மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 3
வேதாகமப் பகுதி : மத்தேயு நற்செய்தி 5 முதல் 6 வரையான அதிகாரங்கள்.
முடிவுத் திகதி : 2014-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஏழையின் உள்ளத்தோர், துயருறுவோர், கனிவுடையோர், நீதிநிலை நாட்டுவோர், பெறும் கைமாறுகள் முறையே எவை?

கடவுளைக்காணும் பாக்கியம், விண்ணரசு, ஆறுதல், நாட்டின் உரிமை
விண்ணரசு, ஆறுதல், நாட்டின் உரிமை, நிறைவு
இவ்வுலக அரசாட்சி, ஆறுதல், நாட்டின் உரிமை, நிறைவு
விண்ணரசு, பாவமன்னிப்பு, நாட்டின் உரிமை, சமாதானம்
விண்ணரசு, ஆறுதல், இரட்டிப்பு நன்மை, நிறைவு

2. இரக்கமுடையோர், தூய்மையான உள்ளத்தோர், அமைதி ஏற்படுத்துவோர், நீதியின் பொருட்டுத் துன்புறுவோர் பெறும் கைமாறுகள் முறையே எவை?

விண்ணரசு, ஆறுதல், நாட்டின் உரிமை, நிறைவு
இரக்கம், கடவுளைக் காண்பர், ஆறுதல், விண்ணரசு.
இரக்கம், கடவுளைக் காண்பர், கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர், விண்ணரசு.
நாட்டின் உரிமை, கடவுளைக் காண்பர், கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர், விண்ணரசு.
நாட்டின் உரிமை, சமாதானம், பாவமன்னிப்பு, விண்ணரசு.

3. எந்த வேளையில் நாம் மகிழ்ந்து பேருவகை கொள்ளும்படி இயேசு மலைப்பொழிவில் கற்பிக்கின்றார்?

உங்கள் நற்செய்கைகளைக் கண்டு பிறர் பாராட்டும்போது
உங்கள் பகைவரிடம் அன்பு கூரும்போது
நீங்கள் நோன்பு இருக்கும்போது
இயேசுவின் பொருட்டு இகழ்ந்து, துன்புறுத்தி, இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது.
திருமுழுக்கு பெறும் போது

4. கீறீட்ட இடத்தில் வரவேண்டிய சொற்கள் எவை?
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் ................... ...............................பணிவிடை செய்ய முடியாது.

வீட்டுக்கும் நாட்டுக்கும்
கடவுளுக்கும் செல்வத்துக்கும்
மனிதருக்கும் கடவுளுக்கும்
திருச்சபைக்கும் இயேசுவிற்கும்
மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும்

5. விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவர் என்று இயேசு யாரைக் யாரைக் குறிப்பிடுகின்றார்?

பரிசேயர் போன்று வாழ்பவர்.
யாரையேனும் கொலை செய்கிறவர்
முதலாவது கட்டளையை மீறுகின்றவர்
கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கு கற்பிக்கிறவர்.
தன் மனைவியை விலக்கிவிடுகிறவன்

6. “கொலை செய்யாதே, கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் “ என்ற முற்காலத்தவர்க்கு கூறிய கூற்றை இயேசு எவ்விதங்களில் விரிவுபடுத்துகின்றார்?.

தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்
தம் சகோதரரையோ சகோதரியையோ ' முட்டாளே ' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்
கட்டளைகளில் மிகச் சிறியது ஒன்றையேனும் மீறி அவ்வாறே மக்களுக்கும் கற்பிக்கிறவர் விண்ணரசில் மிகச் சிறியவர் எனக் கருதப்படுவார்.
ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கெனவே அப்பெண்ணோடு விபசாரம் செய்தாயிற்று.
தம் சகோதரரையோ சகோதரியையோ அறிவிலியே ' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

7. பலிபீடத்தின்முன் காணிக்கையை செலுத்த வரும்பொழுது உறவினர்களிடம் மனத்தாங்கல் இருந்தால் என்ன செய்ய சொல்லி இயேசு சொல்லுகின்றார்?

பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்துவிட்டு போய் முதலில் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
நல்லுறவு ஏற்படுத்தியதன் பின்னர் வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
உங்களிடம் கேட்கிறவர்களுக்கு கொடுங்கள்
உறவினரைப் பற்றி குருவிடம் முறையிடவும்
உடனே நல்ல பாவ அறிக்கை செய்யவும்


8. ஏன் இறைமகன் இயேசு விண்ணுலகின் மேலும் மண்ணுலகின் மேலும் ஆணையிடவேண்டாம் என்று சொன்னார்?

விண்ணுலகு கடவுளின் அரியணை
விண்ணுலகு கடவுளின் கால்மணை
மண்ணுலகு கடவுளின் கால்மணை
மண்ணுலகு கடவுளின் அரியணை
விண்ணுலகு புனிதர்கள் வாழும் இடம்

9. மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும் இல்லையெனில் என்ன நடக்கும் என்று இயேசு சொல்லுகின்றார்?

உங்கள் பாவங்கள் மன்னிக்கப்படாது
திருச்சபையில் நீங்கள் சேரமுடியாது
நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது
உடல் நோய்கள் உங்களுக்கு வரும்
மண்ணுலகில் நீங்கள் சபிக்கப்பட்டவர்களாக இருப்பீர்கள்.

10. நாம் தர்மம் செய்யும் போது எவ்வாறு செய்ய வேண்டும் என்று இயேசு கூறுகின்றார்?

உங்களைப் பற்றித் தம்பட்டம் அடிக்காதீர்கள்.
திருச்சபை மூலமாக செய்யுங்கள்
உங்கள் வலக்கை செய்வது இடக்கைக்குத் தெரியாதிருக்கட்டும்
எல்லாருக்கும் முன்பாக செய்யுங்கள்
உங்களிடம் கேட்கிறவர்களுக்கு கொடுங்கள்

11. இறைவேண்டலின்போது பின்பற்ற வேண்டிய உண்மையான ஒரு பண்பு யாவை?

வெளிவேடக்காரரைப்போல் இருக்க வேண்டாம்.
தொழுகைகூடங்களிலும் வீதியோரங்களிலும் நின்றுகொண்டு செபிக்க வேண்டும்
உங்கள் உள்அறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு மறைவாய் உள்ள உங்கள் தந்தையை நோக்கி வேண்டுங்கள்
ஆலயத்துக்குள் சென்று நற்கருணையின் முன் மட்டும் செபியுங்கள்.
பிற இனத்தவரைப் போலப் பிதற்ற வேண்டாம்

12. விண்ணுலகிலிருக்கிற எங்கள் தந்தையே என்று இயேசு கற்பித்த செபத்தில் காண்கின்ற பகுதிகள் யாவை?

ஆண்டவரைப் போற்றுதல்
குற்றம் செய்தோரை மன்னித்து, மன்னிப்பு வேண்டுவது
சோதனையிலிருந்து விடுபட வேண்டுவது
மற்ற மனிதர் எமக்கு எதிராக செய்யும் குற்றங்களை மன்னிப்பது
அன்னை மரியாளை வாழ்த்துவது.

13. நோன்பு இருக்கும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறை என்ன?

உங்கள் தலையில் எண்ணெய் தேய்த்து முகத்தை கழுவுவது
முகவாட்டமாயிருப்பது
முகத்தை விகாரப்படுத்தி கொள்வது
ஆலய மக்களிடம் உங்களுடைய நோன்பு பற்றி கூறுவது
சோதனைக்கு உட்படாமல் இருப்பது

14. மண்ணுலகில் செல்வம் சேர்க்காமல் விண்ணுலகில் சேர்த்து வைக்கும்படி இயேசு கூறியதற்கு காரணம் என்ன?

மண்ணுலகில் செல்வத்தை பூச்சியும் துருவும் அழித்துவிடும்
விண்ணுலகில் செல்வத்தை பூச்சியோ துருவோ அழிப்பதில்லை
அதிக செல்வத்தை மண்ணுலகில் சேர்ப்பது பாவம்.
விண்ணுலகில் திருடர் கன்னமிட்டுத் திருடுவதில்லை
நாங்கள் மண்ணுலகில் ஒரு நாள் மரிக்க வேண்டும்.

15. எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? என்று கவலை கவலைப்பட வேண்டாம் என்பதற்கு இயேசு கூறிய காரணங்கள் எவை ?

உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை.
திருச்சபையை நிறுவிய இறைவன், நிச்சயம் அதைப் பாதுகாப்பார்.
வானத்துப் பறவைகள் விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. ஆனாலும் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார்.
காட்டுப்புல்லுக்கு அணிசெய்யும் இறைவன், உங்களையும் பாதுகாப்பார்.
கவலைப் படுவதால் எவரும் தமது உயரத்தோடு ஒரு முழமேனும் கூட்ட முடியாது.