மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 51
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 40, 41
முடிவுத் திகதி : 2018-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. யோசேப்புடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர்கள் யாவர்?

மது பரிமாறுவோரின் தலைவன்
மது பரிமாறுவோர்
அப்பம் தயாரிப்போரின் தலைவன்
அப்பம் தயாரிப்போர்
எகிப்து மன்னன்

2. மதுபரிமாறுவோர் தலைவன் கண்ட கனவு என்ன?

என் கனவில் ஒரு திராட்சைக் கொடி எனக்கு முன் தோன்றியது
அந்தத் திராட்சைக் கொடியில் மூன்று கிளைகள் இருந்தன
அவை அரும்பிப்பூத்து, கொத்துக்கொத்தாய்ப் பழுக்கக் கண்டேன்
என் கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது
நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்

3. மதுபரிமாறுவோர் தலைவனின் கனவை யோசேப்பு எவ்வாறு விளக்கினார்?

பார்வோன் உன்னைக் கொல்வான்
மூன்று கிளைகளும் மூன்று ஆண்டுகளைக் குறிக்கும்
கனவில் பொருள் இதுவே: மூன்று கிளைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்
இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உன்னைத் தலைநிமிரச் செய்து உன்னை மீண்டும் முன்னைய பதவியில் அமர்த்துவான்.
முன்பு நீ பார்வோனின் மதுபரிமாறுவோனாய் இருந்த காலத்தில் செய்ததுபோல அவன் கிண்ணத்தை அவன் கையில் கொடுப்பாய்

4. அப்பம் தயாரிப்போர் தலைவனின் கனவு யாது?

நானும் ஒரு கனவு கண்டேன். இதோ மூன்று அப்பக்கூடைகள் என் தலையில் இருந்தன.
மேற்கூடையில் பார்வோனுக்காகச் சுட்ட பலவகை அப்பங்கள் இருந்தன.
பறவைகள் வந்து என் தலை மேலிருந்த கூடையிலிருந்து அவற்றைத் தின்றுவிட்டன
மூன்று கிளைகளும் மூன்று நாட்களைக் குறிக்கும்
எனக்குத் தயைக்காட்ட வேண்டுகிறேன்.

5. அப்பம் தயாரிப்போர் தலைவனின் கனவை யோசேப்பு எவ்வாறு விளக்கினார்?

கனவின் பொருள் இதுவே: மூன்று கூடைகளும் மூன்று நாள்களைக் குறிக்கும்
இன்னும் மூன்று நாள்களில் பார்வோன் உனது தலையை வெட்டி உன்னைக் கழுமரத்தில் ஏற்றுவான்
பறவைகள் வந்து உன் சதையைத் தின்னும்
பார்வோனிடம் சொல்லி என்னை இச்சிறையிலிருந்து விடுவி
நான் யாதொன்றும் செய்யவில்லை

6. பார்வோன் மன்னன் கண்ட முதல் கனவு யாது?

அக்கனவில் அவன் நைல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தான்
அப்பொழுது அழகிய கொழுத்த ஏழு பசுக்கள் நதியிலிருந்து கரைக்கு வந்து கோரைப்புற்களிடையே மேய்ந்து கொண்டிருந்தன
அவற்றைத் தொடர்ந்து, நலிந்து மெலிந்த வேறு ஏழு பசுக்கள் நைல் நதியிலிருந்து வெளி வந்து கரையில் இருந்த மற்ற பசுக்களோடு நின்று கொண்டன.
நலிந்து மெலிந்த பசுக்கள் அழகிய, கொழுத்த ஏழு பசுக்களை விழுங்கிவிட்டன
என்னைக் காவற்கிடங்கில் தள்ளிவிடுமளவிற்கு நான் யாதொன்றும் செய்யவில்லை

7. பார்வோன் மன்னன் கண்ட இரண்டாம் கனவு யாது?

மது பரிமாறுவோரின் தலைவனை முன்னைய பதவிக்கு உயர்த்த, முன்புபோல் அவன் பார்வோனின் கையில் கிண்ணத்தைக் கொடுக்கலானான்
அப்பம் தயாரிப்போரின் தலைவனைப் பார்வோன் கழுமரத்தில் ஏற்றினான்
கனவில் செழுமையான பொன்நிறமான ஏழு கதிர்கள் ஒரே தாளில் காய்த்திருந்தன
அதன்பின் கீழைக்காற்றினால் தீய்ந்துபோன கதிர்கள் தோன்றின.
அந்தப் பதரான கதிர்கள் ஏழும் செழுமையான, முற்றிய கதிர்களை விழுங்கிவிட்டன


8. கனவை விளக்க யோசேப்பால் முடியும் என்று பார்வோனுக்குக் கூறியவர் யார்?

அப்பம் தயாரிப்போரின் தலைவன்
மது பரிமாறுவோரின் தலைவன்
எகிப்து நாட்டு மந்திரவாதிகள், ஞானிகள்
பார்வோன் மன்னன்
எபிரேய இளைஞன்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"நானல்ல, -- -- -- -- -- -- -- -- பார்வோனுக்கு நலமிகு மறுமொழி வழங்குவார்"

யோசேப்பே
அவனே
அன்னை மரியே
ஆபிரகாமே
கடவுளே

10. மதுபரிமாறுவோரின் தலைவன் பார்வோனிடம் கூறியது என்ன?

என் பிழை இன்றுதான் என் நினைவிற்கு வருகிறது. பார்வோனாகிய தாங்கள் முன்னொரு சமயம் உம் ஊழியர்மீது கடுஞ்சினமுற்று அடியேனையும் அப்பம் தயாரிப்போரின் தலைவனையும் காவலர் தலைவனின் வீட்டில் சிறைவைத்தீர்
அச்சமயம் ஒரே இரவில் வெவ்வேறு பொருள் கொண்ட கனவுகளை நானும் அவனும் கண்டோம்
அங்கே காவலர் தலைவரின் ஊழியனாகிய எபிரேய இளைஞன் ஒருவன் எங்களோடு இருந்தான்.
நாங்கள் அவனிடம் எங்கள் கனவுகளை விவரித்துச் சொன்னோம், அவனவன் கனவுக்கேற்ப விளக்கம் கூறினான்
அவன் எங்களுக்கு விளக்கிக் கூறியபடியே யாவும் நடந்தன

11. பார்வோனின் கனவை யோசேப்பு எவ்வாறு விளக்கிக்கூறினார்?

ஏழு நல்ல பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். ஏழு நல்ல கதிர்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்
அவற்றிற்குப்பின் வந்த மெலிந்த, அருவருப்பான ஏழு பசுக்கள் ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்.
பதராகி வெப்பக்காற்றினால் தீய்ந்துபோன ஏழு கதிர்கள் பஞ்சம் நிறைந்த ஏழு ஆண்டுகளைக் குறிக்கும்
எகிப்து நாடெங்கும் மிக வளமான ஏழு ஆண்டுகள் வரவிருக்கின்றன. அதன்பின் ஏழாண்டுகள் பஞ்சம் நிலவும்.
அப்பொழுது எகிப்து நாட்டின் அனைத்து வளமும் மறந்து போகுமளவிற்கு அந்நாட்டைப் பஞ்சம் பாழாக்கும்

12. பார்வோன் ஏன் யோசேப்பை எகிப்தின் ஆளுநராக ஆக்குகிறேன் என்றான்?

இவற்றையெல்லாம் கடவுள் உம் ஒருவருக்கே அறிவித்துள்ளார்
உம்மைவிட மதிநுட்பமும் ஞானமும் செறிந்தவர் யாருமிலர்
எனவே, நீரே என் அரண்மனையின் பொறுப்பை ஏற்பீர்
உம் வார்த்தைக்கு என் மக்கள் எல்லோரும் அடிபணியட்டும். அரியணையில் மட்டும் நான் உமக்கு மேற்பட்டவனாய் இருப்பேன்
இதோ! எகிப்து நாடு முழுவதற்கும் உம்மை அதிகாரியாக நியமிக்கிறேன்

13. பார்வோன் யோசேப்பிற்கு சூட்டிய பெயர் என்ன?

ஆபிரகாம்
ஆசினத்து
சாபனாத்துபனேகா
ஆளுநர்
மன்னன்

14. பார்வோனிடம் பணியேற்றபொழுது, யோசேப்பிற்கு வயது எத்தனை?

இருபது
இருபத்தைந்து
நாற்பது
முப்பது
ஐம்பது

15. யோசேப்பு-ஆசினத்தின் பிள்ளைகள் யாவர்?

பார்வோன்
மனாசே
சாபனாத்துபனேகா
எப்ராயிம்
போற்றிபெரா