1. பிறரை குற்றவாளிகள் என தீர்ப்பிடுவோருக்கு இயேசு கூறும் வார்த்தைகள் எவை?
2. தூய்மையானவற்றையும் முத்துகளையும் எவற்றிடமிருந்து பிரித்துவைக்க வேண்டுமென்று இயேசு கூறுகின்றார்?
3. கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் என்ற வார்த்தைக்கு உரிய இறைவனின் பதில்கள் முறையே யாவை?
4. கீழே உள்ள இறைவார்த்தையை பூர்த்தி செய்யவும். ................................................................ இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.
5. அழிவுக்குச் செல்லும் வாயில் எப்படிப்பட்டது?
6. வாழ்வுக்குச் செல்லும் வாயில் எப்படிப்பட்டது?
7. போலி இறைவாக்கினர் எந்த உடையைப் போர்த்திக் கொண்டு நம்மிடத்தில் வருவர் என்று இயேசு கூறுகின்றார்?
8. போலி இறைவாக்கினரின் குணங்களை இயேசு யாருக்கு ஒப்பிடுகின்றார்?
9. விண்ணரசுக்குள் செல்பவர் யார்?
10. . பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளி யாருக்கு ஒப்பாவர் என்று இயேசு கூறுகின்றார்?
11. இயேசு கூறிய வார்த்தைகளைக் கேட்டு அவற்றின்படி செயல்படாதவர்கள் யாருக்கு ஒப்பாவார்?
12. ஐயா, நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் என்று இயேசுவிடம் சொல்லிய தொழுநோயாளரிடம் இயேசு சொன்ன வார்த்தைகள் எவை?
13. முடக்குவாதமுற்றிருந்த தமது மகனுக்காக இயேசுவிடம் வந்த நூற்றுவர் தலைவர் சொன்ன வார்த்தைகள் எவை?
14. கதரேனர் பகுதியில் வாழ்ந்த இருவருக்கு பிடித்திருந்த தீய ஆவிகள், இயேசுவை கண்டவுடன் என்ன வார்த்தைகளைப் பேசின?
15. கோடிட்ட இடத்தை நிரப்புக நரிகளுக்குப் .........................., வானத்துப் பறவைகளுக்குக் ..................... உண்டு. மானிட மகனுக்கோ ........................... இடமில்லை?