மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 45
வேதாகமப் பகுதி : தொடக்க நூல் 22, 23, 24
முடிவுத் திகதி : 2017-09-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„உன் மகனை, நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, -- -- -- -- -- -- நிலப்பகுதிக்குச் செல்“

தாபோர்
மோரியா
சீனாய்
கலிலேயா
எகிப்து

2. ஈசாக்கைப் பலியிட யார் யார் சென்றனர்?

ஆதாம்
ஆபிரகாம்
ரெபேக்கா
வேலைக்காரர் இருவர்
சாரா

3. ஆபிரகாம் தம் வேலைக்காரர்களை நோக்கி கூறியது என்ன?

அங்கு நான் உனக்குக் காட்டும் மலைகளில் ஒன்றின் மேல் எரி பலியாக அவனை நீ பலியிட வேண்டும்.
நீங்கள் கழுதையோடு இங்கேயே காத்திருங்கள்
நானும், பையனும் அவ்விடம் சென்று வழிபாடு செய்தபின் உங்களிடம் திரும்பி வருவோம்
இதோ அடியேன்
உன் மகனை நீ அன்பு கூரும் உன் ஒரே மகனான ஈசாக்கை அழைத்துக்கொண்டு, மோரியா நிலப்பகுதிக்குச் செல்

4. 4.கோடிட்ட இடத்தை நிரப்புக:

„அப்பா! இதோ நெருப்பும் விறகுக் கட்டைகளும் இருக்கின்றன. எரிபலிக்கான -- -- -- -- -- -- எங்கே?“

வேலைக்காரர்
ஈசாக்கு
ஆட்டுக்குட்டி
ஆபிரகாம்
கழுதை

5. ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முனைகையில் ஆண்டவரின் தூதர் கூறியது என்ன?

ஆபிரகாம்! ஆபிரகாம்!!
பையன்மேல் கை வைக்காதே
அவனுக்கு எதுவும் செய்யாதே
உன் ஒரே மகனையும் எனக்குப் பலியிட நீ தயங்கவில்லை என்பதிலிருந்து நீ கடவுளுக்கு அஞ்சுபவன் என்று இப்போது நான் அறிந்து கொண்டேன்.
இதோ அடியேன்

6. ஆபிரகாம் தன் மகனுக்கு பதிலாக யாரை பலியிட்டார்?

கழுதை
வேலைக்காரர்
ஆட்டுக்கிடாய்
ஈசாக்கு
சாரா

7. ஆபிரகாம் பலியிடச் சென்ற மலையின் பெயர் என்ன?

தாபோர்
சீனாய்
யாவேயிரே
மலையில் ஆண்டவர் பார்த்துக்கொள்வார்
யெருசலேம்


8. ஆண்டவர் ஆபிரகாமுக்கு அளித்த வாக்குறுதி என்ன?

ஆண்டவர் கூறுவது இதுவே! நான் என்மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
உன் ஒரே மகனை எனக்குப் பலியிடத் தயங்காமல் நீ இவ்வாறு செய்வாய்.
ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.
உன் வழிமரபினர் தம் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கிக் கொள்வர்.
மேலும், நீ உன் குரலுக்குச் செவிகொடுத்ததனால் உலகின் அனைத்து இனத்தவரும் உன் வழிமரபின் மூலம் தங்களுக்கு ஆசி கூறிக்கொள்வர்.

9. ரெபெக்கா – சிறு குறிப்பு வரைக

பெத்துவேலின் மகள்
ஆபிரகாமின் சகோதரன் நாகோரின் பேத்தி
ஈசாக்கின் மனைவி
அவரின் சகோதரர் லாபான்
அவர் எழில்மிக்க தோற்றமுடையவள்.

10. சாரா எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

நூறு ஆண்டுகள்
நூற்றிருபத்தாறு ஆண்டுகள்
நூற்றிருபத்தெட்டு ஆண்டுகள்
நூற்றிருபத்தைந்து ஆண்டுகள்
நூற்றிருபத்தேழு ஆண்டுகள்

11. சாரா எங்கே அடக்கம் செய்யப்பட்டார்?

மம்ரே
யெருசலேம்
கலிலேயா
இந்தியா
எகிப்து

12. ரெபேக்கா, ஆபிரகாமின் வேலைக்காரருக்கு செய்தது என்ன?

தம் குடத்தை தோளினின்று இறக்கி அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்.
ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.
ஓடிச் சென்று தன் தாயின்வீட்டில் உள்ளோருக்கு இந்நிகழ்ச்சிகளைப்பற்றிக் கூறினார்.
அவரைக் கண்டுகொள்ளவில்லை
அவருக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை

13. பெண்கேட்ட ஆபிரகாமின் வேலைக்காரரிடம் லாபானும் பெத்துவேலும் கூறியது என்ன?

இச்செயல் ஆண்டவரால் நிகழ்ந்துள்ளது.
நாங்கள் இதற்குச் சாதகமாகவோ பாதகமாகவோ ஒன்றும் சொல்லக்கூடாது.
இதோ, ரெபேக்கா உம்முன் இருக்கிறாள்
ஆண்டவர் சொன்னபடியே அவள் உம் தலைவருடைய மகனுக்கு மனைவி ஆகும்படி அவளை அழைத்துக்கொண்டு போங்கள்
பெண் பத்து நாள்களேனும் எங்களோடு இருக்கட்டும்

14. ரெபேக்காவை எப்படி அவர்கள் ஆசி வழங்கி, அனுப்பி வைத்தனர்?

ஆண்டவர் போற்றி! போற்றி!
என் தலைவருக்கு அவர் காட்டியிருந்த பேரன்பையும் உண்மையையும் விட்டு விலகவில்லை
எம் சகோதரியே! ஆயிரம் ஆயிரமாக நீ பெருகுவாய்.
உன் வழிமரபினர் தங்கள் பகைவரின் நகர்களை உரிமையாக்கிக் கொள்வார்களாக
ஆண்டவரின் ஆசிபெற்றவரே வருக

15. 15.ஈசாக்கைக் கண்டதும் ரெபேக்கா செய்தது என்ன?

கண்களை உயர்த்தி ஈசாக்கைப் பார்த்தார்
உடனே அவர் ஒட்டகத்தை விட்டு இறங்கினார்
தம் முக்காட்டை எடுத்து தம்மை மூடிக்கொண்டார்.
அவரை வெறுத்தார்
அவரைக் கண்டுகொள்ளவில்லை