மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 49
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 34, 35, 36
முடிவுத் திகதி : 2018-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. தீனாவை சிறுமைப்படுத்தியது யார்?

ஆமோர்
செக்கேம்
யாக்கோபு
சிமியோன்
லேவி

2. யார் செக்கேம்?

ஆமோரின் மகன்
தீனாவை சிறுமைப்படுத்தியவன்
தீனாவை மணமுடிக்க விரும்பினான்
தீனாவை மணக்க விருத்தசேதனம் செய்தவன்
சிமியோன், லேவி ஆகியோரால் வெட்டிக் கொல்லப்பட்டவன்

3. தீனாவை இழிவுப்படுத்தியதால் கோபம் கொண்ட அவளின் சகோதரர்கள் சிமியோன், லேவி செய்தது என்ன?

ஆமோரையும், அவன் மகன் செக்கேமையும் வாளினால் வெட்டி வீழ்த்தினர்
வெட்டுண்டவர்களின் சடலத்தின் மீது மிதித்துச் சென்று தங்கள் சகோதரியைத் தீட்டுப்படுத்திய அந்நகரைக் கொள்ளையிட்டனர்.
நகரிலும் வெளிப்புறத்திலும் இருந்த அவர்களுடைய ஆடு, மாடு, கழுதைகளைக் கைப்பற்றினர்.
அவர்களுடைய எல்லாச் செல்வங்களையும் எடுத்துக்கொண்டு, எல்லாக் குழந்தைகள் பெண்டிரையும் கைதிகளாக்கி, வீடுகளிலிருந்த அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
அவர்கள் ஒன்றும் செய்யவில்லை

4. தீனாவின் தாய் யார்?

லேயா
ரெபேக்கா
சாரா
ராகேல்
ஏவாள்

5. யாக்கோபு சிமியோனையும், லேவியையும் நோக்கி கோபமாகக் கூறியது என்ன?

அவன் மட்டும் எங்கள் சகோதரியை ஒரு விலைமாதைப் போல நடத்தலாமோ?
நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள்
இந்நாட்டில் வாழ்வோரிடத்திலும் கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என்னை இழிவுபடுத்திவிட்டீர்கள்.
என்னிடமோ சில ஆள்களே உள்ளனர்
அவர்கள் ஒன்று சேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்து போவோம்.

6. ராகேலின் புதல்வர்கள் யாவர் ?

காத்து
ஆசேர்
யோசேப்பு
பென்யமின்
தீனா

7. லேயாவின் புதல்வர்கள் யாவர்?

ரூபன்
சிமியோன்
லேவி
யூதா
இசக்கார்


8. ராகேலின் இறுதிகாலம் எப்படிப்பட்டது?

ராகேலுக்குப் பேறுகாலம் வந்தது.
பேறுகால வேதனையால் அவர் துடித்தார்.
சாகக்கிடந்து உயிர்பிரியும் வேளையில் பென்யமின் என்ற மகன் பிறந்தான்
ராகேல் இறந்துபோக, பெத்லகேம் என்ற எப்ராத்திற்குச் செல்லும் வழியில் அடக்கம் செய்யப்பட்டார்.
யாக்கோபு அவருடைய கல்லறையின் மேல் ஒரு நினைவுத்தூணை நாட்டிவைத்தார்.

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்திற்கு -- -- -- -- -- -- -- - என்று பெயரிட்டார்.

பெத்லகேம்
செக்கேம்
பெத்தேல்
எப்ராத்து
இஸ்ரயேல்

10. கோடிட்ட இடத்தை நிரப்புக:

"உன் பெயர் -- -- -- -- -- -- -- -- -. இனிமேல் நீ யாக்கோபு என்று அழைக்கப்படமாட்டாய்; உன் பெயர் -- -- -- -- -- -- -- -- -- - எனப்படும்."

ராகேல்
யாக்கோபு
இயேசு
இஸ்ரயேல்
சிமியோன்

11. ரெபேக்காவின் பணிப்பெண்ணாகிய தெபோரா எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?

பெத்லகேம்
பெத்தேலின் அடிவாரத்திலிருந்த ஒரு கருவாலி மரத்தடியில்
அல்லோன்-பாகூத்து
ஆபிரகாம்
ஈசாக்கு

12. ஆபிரகாமும், ஈசாக்கும் வாழ்ந்த இடம் எது?

கிரியத்து அர்பா
எபிரோன்
பெத்லகேம்
அல்லோன்-பாகூத்து
பாலஸ்தீனா

13. ஏசாவின் மனைவியர் யாவர்?

ஆதா
லேயா
ராகேல்
பிலகா
பாசமத்

14. கடவுள் யாக்கோபுக்கு வழங்கிய ஆசி என்ன?

உன் பெயர் இஸ்ரயேல் எனப்படும்
நானே எல்லாம் வல்ல இறைவன். நீ பலுகிப் பெருகக்கடவாய்.
ஓரினமும் மக்களினங்களின் கூட்டமும் உன்னிடமிருந்து தோன்றும்
அரசர்களும் உன் வழிமரபில் உதிப்பார்கள்
ஆபிரகாம், ஈசாக்குக்கு நான் அளித்த நாட்டை உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் கொடுப்பேன்.

15. ஏசாவுக்கும் ஆதாவுக்கும் பிறந்தவர்கள் யாவர்?

இரகுவேல்
எலிப்பாசு
தேமான்
ஓமார்
செப்போ