மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 46
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 25, 26, 27
முடிவுத் திகதி : 2017-10-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஆபிரகாம் மற்றும் கெற்றூரா ஆகியோரின் புதல்வர்கள் யாவர்?

சிம்ரான்
யோக்சான்
மெதான்
மிதியான்
இசுபாக்கு

2. எத்தனை ஆண்டுகள் ஆபிரகாம் வாழ்ந்தார்?

275 ஆண்டுகள்
175 ஆண்டுகள்
75 ஆண்டுகள்
375 ஆண்டுகள்
95 ஆண்டுகள்

3. மக்பேலா குகை – சிறு குறிப்பு வரைக

ஆபிரகாம் அடக்கம் செய்யப்பட்ட இடம்
சாரா அடக்கம் செய்யப்பட்ட இடம்
இத்தியன் எப்ரோனுக்கு சொந்தமான இடம்
இத்தியரிடமிருந்து கல்லறைக்காக வாங்கப்பட்ட இடம்
மம்ரே நகருக்கே அருகே அமைந்துள்ளது

4. இஸ்மயேல் – சிறு குறிப்பு வரைக

ஆபிரகாம், ஆகார் ஆகியோரின் மகன்
இவருக்கு பனிரெண்டு புதல்வர்கள்
நூற்றுமுப்பத்தேழு ஆண்டுகள் வாழ்ந்தார்
ஆபிரகாம், சாரா ஆகியோரின் மகன்
இவரும், ஈசாக்கும் இணைந்து ஆபிரகாமை அடக்கம் செய்தனர்

5. ஏசா- சிறுகுறிப்பு வரைக.

ஈசாக்கு, ரெபேக்காவின் தலைமகன்
பிறந்தபோது செந்நிறமாகவும், முடிமயமாகவும் இருந்தான்
வேட்டையில் வல்லவன்
திறந்தவெளி மனிதனாய் வாழ்ந்தான்
வேட்டையாடித் தந்த உணவின் பொருட்டு ஈசாக்கு அவன்மேல் அன்பு கொண்டிருந்தார்

6. யாக்கோபு – சிறு குறிப்பு வரைக

ஈசாக்கு, ரெபேக்காவின் மகன்.
பிறந்தபோது தன் சகோதரன் ஏசாவின் குதிங்காலைக் கையால் பற்றிக்கொண்டு வெளிவந்தான்.
பண்புடையவன்.
கூடாரத்தில் உறைபவனாய் வாழ்ந்து வந்தான்.
தாய் ரெபேக்கா யாக்கோபின்மீது அன்பு கொண்டிருந்தார்.

7. ஏன் தலைமகன் உரிமையை ஏசா யாக்கோபுக்கு விட்டுத்தருகிறார்?

கொஞ்சம் அப்பத்திற்காக
சுவையான பயிற்றங்கூழிற்காக
தாய் நாட்டிற்காக
அது பிடிக்கவில்லை
பட்டினியால் சாகாமல் இருப்பதற்கு


8. எகிப்துக்குச் செல்ல எண்ணிய ஈசாக்கிடம் ஆண்டவர் கூறியது என்ன?

எகிப்து நாட்டிற்கு நீ போகாமல், நான் உனக்குக் காட்டும் நாட்டிலே தங்கியிரு. நான் உன்னோடு இருந்து உனக்கு ஆசி வழங்குவேன்.
இந்த நிலங்கள் அனைத்தையும் உனக்கும் உன் வழிமரபினர்க்கும் தருவேன்.
உன் தந்தை ஆபிரகாமுக்கு நான் ஆணையிட்டுக் கூறிய வாக்கை உறுதிப்படுத்துவேன்.
உன் வழிமரபை விண்மீன்களைப்போல் பெருகச் செய்வேன். உன் வழிமரபினர்க்கு இந்த நிலங்கள் அனைத்தையும் தருவேன்.
உலகின் அனைத்து இனத்தாரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிகொள்வர்.

9. பெலிஸ்தியரின் மன்னன் யார்?

ஆபிரகாம்
ஈசாக்கு
அபிமெலக்கு
ஏசா
யாக்கோபு

10. கெராரில் ஈசாக்கின் வாழ்க்கை எப்படி இருந்தது?

ஈசாக்கு அந்த நாட்டில் பயிரிட்டு அதே ஆண்டில் நூறுமடங்கு அறுவடை செய்தார்
ஆண்டவர் அவருக்கு ஆசி வழங்கினார்
அவர் செல்வமுடையவர் ஆனார்
செல்வத்திற்குமேல் செல்வம் பெற்று மாபெரும் செல்வரானார்
மேலும் அவருக்கு ஆட்டு மந்தையும் மாட்டு மந்தையும் இருந்தன.

11. ஈசாக்கு தோண்டிய கிணற்றின் பெயர் என்ன?

ஏதோம்
ஏசேக்கு
இரகபோத்து
சித்னா
மம்ரே

12. அபிமெலக்கு ஈசாக்குடன் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

நாங்கள் எவ்வித இடையூறும் செய்யவில்லை
உம்மை நல்ல முறையில் நடத்தி, சமாதானமாய் அனுப்பிவைத்தோம்
அதுபோல ஆண்டவரின் ஆசி பெற்ற நீரும் எங்களுக்கு எவ்விதத் தீமையும் செய்யாதிருப்பீர்
உன் தந்தை ஆபிரகாமின் கடவுள் நானே
அஞ்சாதே. ஏனெனில், நான் உன்னோடு இருக்கிறேன்

13. கோடிட்ட இட்த்தை நிரப்புக:

ஈசாக்கின் வேலைக்காரர், தாங்கள் தோண்டிய கிணற்றைக் குறித்துச் செய்தி கொண்டுவந்து ‘தண்ணீர் கண்டோம்’ என்றனர். ஆதலால அவர் அதற்குச் -- -- -- -- -- -- -- -- -- -- -- -- என்று பெயரிட்டார்.

இரகபோத்து
சிபா
மக்பேலா
மம்ரே
சித்னா

14. தந்தையின் ஆசியைப்பெற ரெபேக்கா யாக்கோபுக்கு சொன்ன வழி என்ன?

இப்பொழுது என் மகனே, நான் கட்டளையிடுவதைக் கருத்தாய்க் கேள்.
உடனே மந்தைக்குப் போ
அங்கிருந்து இரு நல்ல வெள்ளாட்டுக் குட்டிகளைக் கொண்டு வா
நான் அவற்றை உன் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சுவையான உணவு வகைகளாகச் சமைத்துத் தருவேன்.
நீ அவற்றை உன் தந்தைக்கு உண்ணக் கொடுத்து அவர் சாவதற்கு முன் அவர் ஆசியைப் பெற்றுக்கொள்

15. ஈசாக்கு யாக்கோபுக்கு வழங்கிய ஆசி என்ன?

வானின் பனித்துளியும் மண்ணின் செழுமையும், மிகுந்த தானியமும், திராட்சை இரசமும் கடவுள் உனக்கு வழங்குவாராக
நாடுகள் உனக்குப் பணி புரிந்திடுக. மக்கள் உனக்குப் பணிந்திடுக
உன்றன் சோதரர்க்குத் தலைவன் நீ ஆகிடுவாய்
உன் அன்னையின் மைந்தர் உன்னடி பணிந்திடுவர்
உன்னைச் சபிப்பார் சாபம் பெறுக! உன்னை வாழ்த்துவார் வளமுற வாழ்க