகோதரர்கள் அளித்த விளக்கம் என்ன?

எம் தலைவரே! அப்படி அல்ல. உம் ஊழியர்களாகிய நாங்கள் உணவுப் பொருள்கள் வாங்கவே வந்துள்ளோம்.
நாங்களெல்லாம் ஒரே தந்தையின் புதல்வர்கள்.
நாங்கள் நேர்மையானவர்கள்; ஒற்றர்கள் அல்ல.
உம் அடியார்களாகிய நாங்கள் கானான் நாட்டில் வாழும் ஒரே தந்தையின் பன்னிரு புதல்வர்கள்.
இப்பொழுது எங்களுள் இளையவன் எங்கள் தந்தையோடு இருக்கின்றான். இன்னொருவன் இறந்துவிட்டான்.

5. யோசேப்பு, பென்யமின் வரும்வரை யாரைச் சிறையில் பிடித்து வைத்துக்கொண்டார்?

சிமியோன்
ரூபன்
யூதா
லேவி
யாக்கோபு

6. சகோதரர்கள் யோசேப்பைக் குறித்து கூறியது என்ன?

உண்மையாகவே நம் சகோதரனை முன்னிட்டே இப்பொழுது நாம் தண்டிக்கப்படுகிறோம்.
தன் உயிருக்காக எவ்வளவு துயரத்துடன் நம்மிடம் கெஞ்சி மன்றாடினான்.
நாமோ அவனுக்குச் செவி சாய்க்கவில்லை.
நமக்கு இத்துன்பம் ஏற்பட்டதற்கு அதுவே காரணம்
இதோ, அவனது இரத்தம் நம்மிடம் ஈடு கேட்கிறது

7. சிமியோனை விடுவிக்க யோசேப்பின் நிபந்தனை என்ன?

நீங்கள் நேர்மையானவர்கள்தாம் என்பதை நான் அறிந்துகொள்ள உங்கள் சகோதரர்களுள் ஒருவனை என்னிடம் விட்டுச்செல்லுங்கள்.
பஞ்சத்தால் வாடும் உங்கள் குடும்பங்களுக்கு வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு போங்கள்.
ஆனால், உங்கள் இளைய சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள்.
அதன்மூலம் நீங்கள் ஒற்றர்கள் அல்ல, நேர்மையானவர்கள்தாம் என்று நானும் அறிந்துகொள்வேன்.
அதன்பின் உங்கள் சகோதரனை உங்களிடம் ஒப்படைப்பேன்; பின்னர் நீங்கள் நாடெங்கும் வணிகம் செய்யலாம்


8. யாக்கோபு ஏன் பென்யமீனை அனுப்பத் தயங்கினார்?

நான் அவனை உம்மிடம் திரும்பவும் கொண்டுவராவிடில், என் இரு மைந்தரையும் கொன்றுவிடுங்கள்.
அவனை என் கையில் ஒப்புவியுங்கள்
என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன்
இவன் சகோதரன் இறந்து போனான். இவன் ஒருவனே எஞ்சி இருக்கிறான்.
நீங்கள் போகும் வழியில், இவனுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டால், நரைத்த முடியுள்ள என்னைத் துயருக்குள்ளாக்கிப் பாதாளத்திற்குள் இறங்கச் செய்வீர்கள்.

9. "உணவுப் பொருள் வாங்கி வாருங்கள்" என்று யாக்கோபு மொழிந்தவுடன் யூதா உரைத்தது என்ன?

அந்த ஆள் உங்கள் இளைய சகோதரனை உங்களுடன் அழைத்து வராவிடில் நீங்கள் என் முகத்தில் விழிக்கவேண்டாம் என்று எங்களைக் கடுமையாய் எச்சரித்துள்ளார்.
ஆதலால் நீங்கள் எம் சகோதரனை எங்களோடு அனுப்பினால் மட்டுமே நாங்கள் அங்குச் சென்று உணவுப்பொருள்களை உங்களுக்கு வாங்கிக்கொண்டு வருவோம்.
நீங்கள் அவனை அனுப்பாவிடில், நாங்கள் போகமாட்டோம்.
உங்களுக்கு இன்னுமொரு சகோதரன் இருக்கிறான் என்று அம்மனிதருக்குத் தெரிவித்து, நீங்கள் ஏன் எனக்குத் துன்பம் வருவித்தீர்கள்?
என் மகனை உங்களோடு போகவிடமாட்டேன்

10. "அவனுக்கு நானே பொறுப்பாளி. அவனைப்பற்றிய பொறுப்பை என் கையில் விட்டுவிடுங்கள்." இது யார் கூற்று?

ரூபன்
சிமியோன்
யூதா
பென்யமீன்
யோசேப்பு

11. யோசேப்புக்கு யாக்கோபு கொடுத்தனுப்பிய காணிக்கைகள் என்ன?

தைல வகைகள், தேன்
நறுமணப் பொருள்கள்
வெள்ளைப் போளம்
தேவதாருக் கொட்டைகள்
வாதுமைப் பருப்பு

12. யோசேப்பு தன் சகோதரர்களின் பொருட்டு அழுத இடங்கள் எவை?

தொநூ 42:24
தொநூ 43:2
தொநூ 43:30
தொநூ 44: 30
தொநூ 44: 20

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:

உங்களுக்கு -- -- -- -- -- -- -- -- -- -- - உண்டாகுக! அஞ்சவேண்டாம்!

பயம்
பணம்
வேதனை
அமைதி
கடவுள்

14. யோசேப்பு யாருடைய கோணிப்பையில் வெள்ளிக்கோப்பையை ஒளித்துவைத்தான்?

சிமியோன்
ரூபன்
யூதா
யாக்கோபு
பென்யமின்

15. பென்யமினுக்காக பரிந்து பேசியது யார்?

யூதா
யோசேப்பு
ஆதாம்
ராகேல்
காயின்