மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 39
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 5, 6, 7
முடிவுத் திகதி : 2017-03-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„ ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார். அவர்களைப் படைத்த நாளில் அவர்களுக்கு ஆசி வழங்கி, -- -- -- -- -- -- -- -- -- - என்று பெயரிட்டார்.“

ஆதாம்
ஏவாள்
மனிதர்
காயின்
ஆபேல்

2. ஆதாம் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

130 ஆண்டுகள்
100 ஆண்டுகள்
150 ஆண்டுகள்
930 ஆண்டுகள்
940 ஆண்டுகள்

3. நூற்று முப்பது வயதானபோது, ஆதாமுக்கு பிறந்த மகன் யார்?

சேத்து
காயின்
ஆபேல்
ஏவாள்
ஏனோசு

4. ஆதாமின் வழிமரபினர்கள் யாவர்?

சேத்து
ஏனோசு
கேனான்
மகலலேல்
எரேது

5. நோவா - சிறுகுறிப்பு வரைக

இவரின் தந்தை பெயர் இலாமேக்கு.
நோவா என்பதற்கு ஆறுதல் அளிப்பவன் என்று பொருள்.
இவர் ஆதாமின் வழிமரபில் வந்தவர்
நோவா நூறு ஆண்டுகள் வாழ்ந்து இறந்தார்
சேம், காம், எப்பேத்து ஆகியோர் நோவாவின் பிள்ளைகள்.

6. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„தெய்வப் புதல்வர் மனிதரின் புதல்வியருடன் சேர்ந்து அவர்களுக்குக் குழந்தைகள் பிறக்க, அக்காலத்திலும் அதற்கு பின்னரும் மண்ணுலகில் -- -- -- -- -- -- -- -- -- -- இருந்தனர். அவர்களே பெயர் பெற்ற பழங்கால -- -- -- -- -- -- -- -- -- ஆவர்“

தெய்வம்
அரக்கர்
அரசர்
பெருவீரர்கள்
ஆண்டவர்

7. மண்ணுலகை ஏன் கடவுள் அழிக்க எண்ணினார்?

மண்ணுலகில் மனிதர் செய்யும் தீமை பெருகுவதையும் அவர்களின் இதயச் சிந்தனையெல்லாம் நாள் முழுவதும் தீமையையே உருவாக்குவதையும் ஆண்டவர் கண்டார்.
மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார்.
கடவுள் முன்னிலையில் மண்ணுலகு சீர்கெட்டிருந்தது
பூவுலகு வன்முறையால் நிறைந்திருந்தது.
மண்ணுலகில் ஒவ்வொருவரும் தீய வழியில் நடந்துவந்தனர்


8. கடவுள் நோவாவிடம் கூறியது என்ன?

நானோ, வானுலகின் கீழ் உயிருள்ள எல்லாவற்றையும் அழிப்பதற்காக மண்ணுலகின்மேல் வெள்ளப்பெருக்கு வரச் செய்வேன்.
உன் புதல்வர், உன் மனைவி, உன் புதல்வரின் மனைவியர் ஆகியோருடன் நீ பேழைக்குள் செல்.
உன்னுடன் உயிர் பிழைத்துக்கொள்ளுமாறு, சதையுள்ள எல்லா உயிரினங்களிலிருந்தும் வகைக்கு இரண்டைப் பேழைக்குள் கொண்டு வா.
வகை வகையான பறவைகள், கால்நடைகள், நிலத்தில் ஊர்வன ஆகியவற்றிலிருந்து வகைக்கு இரண்டு உயிர் பிழைத்துக்கொள்ள உன்னிடம் வரட்டும்.
உண்பதற்கான எல்லா வகை உணவுப் பொருள்களையும் நீ எடுத்துச் சென்று சேர்த்து வைத்துக்கொள்.

9. பேழை எப்படி செய்யவேண்டும் என கடவுள் நோவாவிடம் அறிவுறுத்தினார்?

கோபர் மரத்தால் ஒரு பேழை செய்
அதில் அறைகள் அமைத்து அதற்கு உள்ளேயும் வெளியேயும் கீல் பூசு
பேழையை நீ செய்யவேண்டிய முறையாவது: நீளம் முந்நூறு முழம்; அகலம் ஐம்பது முழம்; உயரம் முப்பது முழம்.
பேழைக்குமேல் கூரை அமைத்து அந்தக் கூரை பேழைக்கு ஒரு முழம் வெளியே தாழ்வாக இருக்கும்படி கட்டி முடி
பேழையின் கதவை ஒரு பக்கத்தில் அமை. பேழையில் கீழ்த்தளம், நடுத்தளம், மேல்தளம் என் மூன்று தளங்கள் அமை.

10. கடவுள் மண்ணுலகை எவ்வாறு அழித்தார்?

பேராழத்தின் ஊற்றுகள் எல்லாம் பீறிட்டெழுந்தன
வானங்களின் மதகுகள் திறக்கப்பட்டன
நாற்பது பகலும் நாற்பது இரவும் மண்ணுலகில் பெரு மழை பெய்தது
மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்து பெருகப்பெருக வானத்தின்கீழ் எங்கும் இருந்த உயர்ந்த மலைகள் எல்லாம் நீரில் மூழ்கின.
நிலத்தில் ஊர்வன, பறவைகள், கால்நடைகள், காட்டு விலங்குகள், நிலத்தில் தவழ்வன, மனிதர் அனைவர் ஆகிய சதையுள்ள உயிரினங்கள் அனைத்தும் மாண்டன.

11. எத்தனை நாள்களாக மண்ணுலகில் வெள்ளம் பாய்ந்தது?

நூறு நாள்கள்
நாற்பது இரவும் நாற்பது பகலும்
நாற்பது நாள்கள்
நூற்றைம்பது நாள்கள்
நாற்பது இரவுகள்

12. மண்ணுலகில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது நோவாவிற்கு வயது என்ன?

நூறு
இருநூறு
நானூறு
ஐநூறு
அறுநூறு

13. கோடிட்ட இடத்தை நிரப்புக:

நோவாவிற்கு -- -- -- -- -- -- -, -- -- -- -- -- -- -, -- -- -- -- -- -- -- -- -- - என்னும் மூன்று புதல்வர் பிறந்தனர்

சேம்
காம்
எப்பேத்து
ஆபேல்
காயின்

14. நோவா காலத்து வெள்ளப்பெருக்கைப் பற்றிய குறிப்பு மேலும் எங்கு உள்ளது?

மத்தேயு 24:37-39
லூக்கா 17:26-27
1பேதுரு 3:20
2 பேதுரு 2:5
2 பேதுரு 3:6

15. பேழைக்குள் யார் யார் இருந்தனர்?

நோவா
நோவாவின் மனைவி
நோவாவின் மூன்று புதல்வர்கள்
புதல்வர் மூவரின் மனைவியர்
நோவாவின் பெற்றோர்