1. யாக்கோபு ஏன் லாபானை விட்டு தப்பியோட எண்ணினார்?
2. யாக்கோபு கானான் நாட்டிலிருந்த தம் தந்தை ஈசாக்கை நோக்கி பயணமானபோது தன்னோடு எதைக்கொண்டு சென்றார்?
3. "நான் உன்னோடு இருப்பேன்" – இது யார் கூற்று?
4. தப்பியோடிய யாக்கோபை எதிர்நோக்கி வந்து, லாபான் கூறியது என்ன?
5. குலதெய்வச் சிலையை திருடியது யார்?
6. "மிஸ்பா" என்றால் என்ன?
7. கோடிட்ட இடத்தை நிரப்புக: "அவர்களும் கற்களைக் கொண்டு வந்து ஒரு குவியல் எழுப்பி, அக்குவியல் அருகே உணவருந்தினர். அதற்கு லாபான், -- -- -- -- -- -- -- -- - என்றும் யாக்கோபு -- -- -- -- -- -- என்றும் பெயரிட்டனர்."
8. "மகனயிம்" என்றால் என்ன?
9. ஏசாவிடமிருந்து காக்கப்பட யாக்கோபு எவ்வாறு கடவுளிடம் வேண்டினார்?
10. தன்னை காத்துகொள்ள யாக்கோபு எதை அன்பளிப்பாக ஏசாவுக்கு அனுப்பினான்?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: "உன் பெயர் இனி யாக்கோபு எனப்படாது, -- -- -- -- -- -- -- -- - எனப்படும். ஏனெனில், நீ கடவுளோடும் மனிதரோடும் போராடி வெற்றி கொண்டாய்."
12. "பெனியேல்" என்றால் என்ன?
13. யாக்கோபு-ஏசா சந்திப்பின்போது நடந்தது என்ன?
14. அன்பளிப்பை மறுத்த ஏசாவுக்கு யாக்கோபு பார்த்து கூறியது என்ன?
15. „சுக்கோத்து“ என்றால் என்ன?