1. ஏன் ஆபிரகாமும் லோத்தும் பிரிந்தனர்?
2. பிரிவதற்கு முன்னால் லோத்தை நோக்கி, ஆபிரகாம் கூறியது என்ன?
3. லோத்து பிரிந்தபின் ஆண்டவர் ஆபிராமை நோக்கி கூறியது என்ன?
4. லோத்தைப் பிரிந்தபின் ஆபிராம் எங்கே வாழ்ந்தார்?
5. கோடிட்ட இடத்தை நிரப்புக: "நான்கு அரசர்கள் ஐந்து அரசர்களுக்கு எதிராக -- -- -- -- -- -- -- - பள்ளத்தாக்கில் போர்தொடுத்தனர்".
6. லோத்து எங்கே வாழ்ந்தார்?
7. ஆபிராம் லோத்தை எப்படி மீட்டார்?
8. மெல்கிசெதேக் யார்?
9. ஆபிராம் சோதோம் அரசனிடம் கூறியது என்ன?
10. மெல்கிசெதேக்கு ஆபிராமை எப்படி வாழ்த்தினார்?
11. கோடிட்ட இடத்தை நிரப்புக: „ஆபிராம்! -- -- -- -- -- -- நான் உனக்குக் கேடயமாக இருப்பேன்.“
12. ஆபிராம் கடவுளிடம் வைத்த வேண்டுகோள் என்ன?
13. கடவுள் ஆபிராமுக்கு தந்த வாக்குறுதி என்ன?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறு வரை உள்ள -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- -- - ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்."
15. ஆபிரகாமின் வழிமரபினர் எத்தனை ஆண்டுகள் அடிமைகளாக இருப்பர் என்று கடவுள் முன்னுரைக்கிறார்?