மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 43
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 16, 17,18
முடிவுத் திகதி : 2017-07-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஆகார்: சிறு குறிப்பு வரைக

இவர் ஓர் எகிப்திய பணிப்பெண்
இவர் ஓர் எபிரேயப் பெண்
இவருக்கும் ஆபிராமுக்கும் பிறந்தவர் இஸ்மயேல்.
இவருக்கும் ஆபிரகாமுக்கும் பிறந்தவர் ஈசாக்
சாராயிடமிருந்து தப்பி பாலைவனத்துக்கு ஓடியவள்

2. ஆண்டவரின் தூதர் ஆகாரிடம் கூறியது என்ன?

நீ உன் தலைவியிடம் திரும்பிச் சென்று அவளுக்குப் பணிந்து நட
உன் வழிமரபினரை யாரும் எண்ண முடியாத அளவுக்குப் பெருகச் செய்வேன்.
இதோ! கருவுற்றிருக்கும் நீ ஒரு மகனைப் பெற்றெடுப்பாய்
அவனுக்கு இஸ்மயேல் எனப் பெயரிடுவாய்
ஏனெனில் உன் துயரத்தில் ஆண்டவர் உனக்குச் செவிசாய்த்தார்.

3. ஆண்டவரை என்ன பெயரிட்டு ஆகார் அழைத்தாள்?

இம்மானுவேல்
மெசியா
இயேசு கிறிஸ்து
காண்கின்ற இறைவன் நீர்
தலைவன்

4. காதேசுக்கும் பெரேதுக்கும் இடையே இருந்த கிணற்றின் பெயர் என்ன?

யாக்கோபு கிணறு
பெயேர் லகாய்ரோயி
இஸ்மயேல்
ஆபிராம்
சாராய்

5. இஸ்மயேலைப் பெற்றெடுத்தபோது ஆகாருக்கு வயது என்ன?

இருபது
நாற்பத்தாறு
ஐம்பத்தாறு
எண்பத்தாறு
நூறு

6. ஆபிரகாமோடு ஆண்டவர் செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய்
இனி உன் பெயர் ஆபிராம் அன்று; ஆபிரகாம் என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்
மிகப் பெருமளவில் உன்னைப் பலுகச்செய்வேன்.
உன்னிடமிருந்து நாடுகளை உண்டாக்குவேன். உன்னிடமிருந்து அரசர்கள் தோன்றுவர்
நீ தங்கியிருக்கும் நாட்டையும் கானான் நாடு முழுவதையும் என்றுமுள்ள உரிமைச் சொத்தாக உனக்கும் உனக்குப்பின் உன் வழிமரபினருக்கும் வழங்குவேன்.

7. கடவுளுக்கும் ஆபிரகாமுக்குமிடையே உள்ள உடன்படிக்கையின் அடையாளம் எது?

உங்களுள் ஒவ்வொரு ஆணும் விருத்தசேதனம் செய்து கொள்ளவேண்டும்.
தலைமுறை தலைமுறையாக எட்டு நாள் ஆன உங்கள் ஆண்குழந்தை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் விருத்தசேதனம் செய்யவேண்டும்.
உன் வீட்டில் பிறந்த குழந்தைக்கும் விலைக்கு வாங்கியதற்கும் கண்டிப்பாக விருத்தசேதனம் செய்யவேண்டும்.
இவ்வாறு என் உடன்படிக்கை உன் உடலில் என்றுமுள்ள உடன்படிக்கையாக இருக்கும்.
தன் உடலில் விருத்தசேதனம் செய்யப்படாத எந்த ஆண்மகனும், என் உடன்படிக்கையை மீறியதால், தன் இனத்தாரிடமிருந்து விலக்கப்படுவான்.


8. கோடிட்ட இடத்தை நிரப்புக:

கடவுள் ஆபிராமிடம், „இனி உன் பெயர் ஆபிராம் அன்று; -- -- -- -- -- -- -- -- - என்ற பெயரால் நீ அழைக்கப்படுவாய்.“

ஈசாக்கு
ஆபிராம்
ஆபிரகாம்
சாரா
ஆகார்

9. கோடிட்ட இடத்தை நிரப்புக:

பின்பு கடவுள் ஆபிரகாமிடம், „உன் மனைவியைச் ‚சாராய்‘ என அழைக்காதே. இனிச் -- -- -- -- -- என்பதே அவள் பெயர்.

ஆகார்
சாரா
இஸ்மயேல்
ஆபிராம்
பெயேர் லகாய்ரோயி

10. „நூறு வயதிலா எனக்குக் குழந்தை பிறக்கும்?“ இது யார் கூற்று?

சாரா
ஆகார்
ஆதாம்
ஈசாக்கு
ஆபிரகாம்

11. விருத்தசேதனம் செய்யப்பட்டபோது இஸ்மயேலுக்கு எத்தனை வயது?

தொண்ணூற்றொன்பது
பதின்மூன்று
பதினான்கு
மூன்று
இரண்டு

12. கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதி என்ன?

உன் மனைவி சாரா உனக்கு ஒரு மகனைப் பெறுவாள்
அவனுக்கு நீ ‚ஈசாக்கு‘ எனப் பெயரிடுவாய்
இஸ்மயேலைப் பற்றிய உன் வேண்டுதலை நான் கேட்டேன்
அவனுக்கு ஆசி வழங்கி, அவனை மிகப்பெருமளவில் பலுகச் செய்வேன்.
சாரா உனக்கு அடுத்த ஆண்டு இதே காலத்தில் பெறப்போகும் ஈசாக்கிடம் என் உடன்படிக்கையை நிலைநாட்டுவேன்

13. ஆபிரகாம் மூன்று மனிதர்களை நோக்கி கூறியது என்ன?

என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்ததாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக
இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும்
உங்கள் கால்களைக் கழுவியபின், இம்மரத்தடியில் இளைப்பாருங்கள்
கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன்
நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள்.

14. கோடிட்ட இடத்தை நிரப்புக:

ஆண்டவர் -- -- -- -- என்ற இடத்தில் -- -- -- -- -- -- -- மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார்

கலிலிலேயா
மம்ரே
எகிப்து
தென்னை
தேவதாரு

15. சோதோமுக்காக ஆபிரகாம் கடவுளிடம் எவ்வாறு மன்றாடினார்?

ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ?
ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?
ஒருவேளை, அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?
ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?
இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒருவேளை அங்குப் பத்துப்பேர் மட்டும் காணப்பட்டால்?