மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 47
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 28,29, 30
முடிவுத் திகதி : 2017-11-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஈசாக்கு யாக்கோபிடம் ஆசி வழங்கி கூறியது என்ன?

புறப்பட்டு, பதான் அராமுக்குப்போய், உன் தாயின் தந்தையாகிய பெத்துவேல் வீட்டிற்குச் செல்
அங்கு உன் தாய்மாமன் லாபான் புதல்வியருள் ஒருத்தியை மணந்துகொள்
எல்லாம் வல்ல இறைவன் உனக்கு ஆசி வழங்கி, நீ பல இனங்களுக்குத் தந்தையாகும்படி உன்னைப் பலுகிப் பெருகச் செய்வாராக
ஆபிரகாம் பெற்ற ஆசியை அவர் உனக்கும் உன் வழிமரபினருக்கும் வழங்குவாராக
அதனால் நீ அன்னியனாய் வாழும் நாட்டை, அதாவது கடவுள் ஆபிரகாமுக்குத் தந்த நாட்டை, உரிமையாக்கிக் கொள்வாய்

2. மகலாத் – சிறு குறிப்பு வரைக

இஸ்மயேலின் மகள்
நெபயோத்தின் சகோதரி
ஈசாக்கிற்குக் கானானியப் பெண்களைப் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் ஏசா மகலாத்தை மணந்துகொண்டார்
ஆபிரகாமின் பேத்தி
சாராவின் பேத்தி

3. யாக்கோபின் கனவில் ஆண்டவர் கூறியது என்ன?

உன் மூதாதையராகிய ஆபிரகாம், ஈசாக்கின் கடவுளாகிய ஆண்டவர் நானே
நீ படுத்திருக்கும் இந்த நிலத்தை உனக்கும் உன் வழிமரபிற்கும் தந்தருள்வேன்
உன் வழிமரபோ நிலத்தின் மணலுக்கு ஒப்பாகும்
நான் உன்னோடு இருப்பேன். நீ எங்கு சென்றாலும் உனக்கு நான் காவலாயிருந்து இந்நாட்டிற்கு உன்னைத் திரும்பி வரச் செய்வேன்
ஏனெனில், நான் உனக்கு வாக்களித்ததை நிறைவேற்றுமளவும் உன்னைக் கைவிடமாட்டேன்

4. பெத்தேல் – சிறுகுறிப்பு வரைக

யாக்கோபு உறங்கி கனவில் ஆண்டவரைக் கண்ட இடம்
இதுவே இறைவனின் இல்லம், விண்ணுலகின் வாயில்
யாக்கோபு அதிகாலையில் எழுந்து, தலைக்கு வைத்திருந்த கல்லை எடுத்து, நினைவுத் தூணாக அதை நாட்டி, அதன் மேல் எண்ணெய் வார்த்து, ‘லூசு’ என்று வழங்கிய அந்த நகருக்குப் ‘பெத்தேல்’ என்று பெயரிட்டார்
யாக்கோபு நினைவுத் தூணாக நாட்டிய இந்தக் கல்லே கடவுளின் இல்லம் ஆகும்.
‘நீர் எனக்குத் தரும் யாவற்றிலும் பத்தில் ஒரு பங்கு உமக்குச் செலுத்துவேன்’ என்று யாக்கோபு ஆண்டவரிடம் இவ்விடத்தில் உறுதியளித்தார்.

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

லாபானுக்கு இரண்டு புதல்வியர் இருந்தனர். மூத்தவள் பெயர் ------------. இளையவள் பெயர் ------------.

சாரா
ராகேல்
ஆகார்
லேயா
சிமியோன்

6. “நீ என் எலும்பும் சதையுமல்லவா? நீ என் உறவினன்” – இது யார் கூற்று?

ஆபிரகாம்
ராகேல்
லேயா
ரூபன்
லாபான்

7. ராகேல் – சிறு குறிப்பு வரைக

லாபானின் மகள்
வடிவழகும் எழில் தோற்றமும் உள்ளவள்
யாக்கோபு ராகேலை விரும்பினார். ராகேலை முன்னிட்டு ஏழு ஆண்டுகள் லாபானிடம் வேலை செய்தார்
ராகேலின் மகன் யோசேப்பு
இவளின் பணிப்பெண் பில்கா


8. லேயா – சிறு குறிப்பு வரைக

லாபானின் மூத்த மகள்
மங்கிய பார்வை உடையவள்
யாக்கோபின் மனைவி
ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் ஆகியோர் இவளின் பிள்ளைகள்
இவளின் பணிப்பெண் சில்பா

9. யாக்கோபுக்கு பிறந்த ஒரே மகள் யார்?

சாரா
தீனா
ஆகார்
ராகேல்
லேயா

10. ரூபன், சிமியோன் என்ற பெயர்களின் பொருள் என்ன?

ஆண்டவர் என் தாழ்நிலையைக் கண்ணோக்கினார்
நீ என் உறவினன்
என் ஒப்பந்த நாள்கள் நிறைவெய்திவிட்டன
நான் வெறுப்புக்குள்ளானேன் என்பதை ஆண்டவர் கேட்டு, இவனையும் எனக்குத் தந்தருளினார்
நீ என் எலும்பும் சதையுமல்லவா?

11. லேவி, யூதா என்ற பெயர்களின் பொருள் என்ன?

என் கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி
ஆண்டவரை நான் மாட்சி படுத்துவேன்
சாரா
ஆபிரகாம்
ஈசாக்கு

12. தாண், நப்தலி என்ற பெயர்களின் பொருள் என்ன?

ஆண்டவர் இன்னொரு மகனையும் எனக்குச் சேர்த்துத் தருவாராக
ஆண்டவர் எனக்கு நீதி வழங்கி, என் மன்றாட்டைக் கேட்டருளினார்
கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வெற்றி கொண்டேன்
தீனா
யோசேப்பு

13. காத்து, ஆசேர் என்ற பெயர்களின் பொருள் என்ன?

நான் நற்பேறு பெற்றுள்ளேன்
இசக்கார்
செபுலோன்
பென்யமீன்
மகிழ்ச்சி

14. யாக்கோபு லாபானை நோக்கி கூறியது என்ன?

என் சொந்த இடத்திற்கும் நாட்டிற்கும் திரும்பிப்போக என்னை அனுப்பிவைப்பீராக
என் மனைவியரையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தந்து என்னைப் போகவிடும்
அவர்களுக்காக நான் உம்மிடம் வேலை செய்துள்ளேன்
நான் உமக்குச் செய்துள்ள வேலை இன்னதென்று உமக்குத் தெரியும்
நீர் சொன்னபடியே ஆகட்டும்

15. கோடிட்ட இடத்தை நிரப்புக:

யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ----------- உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார்.

மூன்று ஆண்டுகள்
நான்கு ஆண்டுகள்
ஐந்து ஆண்டுகள்
ஆறு ஆண்டுகள்
ஏழு ஆண்டுகள்