மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 40
வேதாகமப் பகுதி : தொடக்க நூல் 8, 9,10
முடிவுத் திகதி : 2017-04-30

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. வெள்ளப்பெருக்கின் முடிவை தொடக்கநூல் ஆசிரியர் எவ்வாறு விளக்குகிறார்?

மண்ணுலகின் மீது காற்று வீசியது
பேராழத்தின் ஊற்றுகளும், வானங்களின் மதகுகளும் மூடப்பட்டன.
வானத்திலிருந்து மழை பெய்வது நின்றது
பத்தாம் மாதம் வரை வெள்ளம் குறைந்துகொண்டே வந்தது
பத்தாம் மாதத்தின் முதல் நாளில் மலை உச்சிகள் தெரிந்தன

2. வெள்ளப்பெருக்கின் முடிவில் பேழை எங்கே தங்கியது?

தாபோர் மலையில்
அரராத்து மலைத்தொடரில்
எருசலேமில்
பெத்லகேமில்
எகிப்தில்

3. வெள்ளம் வடிந்துவிட்டதா என அறிய முதன்முதலில் நோவா அனுப்பிய பறவை எது?

புறா
கிளி
காகம்
குருவி
கழுகு

4. ஆண்டவர் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கை என்ன?

உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்
சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப்பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது
மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப்பெருக்கு வரவே வராது
உடன்படிக்கையின் அடையாளமாக, என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன்
உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்கு தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.

5. நோவாவின் ஆடை விலகியிருந்ததை கண்டவர் யார்?

கானான்
சேம்
எப்பேத்து
காம்
ஆதாம்

6. ஆண்டவர் வெள்ளப்பெருக்கின் முடிவில் நோவாவுக்கு எவ்வாறு ஆசி வழங்கினார்?

பலுகிப்பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்
அனைத்து உயிர்களும் உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளன
ஒரு மனிதரின் இரத்தத்தை எவர் சிந்துகிறாரோ அவரது இரத்தம் வேறொரு மனிதரால் சிந்தப்படும்.
கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்
கானான் சபிக்கப்பட்டவன்

7. வெள்ளம் வடிந்துவிட்டதா என அறிய நோவா இரண்டாவது முறையாக எந்த பறவையை அனுப்பினார்?

காகம்
மயில்
வாத்து
கோழி
புறா

8. வெள்ளம் முழுவதும் வடிந்துவிட்டது என்பதை நோவா எவ்வாறு அறிந்துகொண்டார்?

புறாவை பேழையிலிருந்து வெளியே அனுப்பினார்
மாலையில் அது அவரிடம் திரும்பி வந்தபொழுது, அதன் அலகில் அது கொத்திக்கொண்டு வந்த ஒலிவ இலை இருந்தது.
அப்பொழுது நோவா மண்ணுலகில் வெள்ளம் வற்றிவிட்டது என்று தெரிந்துகொண்டார்.
இன்னும் ஏழு நாள்கள் காத்திருந்தபின், புறாவை வெளியே அனுப்பினார். அது அவரிடம் மறுபடி திரும்பி வரவில்லை.
பிறகு நோவா பேழையின் மேற்கூரையைத் திறந்து பார்த்தார்.

9. “கடவுள் மனிதரைத் தம் உருவில் உண்டாக்கினார்“ – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

தொடக்கநூல் 1:26
தொடக்கநூல் 8:1
தொடக்கநூல் 5:1
தொடக்கநூல் 10:3
தொடக்கநூல் 9:6

10. நிம்ரோது யார்?

காமின் மகன்
கூசு என்பவரின் மகன்
முதன்முதலாக உலகத்தில் பேராற்றல் கொண்டவனாக விளங்கியவன்
ஆண்டவர் திருமுன் இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான்
இதனால் „ஆண்டவர் திருமுன் நிம்ரோதைப் போன்ற ஆற்றல்மிக்க வேடன்“ என்ற வழக்கு ஏற்படலாயிற்று.

11. நோவா எவ்வாறு கானானை சபித்தார்?

கானான் சபிக்கப்பட்டவன்
தன் சகோதரருக்கு அவன் அடிமையிலும் அடிமையாக இருப்பான்
சேமின் கடவுளாகிய ஆண்டவர் போற்றி! அவனுக்குக் கானான் அடிமையாக இருப்பான்.
கடவுள் எப்பேத்து குடும்பத்தைப் பெருகச் செய்யட்டும். அவன் சேமின் கூடாரத்தில் வாழட்டும். அவனுக்கும் கானான் அடிமையாக இருக்கட்டும்
இவன் ஆற்றல்மிக்க வேடனாக இருந்தான்

12. நோவா எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

950 ஆண்டுகள்
350 ஆண்டுகள்
150 ஆண்டுகள்
400 ஆண்டுகள்
500 ஆண்டுகள்

13. ஆண்டவர் நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையின் அடையாளம் என்ன?

காற்று
மழை
மேகம்
வானவில்
நீர்

14. "பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்" இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?

தொடக்கநூல் 9:1
தொடக்கநூல் 45:1
தொடக்கநூல் 9:7
விடுதலைப்பயணம் 6:1
தொடக்கநூல் 1:28

15. 15.கோடிட்ட இடத்தை நிரப்புக

"இறைச்சியை அதன் உயிராகிய -- -- -- -- -- -- -- -- -- -- - உண்ணாதீர்கள்".

உடலோடு
உயிரோடு
இரத்தத்தோடு
உணவோடு
பரிவோடு