மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 38
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 3, 4
முடிவுத் திகதி : 2017-02-28

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. ஆண்டவராகிய கடவுள் உருவாக்கியவற்றுள் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது யார்?

ஆதாம்
ஏவாள்
பாம்பு
பறவைகள்
விலங்குகள்

2. கடவுள் பெண்ணிடம் கூறியது என்ன?

தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை உண்ணலாம்.
தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது.
அதைத் தொடவும் கூடாது
மீறினால் நீங்கள் சாவீர்கள்
நீங்கள் வாழ்வீர்கள்

3. பாம்பு பெண்ணிடம் கூறியது என்ன ?

ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்
நீங்கள் சாகவே மாட்டீர்கள்
ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும்.
நீங்கள் கடவுளைப்போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்.
நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்

4. கனியை உண்டபின் நடந்தது என்ன?

அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன.
இருவரும் ஆடையின்றி இருந்தனர்
அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர்.
அவர்கள் வெட்கப்படவில்லை
அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்

5. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„நீ -- -- -- -- -- -- -- -- - இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்“

உணவாய்
மண்ணாய்
தண்ணீராய்
விலங்காய்
கனியாய்

6. கனியை உண்டபின் கடவுள் ஆதாமை கேட்டது என்ன?

நீ ஏன் இவ்வாறு செய்தாய்
கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?
நீ எங்கே இருக்கிறாய்?
நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்?
நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?

7. கோடிட்ட இடத்தை நிரப்புக:

„-- -- -- -- -- -- -- -- -- என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்.“

ஆண்டவர்
ஏவாள்
ஆதாம்
பாம்பு
மனிதன்

8. கடவுள் பெண்ணுக்கு அளித்த தீர்ப்பு என்ன?

உன் மகப்பேற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்.
வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய்
உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்
அவனோ உன்னை ஆள்வான்
நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்

9. கடவுள் பாம்புக்கு அளித்த தீர்ப்பு என்ன?

நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டு விலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய்
உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய்
உனக்கும் பெண்ணுக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன்
அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்
நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்

10. கடவுள் மனிதனுக்கு அளித்த தீர்ப்பு என்ன?

உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது.
உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய்
முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும்
வயல்வெளிப் பயிர்களை நீ உண்பாய்
நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய்.

11. யார் பெண்ணுக்கு „ஏவாள்“ என்று பெயரிட்டார்?

கடவுள்
ஆதாம்
மரியா
காயின்
ஆபேல்

12. முதல் பெற்றோரின் பிள்ளைகள் யார்?

ஆதாம்
காயின்
ஏவாள்
சேத்து
ஆபேல்

13. ஆபேல் – சிறு குறிப்பு வரைக

ஆபேல் ஆடு மேய்ப்பவன்
தன் மந்தையிலிருந்து கொழுத்த தலையீறுகளை ஆண்டவருக்கு காணிக்கையாக கொடுத்தான்.
நிலத்தைப் பண்படுத்துபவன்.
ஆண்டவர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் கனிவுடன் கண்ணோக்கினார்.
தன் சகோதரன் காயினால் கொல்லப்பட்டான்

14. ஆண்டவர் காயினிடம் சொன்னது என்ன?

நீ ஏன் சினமுற்றிருக்கிறாய்?
உன் முகம் வாடி இருப்பது ஏன்?
நீ நல்லது செய்தால் உயர்வடைவாய் அல்லவா?
நீ நல்லது செய்யாவிட்டால், பாவம் உன்மேல் வேட்கை கொண்டு உன் வாயிலில் படுத்திருக்கும்
நீ அதை அடக்கி ஆளவேண்டும்

15. காயினின் வழிமரபினர் யாவர்?

ஏனோக்
ஈராது
மெகுயாவேல்
மெத்துசாவேல்
இலாமேக்கு