1. கோடிட்ட இடத்தை நிரப்புக: “அப்பொழுது உலகம் முழுவதிலும் -- -- -- -- -- -- - -- -- -- -- -- -- -- -- இருந்தன.”
2. சினயார் நாட்டில் சமவெளி ஒன்றில் குடியேறியபின் மக்கள் செய்தது என்ன?
3. வானளாவிய கோபுரம் கட்டுவதைக் கண்ட ஆண்டவர் கூறியது என்ன?
4. வானளாவிய கோபுரம் கட்டி தங்கள் பெருமையை நிலைநாட்ட விரும்பிய மக்களை ஆண்டவர் என்ன செய்தார்?
5. தெராகின் புதல்வர்கள் யாவர்?
6. சேமின் வழிமரபினர் யாவர்?
7. ஆபிராமின் மனைவி யார்?
8. ஆரானின் பிள்ளைகள் யாவர்?
9. நாகோரின் மனைவி யார்?
10. ஆபிராம் பிறந்த ஊர் எது?
11. ஆண்டவர் ஆபிராமுக்கு வழங்கிய ஆசி யாது?
12. கோடிட்ட இடத்தை நிரப்புக: பஞ்சம் கடுமையாக இருந்ததால், ஆபிராம் தாம் தங்கி வாழ்வதற்கு -- -- -- -- -- -- -- - நாட்டிற்குச் சென்றார்.
13. ஆபிராமை எகிப்தியர் எவ்வாறு வரவேற்றனர்?
14. ஆண்டவரின் கோபத்தைக் கண்டு பார்வோன் ஆபிராமை நோக்கி கூறியது என்ன?
15. எதற்காக ஆபிராம் தன் மனைவி சாராயை சகோதரி என்று பார்வோனிடம் சொன்னார்?