மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 44
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 19, 20, 21
முடிவுத் திகதி : 2017-08-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. சோதோமை விட்டு வெளியேறும் முன் லோத்துக்கு ஆண்டவர் தூதர்கள் கூறியது என்ன?

உன்னைச் சார்ந்த வேறு யாரேனும் இந்நகரில் இருந்தால், அவர்களை இவ்விடத்திலிருந்து உன்னுடன் அழைத்துக்கொண்டு போய்விடு
உன் மனைவியையும், உன் இரு புதல்வியரையும் கூட்டிக்கொண்டு போ.
இந்த இடத்தின் மக்களுக்கு எதிராக பெருங்கண்டனக்குரல் ஆண்டவர் திருமுன் எழுந்துள்ளதால், நாங்கள் இந்த இடத்தை அழிக்கும்படி எங்களை அவர் அனுப்பியுள்ளார்.
நீ உயிர்தப்புமாறு ஓடிப்போ; திரும்பிப்பார்க்காதே; சமவெளி எங்கேயும் தங்காதே;
மலையை நோக்கித் தப்பி ஓடு; இல்லையேல் அழிந்து போவாய்

2. லோத்து தப்பித்து ஓடி அடைந்த நகர் எது?

எகிப்து
சோவார்
பெத்லகேம்
எருசலேம்
சோதோம்

3. ஆண்டவர் எந்த நகரின் மீது கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்?

சோவார்
கலிலேயா
பெத்லகேம்
சோதோம்
கொமோரா

4. சோதோம் நகர் அழிவை திரும்பிப்பார்த்ததால் உப்புத்தூணாக மாறியவர் யார்?

லோத்து
லோத்தின் புதல்வியர்
லோத்தின் மனைவி
ஆபிரகாம்
ஆண்டவரின் தூதர்கள்

5. லோத்தின் புதல்வியர் பெற்றெடுத்த பிள்ளைகள் யாவர்?

மோவாபு
ஆபிரகாம்
பென்அம்மி
சாரா
அபிமெலக்கு

6. ஏன் சாராவை சகோதரி என்று சொன்னீர் என்ற அபிமெலக்கு மன்னனுக்கு ஆபிரகாமின் மறுமொழி என்ன?

இவ்விடத்தில் கடவுளுக்கு அஞ்சுவார் எவரும் இல்லையென்றும் என் மனைவியை அடையும்பொருட்டு என்னைக் கொன்று விடுவார்கள் என்றும் நினைத்தேன்
மேலும், உண்மையில் இவள் என் சகோதரியே;
இவள் என் தந்தைக்குப் பிறந்த மகள். ஆனால் என் தாயின் மகள் அல்ல
அவளை நான் மணந்துகொண்டேன்.
மேலும், நான் என் தந்தையின் வீட்டைவிட்டுக் கடவுள் என்னை அலைந்து திரியச் செய்தபோது, “நீ எனக்குப் பேருதவி செய்யவேண்டும்; நாம் செல்லுமிடமெல்லாம், நான் உன் சகோதரன் என்று சொல்” என்று அவளிடம் நான் கூறியிருந்தேன்.

7. ஆபிரகாம், சாராவின் மகன் யார்?

அபிமெலக்கு
ஈசாக்கு
லோத்து
மோவாபு
பென்அம்மி

8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

அந்தப் பெண்ணை அவளின் கணவனிடம் அனுப்பிவிடு. ஏனெனில் அவன் ஓர் -- -- -- -- -- -- -- -.

ஆண்டவர்
தகப்பன்
சகோதரன்
இறைவாக்கினன்
காவலன்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

“இதோ உன் சகோதரருக்கு -- -- -- -- -- -- -- -- -- -- - கொடுத்துள்ளான். உன்னோடு இருப்பவர்களின் பார்வையிலிருந்து அது மறைக்கும் திரையாக அமையட்டும்.”

ஆயிரம் வெள்ளிக்காசு
ஐநூறு வெள்ளிக்காசு
முப்பது வெள்ளிக்காசு
வெள்ளிக்காசு
தங்கம்

10. ஈசாக்கு பிறந்தவுடன் சாரா மகிழ்ச்சியுடன் சொன்னது என்ன?

கடவுள் என்னைச் சிரிக்க வைத்தார் என்றும் இதைக் கேட்கும் அனைவரும் என்னோடு சேர்ந்து சிரிப்பர்.
சாரா தம் புதல்வர்களுக்குப் பாலூட்டுவார் என்று ஆபிரகாமிடம் யாராவது சொல்லியிருப்பார்களா?
ஆயினும் இதோ அவருக்கு அவரது முதிர்ந்த வயதில் நான் ஒரு மகனைப் பெற்றெடுத்துள்ளேன்.
அனைவர் பார்வையிலும் உன் பழி நீங்கிவிட்டது.
நான் நேரிய இதயத்தோடும் தூய கைகளோடும் இதைச் செய்தேன்

11. சாரா ஏன் ஆகாரை வீட்டை விட்டு துரத்த எண்ணினாள்?

அவள் ஓர் எகிப்தியப் பெண்
பணிப்பெண்ணின் மகன் தன் மகன் ஈசாக்குடன் பங்காளியாய் இருக்கக்கூடாது.
அவள் சரியாக வேலை செய்யவில்லை
ஆபிரகாமுக்கு பிடித்திருந்தது
அவள், சாராவின் குழந்தை ஈசாக்குடன் விளையாடுகிறாள்

12. வேதனையடைந்த ஆபிரகாமுக்கு கடவுள் கூறியது என்ன?

பையனையும் பணிப்பெண்ணையும் குறித்து வேதனைப்படாதே
சாரா உனக்குச் சொல்வதையெல்லாம் அப்படியே செய்.
ஏனெனில் ஈசாக்கின் மூலமே உன் வழிமரபு விளங்கும்.
உன் பணிப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருப்பதால், அவனிடமிருந்தும் இனமொன்று தோன்றச் செய்வேன்.
இந்தப் பணிப்பெண்ணையும் அவள் மகனையும் துரத்திவிடும்

13. ஆகார் எந்த பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்?

பெயேர்செபா
சஹாரா
தார்
சோதோம்
கோமோரா

14. ஆண்டவரின் தூதர் ஆகாரிடம் கூறியது என்ன?

ஆகார்! உனக்கு நிகழ்ந்தது என்ன?
அஞ்சாதே. ஏனெனில், கிடத்தியிருக்கிற இடத்தினின்று பையனின் அழுகுரலை கடவுள் கேட்டருளினார்.
நீ எழுந்து பையனைத் தூக்கி விடு
அவனை உன் கையில் பிடித்துக்கொள்.
ஏனெனில், அவனிடமிருந்து பெரிய இனமொன்று தோன்றச் செய்வேன்

15. கடவுள் ஆகாருக்குச் செய்த நன்மை என்ன?

கடவுள் அவள் கண்களைத் திறந்துவிட, அவள் நீருள்ள கிணற்றைக் கண்டாள்.
அவள் அங்குச் சென்று தோற்பையை நீரால் நிரப்பிப் பையனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
கடவுளும் பையனோடு இருந்தார்
அவன் வளர்ந்து பாலை நிலத்தில் குடியிருந்தான். அம்பு எய்வதில் வல்லவனானான்.
கடவுள் அவர்களை தண்டித்தார்.