1. கோடிட்ட இடத்தை நிரப்புக: நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிந்துள்ள நீங்கள் ..............., ............... இருக்கமுடியாது.
2. „என் அன்பார்ந்த மைந்தர் இவரே.“ –இவ்வசனம் இடம்பெற்றுள்ள பகுதி எது?
3. கோடிட்ட இடத்தை நிரப்புக: „நம் ஆண்டவரின் பொறுமையை -- -- -- -- -- - எனக் கருதுங்கள்.“
4. இறைவாக்கு – சிறுவிளக்கம் தருக.
5. ஆண்டவரின் நீதி எத்தகையது?
6. பிலயாம் – சிறுவிளக்கம் தருக?
7. இயேசு கிறிஸ்துவைப்பற்றி அறிந்தும் மீண்டும் தீயவழியில் செல்பவர்கள் பற்றி பேதுரு என்ன கூறுகிறார்?
8. ஆண்டவரின் வருகை எப்படியிருக்கும்?
9. போலி இறைவாக்கினர்கள் பற்றி பேதுரு கூறுவது என்ன?
10. ஆண்டவரின் வருகை விவிலியத்தில் எங்கே இடம்பெற்றுள்ளது?
11. „புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும்“ – இவ்வசனம் எங்கே இடம்பெற்றுள்ளது?
12. போலிப் போதகர்கள் எப்படிப்பட்டவர்களாக பேதுரு சித்தரிக்கிறார்?
13. கிறிஸ்துவால் அழைக்கப்பட்ட நமக்கு இருக்க வேண்டிய பண்புகள் யாவை?
14. கோடிட்ட இடத்தை நிரப்புக: இயேசு கிறிஸ்துவின் பணியாளனும் திருத்தூதனுமான ............................... எழுதுவது.
15. ஆண்டவரின் வருகையின் பொருட்டு நீங்கள் செய்யவேண்டியது என்ன?