மாதாந்த விவிலிய அறிவுத்தேடல் போட்டி
போட்டி தொடர் இலக்கம் - 37
வேதாகமப் பகுதி : தொடக்கநூல் 1, 2
முடிவுத் திகதி : 2017-01-31

(சில வினாக்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள் சரியானவை, சரியான விடைகள் அனைத்தும் தெரிவு செய்யப்பட வேண்டும்)


1. படைப்பின் தொடக்கத்தில் மண்ணுலகு எப்படி இருந்தது?

வயல்வெளியின் எவ்விதச் செடியும் முளைத்திருக்கவில்லை
உருவற்று வெறுமையாக இருந்தது
மண்ணைப் பண்படுத்த மானிடர் எவரும் இருக்கவில்லை
நிலவெளியின் எவ்விதப் புதரும் தோன்றியிருக்கவில்லை
இன்னும் மழை பெய்க்கவில்லை

2. கடவுள் பேசிய முதல் சொல் எது?

வானம் தோன்றுக
உலர்ந்த தரை தோன்றுக
தண்ணீர் தோன்றுக
ஒளி தோன்றுக
இருள் தோன்றுக

3. ஐந்தாம் நாள் கடவுள் தண்ணீரின் வழியாக படைத்தது யாவை?

விலங்குகள்
புற்பூண்டுகள்
நீரில் நீந்திவாழும் உயிரினங்கள்
பறவைகள்
பாம்புகள்

4. கோடிட்ட இடத்தை நிரப்புக
„மானிடரை நம் ----------------, நம் ------------------- உண்டாக்குவோம்“

உருவிலும்
ஒளியிலும்
சாயலிலும்
இரவிலும்
முகத்திலும்

5. படைப்பு நிகழ்வு கீழ்க்கண்டவற்றுள் எங்கே உள்ளது?

தொடக்கநூல் 3:1-20
தொடக்கநூல் 2:1-4
தொடக்கநூல் 1:1-31
தொடக்கநூல் 2:5-24
தொடக்கநூல் 4:5-20

6. கடவுள் மனிதனுக்கு ஆசிவழங்கிக் கூறியது என்ன?

பலுகிப் பெருகி மண்ணுலகை நிரப்புங்கள்
அதை உங்கள் ஆற்றலுக்கு உட்படுத்துங்கள்
கடல் மீன்கள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் ஆளுங்கள்.
மண்ணுலகெங்கும் உள்ள விதை தரும் செடிகள், பழமரங்கள், அனைத்தையும் உங்களுக்கு நான் கொடுத்துள்ளேன்; இவை உங்களுக்கு உணவாகட்டும்
எல்லாக் காட்டுவிலங்குகள், வானத்துப் பறவைகள், நிலத்தில் ஊர்வன ஆகிய அனைத்து உயிரினங்களுக்கும் பசுமையான செடிகள் அனைத்தையும் நான் உணவாகத் தந்துள்ளேன்.

7. ஏழாம் நாளில் கடவுள் செய்தது என்ன?

கடவுள் தாம் செய்த வேலையை ஏழாம் நாளில் முடித்திருந்தார்.
ஏழாம் நாளுக்கு ஆசி வழங்கி, அதைப் புனிதப்படுத்தினார்.
மானிடரைப் படைத்தார்
ஒளியைப் படைத்தார்
ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார்


8. கடவுள் மனிதனை எப்படிப் படைத்தார்?

கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கினார்
அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்
கடவுள் தம் உருவில் மானிடரைப் படைத்தார்
ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்
கடவுள் சாத்தானைப் படைத்தார்

9. ஏதேன் தோட்டத்தில் பாய்ந்த ஆறுகள் யாவை?

காவேரி
பீசோன்
கீகோன்
திக்ரீசு
யூப்பிரத்தீசு

10. கோடிட்ட இடத்தை நிரப்புக
„இதோ! இவளே என் எலும்பின் --------------- சதையின் ------------------ ஆனவள்“

கண்ணும்
எலும்பும்
காதும்
சதையும்
காலும்

11. கடவுள் பெண்ணை எப்படி படைத்தார்?

கடவுள், „மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்“, என்றார்.
கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்தார்
அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார்.
எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கினார்
கடவுள் மண்ணால் பெண்ணை உருவாக்கினார்

12. முதன்முதலில் பெண்ணைப் பார்த்தவுடன் மனிதன் சொன்னது என்ன?

இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்
இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று
அவனுக்கு தகுந்த துணையை உருவாக்குவேன்
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்

13. கடவுள் ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்கு கட்டளையிட்டு சொன்னது என்ன?

தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.
ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே
கால்நடைகள், ஊர்வன, காட்டுவிலங்குகள் ஆகியவற்றை அவ்வவற்றின் இனத்தின்படி நிலம் தோற்றுவிப்பதாக
ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்
பலுகிப் பெருகிக் கடல் நீரை நிரப்புங்கள்

14. கடவுள் எதற்காக மனிதனைப் படைத்தார்?

அனைவரையும் கொல்ல
படைப்புகளை பண்படுத்த
படைப்புகளை பாதுகாக்க
பலுகிப் பெருக
படைப்புகளை அழிக்க

15. கணவன் மனைவி உறவுப் பற்றி கூறும் வசனங்கள் எவை?

கடவுள் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்.
கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான்
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று
இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்